Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
Andhra Pudina Thokku Recipe in Tamil: தினமும் சாம்பார், புளிக்குழம்பு வைத்து போரடித்து விட்டதா? உங்கள் வீட்டில் புதினா உள்ளதா? அப்படியானால் புதினாவை வைத்து ஆந்திரா ஸ்டைலில் ஒரு அட்டகாசமான தொக்கு செய்யுங்கள். இந்த புதினா தொக்கு சப்பாத்தி, இட்லி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த புதினா தொக்கை செய்வது மிகவும் சுலபம். பேச்சுலர்கள் கூட இந்த புதினா தொக்கு செய்யலாம். இந்த ஆந்திரா புதினா தொக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும்.

பல மருத்துவ குணங்களைக் கொண்ட கொண்ட புதினாவை இந்த மாதிரி செய்து கொடுக்கும் போது பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். புதினாவை அடிக்கடி உணவில் சேர்க்கும் போது இதயம் ஆரோக்கியமாக இருக்கும், செரிமானம் மேம்படும், எடை இழப்பிற்கு உதவும், எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும், மேலும் சரும ஆரோக்கியம் மேம்படும்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் புதினா தொக்கு எப்படி தொக்கு செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் புதினா தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் புதினா
- சிறிய துண்டு புளி
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் மல்லி விதை
- 1/2 ஸ்பூன் வெந்தயம்
- 1 ஸ்பூன் எள்
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 4 பல் பூண்டு
- 10 சின்ன வெங்காயம்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு வெல்லம்
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 3/4 கப் தண்ணீர்
தாளிக்க:
- 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், மல்லி மற்றும் எள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அதனுடன் சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் புளி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதனுடன் புதினாவைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- இதய ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றவும்.
- அரை கப் தண்ணீர் மென்மையான விழுதாக அரைத்து ஒரு கடாய்க்குமாற்றவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு சேர்த்து தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- இதை அரைத்த கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- மேலும் 1/4 கப் தண்ணீர், உப்பு, பெருங்காயம் மற்றும் வெல்லம் சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைக்கவும்.
- எண்ணெய் பிரிந்ததும் அடுப்பது அணைத்தால் சுவையான ஆந்திரா ஸ்டைல் புதினா தொக்கு ரெடி!



Click it and Unblock the Notifications
