Latest Updates
-
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்
இந்த வாரம் ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்பெஷல் ரெசிபியான கோங்குரா சிக்கன் ரெசிபியை முயற்சி செய்யுங்கள்.
இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் சிக்கன் எடுக்க போகிறீர்களா? இந்த வாரம் ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்பெஷல் ரெசிபியான கோங்குரா சிக்கன் ரெசிபியை முயற்சி செய்யுங்கள். இந்த கோங்குரா சிக்கன் சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். கோங்குரா என்பது புளிச்சக்கீரை. புளிச்சக்கீரை சற்று புளிப்பாக இருப்பதால், இந்த சிக்கன் மசாலா சற்று புளிப்பாக சூப்பராக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4 (கீறியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு...
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* சோம்பு - 1 டீஸ்பூன்
கோங்குரா மசாலாவிற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* கோங்குரா கீரை/புளிச்சக்கீரை - 2 கப் (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள வெந்தயம், சோம்பு, மல்லி, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து 3-ஜ நிமிடம் மிதமான தீயில் வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பின் கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 1/4 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் கோங்குரா கீரையை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி, 3-4 நிமிடம் மசாலாவில் கோங்குரா கீரையை மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* கீரை நன்கு வெந்ததும், அதை குக்கரில் உள்ள சிக்கனுடன் சேர்த்து, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
