Latest Updates
-
சங்கரா மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஹிமாலயன் வயகரா என்று அழைக்கப்படும் இந்த காளானின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா மயக்கமே வந்துரும்... -
சிம்ம ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 2 நாட்கள் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
1 கப் முருங்கைக்கீரையும், 1/2 கப் பொட்டுக்கடலையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 04, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் உதயமாகும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது! -
சனிபகவானின் வக்ர இயக்கம் முடிவுக்கு வருவதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/2 கப் ரவை இருந்தா போதும்.. தீபாவளிக்கு சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.. என்னன்னு பாருங்க.. -
Skin Care: முகப்பரு இல்லாத கண்ணாடி மாதிரி சருமம் வேண்டுமா? அப்ப இந்த தானியங்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க -
தீபாவளி அன்று பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப தக்காளி வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
3 ஸ்பூன் வேர்க்கடலை இருந்தா பீர்க்கங்காயோட சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - தாறுமாறா இருக்கும
Andhra Ridge Gourd Chutney Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலையும், இரவும் பிரதான உணவாக இருப்பது இட்லி அல்லது தோசைதான். தினமும் இட்லி, தோசை செய்வது ஈஸியாக இருந்தாலும் அதற்கு ஏற்ற சரியான சைடிஷ் செய்வது என்பது எளிதான காரியமல்ல. இந்த பிரச்சினையை தீர்க்கத்தான் தொடர்ந்து பல்வேறு சட்னி ரெசிபிக்கள் நமது தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இட்லி, தோசைக்கான புதிய மற்றும் சுவையான சைடிஷாக இப்போது நாம் பார்க்கப்போவது ஆந்திரா ஸ்டைல் பீர்க்கங்காய் வேர்க்கடலை சட்னியின் ரெசிபிதான். பொதுவாக காய்கறிகளை வைத்து சாதத்திற்குத்தான் சட்னி செய்வோம். ஆனால் இந்த பீர்க்கங்காய் வேர்க்கடலை சட்னி சாதத்திற்கு மட்டுமின்றி இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் சூப்பரான சைடிஷாக இருக்கும். இந்த பீர்க்கங்காய் சட்னி சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட. குறிப்பாக எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.
உங்களுக்கு இந்த சுவையான ஆந்திரா ஸ்டைல் பீர்க்கங்காய் வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சட்னிக்கு:
- நிலக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
- பூண்டு - 5 பல்
- பச்சை மிளகாய் - 4
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- வெங்காயம் - 1
- தக்காளி - 2 நறுக்கியது
- பீர்க்கங்காய் - ¼ கிலோ (தோல் சீவி, நறுக்கியது)
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- வெல்லம் - ½ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
- நல்லெண்ணெய் - 3 டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- நல்லெண்ணெய் - 1 டீ ஸ்பூன்
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- கருவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- பூண்டு மற்றும் வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து வெங்காயத்தின் கருப்பு நிற பூஞ்சை போக நன்கு கழுவி, வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- பச்சை மிளகாயை கழுவி காம்புகளை நீக்கி வைக்கவும். கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை மண் இல்லாமல் சுத்தமாக அலசி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- நன்கு பழுத்த தக்காளியை சுத்தமாக கழுவி அதன் பச்சை நிற காம்பு பகுதியை நீக்கி விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- பீர்க்கங்காயை கழுவி விட்டு காம்பை நீக்கி, பின் தோல் பகுதியை
சீவி சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- வாணலி அல்லது அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும்
எண்ணெய் சேர்க்கவும். பின் அதில் நிலக்கடலை, கடலைப்பருப்பு, தோல்
உரித்து வைத்த பூண்டு சேர்க்கவும்.
- அதனுடன் பச்சை மிளகாய், புளி மற்றும் கருவேப்பிலை சேர்த்து கிளறி மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கி ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆற விடவும்.
- மீண்டும் அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய விடவும். அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, மற்றும் பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பாத்திரத்தை மூடி காய்கறிகள் நன்கு வேகும் வரை 5 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும்.
- கடைசியாக கொத்தமல்லி இலைகள் மற்றும் வெல்லம் சேர்த்து சில நொடிகள் வதக்கி நன்கு ஆறவிடவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் வறுத்து வைத்த நிலக்கடலை கலவையை சேர்த்து கொரகொரப்பான பொடியாக அரைக்கவும். பின் வேக வைத்த காய்கறிக் கலவை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக இருக்கும்படி அரைத்து எடுத்து கொள்ளவும்.
- சிறிய வாணலி அல்லது தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும். பின் கடுகு சேர்த்து வெடித்து சத்தம் அடங்கும் வரை பொரிய விடவும்.
- அதில் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்த சட்னி உடன் சேர்த்து கிளறினால் சுவையான பீர்க்கங்காய் சட்னி ரெடி!
- இது இட்லி, தோசை, மற்றும் சப்பாத்தி உடன் சேர்த்து சாப்பிடலாம். இதை சாதத்தோடு சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
