Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Aadi Pooram Special Aval Paal Pongal Recipe In Tamil: ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரமானது மிகவும் விஷேசமான நாள். இந்நாளில் தான் ஆண்டாள் பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆடிப்பூரம் நாளில் தான் அம்மன் கோவில்களில் அம்பாளுக்கு வளைகாப்பு நடத்துவது வழக்கம். அதோடு பெண்கள் இந்நாளில் வீட்டில் பூஜை செய்து, அம்மனுக்கு பிரசாதமாக பாயாசம், பொங்கல் போன்றவற்றை செய்து படைத்து வழிபாடு செய்வார்கள். நீங்கள் ஆடிப்பூரம் ஸ்பெஷலாக அம்மனுக்கு சிம்பிளான அதே சமயம் சுவையான ஒரு ஸ்வீட் செய்ய நினைத்தால் அவல் பால் பொங்கல் செய்யுங்கள். இந்த பொங்கல் செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு இந்த அவல் பால் பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் பால் பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
* தேங்காய் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - சிறிது
* உலர் திராட்சை - சிறிது
* அவல் - 1 கப்
* காய்ச்சிய பால் - 1/2 லிட்டர்
* சர்க்கரை - 3/4 கப்
* ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய தேங்காயை சேர்த்து நிறம் மாற
நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் முந்திரியை துண்டுகளாக்கி சேர்த்து வறுத்து, ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அவலை சேர்த்து
நிறம் மாற வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் காய்ச்சி ஆற வைத்த 1/2 லிட்டர் பாலை ஊற்றி கிளறி, அவலை
நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.
* அவல் நன்கு வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பால் ஓரளவு வற்றி பொங்கல் போன்று வந்ததும், அதில் ஏலக்காய் தூள்,
உப்பு மற்றும் பச்சை கற்பூரத்தை சேர்த்து கலந்து விட வேண்டும்.
* இறுதியாக அதில் வறுத்த தேங்காய் மற்றும் முந்திரியை சேர்த்து கிளறி
இறக்கினால், சுவையான அவல் பால் பொங்கல் தயார்.



Click it and Unblock the Notifications
