Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இட்லி, இடியாப்பத்துக்கு அட்டகாசமா இருக்கும் ஆட்டுக்கால் பாயா... எப்படி செய்யணும் தெரியுமா?
Aatu Kaal Paya Recipe In Tamil: விடுமுறை நாட்கள் வந்தாலே அனைவரும் தங்கள் வீடுகளில் பலவிதமான அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவோம். அதுவும் காலை முதல் இரவு வரை மூன்று வேளையும் நன்கு அசைவ உணவுகளை சாப்பிட்டால் தான் அந்த விடுமுறையை நன்றாக கழித்த சந்தோஷம் இருக்கும்.
நிறைய பேர் விடுமுறை நாட்களில் இதுவரை முயற்சிக்காத ஏதாவது ஒரு ரெசிபியை முயற்சிக்க நினைப்பார்கள். நீங்களும் அப்படி தானா? இதுவரை உங்கள் வீட்டில் ஆட்டுக்கால் பாயாவை செய்துள்ளீர்களா? இல்லையென்றால் இன்று செய்யுங்கள். இந்த ஆட்டுக்கால் பாயா இட்லி, இடியாப்பம் போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு ஆட்டுக்கால் பாயாலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆட்டுக்கால் பாயா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஆட்டுக்கால் - 1 செட்
* சின்ன வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தேங்காய் பால் - 1 கப்
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஆட்டுக்காலை நீரில் ஒரு முறைக்கு இரண்டு முறை மஞ்சள்
தூள் சேர்த்து நன்கு அலசிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பூண்டு, கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து தக்காளி. பச்சை மிளகாய் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு ஆட்டுக்காலை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* பின்பு மிளகாய் தூள், சீரக தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, மஞ்சள்
தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, 2 கப்
நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் குக்கரை மூடி 1 விசில் வந்ததும், குறைவான தீயில் வைத்து 30-40
நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்துவிட்டு, விசில்
போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். (ஒருவேளை ஆட்டுக்கால் வேகாமல்
இருப்பதை உணர்ந்தால், மீண்டும் அடுப்பில் வைத்து, 10 நிமிடம் குறைவான
தீயில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.)
* இறுதியாக அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறி, ஒரு கொதி வந்ததும்,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ஆட்டுக்கால் பாயா தயார்.
Image Courtesy: kalaiscookingrecipes



Click it and Unblock the Notifications