Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பீன்ஸை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் செஞ்சு பாருங்க... வீட்ல பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...!
Andhra Style Beans Poriyal Recipe in Tamil: பீன்ஸ் பலருக்கும் பிடிக்காத காய்கறிகளில் ஒன்றாகும், குறிப்பாக குழந்தைகள் பீன்ஸ் பொரியல் என்றால் தலைதெறிக்க ஓடுவார்கள். ஆனால் பீன்ஸில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே அவற்றை சாப்பிட வேண்டியது அவசியம். இந்த பிரச்சினைகளையும் சமாளிக்க ஒரே வழி பீன்ஸை சுவையாக சமைப்பதுதுதான்.
பீன்ஸை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சமைத்துக் கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீன்ஸை பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் ஆந்திரா ஸ்டைலில் சுவையான பீன்ஸ் பொரியலை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு - ½ டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- வெங்காயம் - 1
- பூண்டு - 4
- எள் விதைகள் - ½ டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- பீன்ஸ் - 200 கிராம்
- உப்பு - தேவையான அளவு
- வறுத்த வேர்க்கடலை - 4 டீ ஸ்பூன
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- தேங்காய் - ¼ மூடி
- கருவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- முதலில் பீன்ஸை சுத்தமாக கழுவி பொரியலுக்கு தேவையான அளவில்
நறுக்கி கொள்ளவும்.
- வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- அதன் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் சுத்தமாக தண்ணீரில்
கழுவி கொள்ளவும்.
- பின் வெங்காயத்தை பொரியலுக்கு ஏற்ப நறுக்கி கொள்ளவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து
மிதமாக வறுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைக்கவும்.
- அதே வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- பின் கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும்.
- அதில் கடலைப் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக
வறுக்கவும்.
- பின் அதில் வெங்காயம் மற்றும் எள் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை
வதக்கவும்.
- அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின் அதனுடன் நறுக்கிய பீன்ஸ் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் 5
நிமிடங்களுக்கு வதக்கவும்.
- அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பீன்ஸை
வேக விடவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து ஆற வைத்த வேர்க்கடலை மற்றும்
தேங்காய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
- அதை பீன்ஸ் பொரியல் உடன் சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கினால்
சுவையான ஆந்திரா ஸ்டைல் பீன்ஸ் பொரியல் ரெடி!



Click it and Unblock the Notifications