Just In
- 14 min ago
குழந்தைகளுக்கான அழகான காலணிகளை 76% அதிரடி தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்...!
- 48 min ago
ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?
- 1 hr ago
இந்த உணவுகள் உங்களுக்கு அருமையான மூடை செட் பண்ணி கொடுக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
- 1 hr ago
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு
Don't Miss
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
- Movies
மாமனிதன் கைப்பற்றிய 3 சர்வதேச விருதுகள்.. சிறந்த நடிகராக தேர்வான விஜய் சேதுபதி!
- News
பீகார்: தேஜஸ்வி யாதவுடன் இணைந்து ஆளுநரை சந்தித்தார் நிதிஷ்குமார்! புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார்!
- Automobiles
விமானத்தின் டாய்லெட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைஞ்சி இருக்கா!! ஒவ்வொன்றையும் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்!
- Technology
திடீர் விலைக்குறைப்பு.. அடிச்சு பிடிச்சு விற்பனையாகும் 6000mAh Samsung போன்!
- Finance
ஒருவர் எவ்வளவு தங்கம் வாங்கலாம்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..!!
- Education
ஃபர்ஸ்ட்டில் இருக்கும் கல்வி நிறுவனம் செய்த சாதனை தெரியம்?
- Sports
திடீரென பயணத்தை ரத்து செய்த தோனி??.. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஏமாற்றம்.. காரணம் என்ன?
ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி
இந்த வாரம் உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் இந்த வாரம் ஒரு ஆந்திரா ரெசிபியை முயற்சி செய்யுங்கள். அது தான் ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி. இது சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். அதோடு, இந்த ரெசிபியை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்தால், அவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* முருங்கைக்காய் - 2
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 6
* கிராம்பு - 5
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் பவுடர்/தேங்காய் விழுது - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 4 பல் (பேஸ்ட் செய்து கொள்ளவும்)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* பெரிய வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
* இஞ்சி - 1 எலுமிச்சை அளவு
* பூண்டு - 12 பல்
* பட்டை - 1 துண்டு
* கொத்தமல்லி - 1/4 கப்
* புதினா - 1/4 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை மஞ்சள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சிக்கனுடன் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி சூடானதும், கிராம்பு சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்கி, முருங்காய் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாயை இரண்டாக கீறி போட்டு 2 நிமிடம் வதக்கிய பின், அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிவது போன்று தெரியும் போது, அதில் சிக்கனை சேர்த்து, சிறிது உப்பைத் தூவி நிறம் மாறும் வரை சிக்கனை நன்கு வதக்க வேண்டும்.
* பின் மூடி வைத்து குறைவான தீயில் 5-8 நிமிடம் சிக்கனை நீர் விடும் வரை வேக வைக்க வேண்டும். அதன் பின் தக்காளியை சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு கப் சுடுநீரை ஊற்றி, 10-15 நிமிடம் சிக்கன் நன்கு வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் தேங்காய் பவுடர், மல்லி தூள், பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: gethascooking