Latest Updates
-
நவம்பர் 02-ல் உருவாகும் கஜகேசரி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
தீபாவளிக்கு பிறகு நடக்கப்போகும் சுக்கிர பெயர்ச்சி இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஐயங்கார் பேக்கரி ஸ்டைல் பிரெட் வெஜ் டோஸ்ட் ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி கேப்பாங்க.. -
வாஸ்து படி உப்பை சமையலறையில் எந்த இடத்தில் வைத்தால் அதிரஷ்டம் தேடிவரும் தெரியுமா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க சுவாரஸ்ய குணத்தை சொல்றோம்.. -
'கடல்களின் ராஜா' என்று அழைக்கப்படும் கடல் எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
உங்க முழங்கை, முழங்கால் கருமையை போக்கணுமா? அப்ப இந்த மாஸ்க்கை வாரத்துக்கு 3 முறை போடுங்க.. -
உருளைக்கிழங்கு வாங்குனா இந்த மாதிரி பஞ்சாபி ஸ்டைலில் வறுவல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
குரு பெயர்ச்சி 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு எப்படி இருக்கப்போகுது-ன்னு தெரியுமா?
சப்பாத்திக்கு உருளைக்கிழங்கோடு காளானை சேர்த்து இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க... வேற லெவலில் இருக்கும்...!
Aalu Mushroom Masala Recipe in Tamil: உருளைக்கிழங்கு பொரியல் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பெரும்பாலான மக்களுக்கு பிடித்த காய்களில் முதலிடத்தில் இருப்பது உருளைக்கிழங்குதான். அனைத்து வகையான சாதத்திற்கும் உருளைக்கிழங்கு பொரியல் சூப்பரான சைடிஷாக இருக்கும். உருளைக்கிழங்கை அனைத்து வகையான காய்கறிகளுடனும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
அந்த வகையில் உருளைக்கிழங்கை காளானுடன் சேர்த்து சமைப்பது சைடிஷ் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக இருக்கும். இந்த காளான் உருளைக்கிழங்கு மசாலா சாதத்திற்கு மட்டுமின்றி இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். இந்த பதிவில் சுவையான காளான் உருளைக்கிழங்கு மசாலாவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- காளான் - 200 கிராம்
- உருளைக்கிழங்கு - 2
- வெங்காயம் - 2
- தக்காளி - 3
- பச்சை மிளகாய் - 2
- தயிர் - 2 ஸ்பூன்
- பூண்டு - 5 பல்
- இஞ்சி - 1 துண்டு
- சீரகம் - 1 ஸ்பூன்
- வர மிளகாய் - 3
- பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
- மஞ்சள் - 1/2 ஸ்பூன்
- மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய்த் தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான லவு
- எண்ணெய் - தேவையான அளவு
- தண்ணீர் - 1/2 கப்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை:
- உருளைக் கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கடாயில் போட்டு, நீர் வெளியேறும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- வெங்கயத்தை நான்கு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் 3 -4 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- வெங்காயத்தில் ஆறியவுடன் அதை மிக்ஸி ஜாருக்கு மாற்றிக் கொள்ளவும். அதோடு பூண்டு ,சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய விட்டு அதில் பெருங்காயத் தூள் போடவும்.
- பின் நறுக்கிய இஞ்சி போட்டு வதக்கவும். பின்னர் அரைத்த வெங்காய விழுதைக் கொட்டி அடுப்பை மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
- பச்சை வாசனை போனதும், மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடவும். தீயை மிதமான அளவிலேயே வைத்து சிறிது நேரத்திற்குக் கொதிக்க விடவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், தயிர் ஆகியவற்றை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றவும். இதை 3-4 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- கிரேவி நன்கு கொதித்ததும் நறுக்கிய நறுக்கிய காளான் துண்டுகளைச் சேர்க்கவும். பின் வதக்கிய உருளைக் கிழங்குகளைச் சேர்க்கவும். பின் மீண்டும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி இலையை மேலே தூவவும்.
- அட்டகாசமான மஷ்ரூம் உருளைக்கிழங்கு மசாலா ரெடி. இது சப்பாத்தி, தோசை போன்றவற்றுக்கு சூப்பரான காம்பினேஷனாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
