Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
மழை நேரத்துல இந்த ஆந்திரா சிக்கன் கிரேவி செய்யுங்க.. பூரி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் டக்கரா இருக்கும்...
Andhra Style Chicken Gravy Recipe In Tamil: தற்போது டிட்வா புயல் காரணமாக கனமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து கொண்டிருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் நன்கு காரசாரமாக சமைத்து சாப்பிட்டால் இதமாக இருக்கும். அதுவும் விடுமுறை நாளில் மழை நேரத்தில் நீங்கள் சிக்கன் வாங்கி சமைக்கப் போகிறீர்களா?
அப்படியானால் அந்த சிக்கனைக் கொண்டு வழக்கமாக செய்வது போன்று சிக்கன் கிரேவியை செய்யாமல், ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவியை செய்யுங்கள். இப்படி செய்யும் சிக்கன் கிரேவி பூரி, சப்பாத்தி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 750 கிராம்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை - 1
* தயிர் - 1/2 கப்
வறுத்து அரைப்பதற்கு...
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 5
* பட்டை - 2 துண்டு
* மிளகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
கிரேவி தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சிக்கனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு
பேஸ்ட், 1 எலுமிச்சையின் சாறு மற்றும் தயிர் சேர்த்து நன்கு பிரட்டி,
மூடி வைத்து, 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா,
ஏலக்காய், கிராம்பு, பட்டை, மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும்
மல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து, 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு கிளறி மூடி
வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, மிதமான
தீயில் வைத்து, 10 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். சிக்கன்
வெந்ததும், கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான ஆந்திரா
ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications