Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
Aadi Perukku Special Red Aval Kesari Recipe In Tamil: ஆடிப்பெருக்கு நாளில் பூஜை செய்யும் போது ஏதாவது இனிப்பு செய்து படைத்து வழிபடுவது வழக்கம். பொதுவாக இப்படியான சுப தினங்களில் பெரும்பாலான வீடுகளில் கேசரி, பாயாசம் போன்றவற்றை தான் செய்து படைத்து வழிபடுவார்கள். உங்கள் வீட்டிலும் இப்படி தான் செய்வீர்களா?

அதுவும் கேசரி என்றால் ஒரே ரவா கேசரியைத் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சிவப்பு அவலைக் கொண்டு கேசரி செய்யுங்கள். இந்த கேசரி பார்க்க ரவை போன்று இருந்தாலும், பிரமாதமான சுவையில் இருக்கும். முக்கியமாக இது 5 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு இந்த சிவப்பு அவல் கேசரியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிவப்பு அவல் கேசரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிவப்பு அவல் - 150 கிராம்
* தண்ணீர் - 1/2 லிட்டர்
* சர்க்கரை - 150 கிராம்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 1 கையளவு
* உலர் திராட்சை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 150 கிராம் சிவப்பு
அவலை சேர்த்து நல்ல மணம் வந்து, மொறுமொறுவென்று மாறும் வரை வறுத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி
செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 லிட்டர் நீரை
ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொடியை
சேர்த்து கட்டிகளின்றி நன்கு கலந்து விட வேண்டும்.
* நீரானது வற்றியதும், சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்ய வேண்டும். பின்
அதில் உலர் திராட்சையை சேர்த்து ப்ரை செய்து இறக்க வேண்டும்.
* பின்னர் ப்ரை செய்த முந்திரி, திராட்சையை வெந்து கொண்டிருக்கும்
கேசரியுடன் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான மற்றும் சத்தான
சிவப்பு அவல் கேசரி தயார்.



Click it and Unblock the Notifications
