Latest Updates
-
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
காரசாரமான மற்றும் கலர்புல்லான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி ரெசிபில்.... இந்த சண்டே இதை செஞ்சு அசத்துங்க...!
Andhra Chicken Gravy Recipe in Tamil: ஆந்திரா என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது காரசாரமான உணவுகள்தான். பொதுவாக ஆந்திராவின் மிகவும் பிரபலமான உணவென்றால் ஹைதராபாத் பிரியாணிதான். ஆனால் ஹைதராபாத் பிரியாணி மட்டுமின்றி ஆந்திராவில் பல தனித்துவமான அசைவ உணவு வகைகள் உள்ளது. சிக்கனை ஆந்திர மக்கள் பல வழிகளில் சுவையாக சமைக்கிறார்கள்.
ஆந்திரா சிக்கன் குழம்பு என்பது கலர்புல்லான மற்றும் காரசாரமான சிக்கன் குழம்பாகும். இது இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு மட்டுமின்றி சாதத்துக்கு சூப்பராக இருக்கும். இந்த வார ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கமான சிக்கன் கிரேவி செய்யாமல் இந்த ஆந்திரா சிக்கன் கிரேவி செஞ்சா வீட்ல எல்லாரும் அசந்துருவாங்க. இந்த பதிவில் காரசாரமான ஆந்திர சிக்கன் கிரேவியை எப்படி செய்யலாமென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- சிக்கன் - அரை கிலோ
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- சோம்பு - 2 ஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 1 துண்டு
- சீரகம் - 1 ஸ்பூன்
- ஏலக்காய் - 4
- கிராம்பு - 4
- பிரியாணி இலை - 1
- பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிதளவு
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
- உப்பு தேவைக்கேற்ப
- வெண்ணெய் - 2 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு பொடியாக நறுக்கியது
செய்முறை:
- சிக்கனை முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ள
வேண்டும்.
- அதன்பின் சிக்கனில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மசாலாப்பொடிகள்,
இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள்
சிக்கனை ஊறவைக்கவும்.
- சிக்கன் நன்கு ஊறியதும், ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி நன்கு காய
விடவும்.
- எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும்
பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும், அதன்பின் கறிவேப்பிலையை அதில்
போடவும்.
- பின்னர் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் ஊறவைத்த சிக்கனை போட்டு நன்கு
கிளறவும்.
- அதன்பின் ஒரு மூடிபோட்டு அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம்
நன்கு.வேகவைக்கவும்
- சிக்கன் இப்போது நன்கு தண்ணீர் விட்டிருக்கும். இப்போது நன்கு கிளறி
அதில் கரம் மசாலா தூளை சேர்க்கவும் .
- சிக்கன் நன்கு வெந்து கொதி வந்ததும் அதில் வெண்ணெய் மற்றும்
கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு கிளறவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து ருசி பார்த்து இப்போது அடுப்பை
அணைக்கவும்.
- சூடான சுவையான ஆந்திரா சிக்கன் கிரேவி ரெடி... இதை சாதத்துடன்
பரிமாறவும்...!



Click it and Unblock the Notifications
