Latest Updates
-
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
ராகு-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்க சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போறாங்களாம்
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும்
Aadi Perukku Special Paasiparuppu Payasam Recipe in Tamil: தமிழர்களின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஆடிப் பெருக்கு நாளை கொண்டாடப்பட உள்ளது. ஆடிப் பெருக்கு அன்று கடவுளை வழிபட்டு விஷேச உணவு தயாரிப்பது தமிழர்களின் பாரம்பரியமாகும். இந்த ஆடிப்பெருக்கு நாளில் பொதுவாக மக்கள் வீட்டில் வடை பாயாசத்துடன் விருந்து சமைப்பார்கள். இந்த நாளில் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?

இந்த ஆடிப் பெருக்குக்கு உங்கள் வீட்டில் பாயாசம் செய்வதாக இருந்தால், வழக்கமாக செய்யும் சேமியா அல்லது பால் பாயாசம் செய்யாமல், பாசிப் பருப்பை வைத்து அருமையான பாயாசத்தை செய்யுங்கள். இந்த பாயாசம் வழக்கமான பாயாசம் போல அல்லாமல் வித்தியாசமான சுவையில் அதேசமயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
உங்களுக்கு இந்த ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப் பருப்பு பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப் பருப்பு பாயாச ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பாசிப்பருப்பு - 1/2 கப்
- தண்ணீர் - 1 கப்
- வெல்லம் - 3/4 கப்
- ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
- கெட்டியான தேங்காய்ப்பால் - 1/2 கப்
- நீர்த்த தேங்காய்ப்பால் - 1 கப்
- நெய் - 1 டீஸ்பூன்
- முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
- உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
செய்முறை:
- பாசிப்பருப்பைத் தண்ணீருடன் சேர்த்து குக்கரில் 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
- விசில் அடங்கியதும் வெந்த பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும்.
- தேங்காயை துருவி கெட்டியான தேங்காய்ப்பால் மற்றும் நீர்த்த தேங்காய்ப்பாலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- சிறிது தண்ணீருடன் வெல்லத்தைக் கரைத்து கொதிக்கவிட்டு, அதிலுள்ள அசுத்தங்களை நீக்கி அந்தப் பாகை வடிகட்டவும்.
- வடிகட்டிய வெல்லப்பாகு மற்றும் ஏலக்காய் பொடியை மசித்து வைத்த பருப்புடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இதனுடன் நீர்த்த தேங்காய்ப்பாலைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- கலவையை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். மிதமான தீயில் 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- இப்போது மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து ஆறவிடவும்.
- கொதிக்கும் பாயசத்தில் கெட்டியான தேங்காய்ப்பாலைச் சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும்.
- வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்க்கவும்.
- இறுதியாக துருவிய தேங்காயைத் தூவி, சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறவும்.



Click it and Unblock the Notifications