Latest Updates
-
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்..
Parangikkai Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தியை அடிக்கடி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு சைடு டிஷ் என்றால் எப்போதும் உருளைக்கிழங்கு, பன்னீர், காளான் அல்லது வெஜிடேபிள் கிரேவியை தான் செய்வீர்களா? சற்று சிம்பிளாக, அதே சமயம் வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் பரங்கிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பரங்கிக்காயைக் கொண்டு கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவிக்கு வெங்காயம், தக்காளி, பூண்டு என எதுவுமே தேவையில்லை. மசாலா பொருட்கள் இருந்தாலே போதும். சட்டென்று செய்துவிடலாம். முக்கியமாக இந்த கிரேவி பேச்சுலர்கள் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு இந்த பரங்கிக்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பரங்கிக்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா கலவைக்கு..
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 4 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* வரமிளகாய் - 2
* பரங்கிக்காய் - 1/4 கிலோ (பொடியாக நறுக்கியது)
* கரைத்து வைத்துள்ள மசாலா
* இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு
எடுத்தது)
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய்
தூள், உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, சிறிது நீரை ஊற்றி கரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
சோம்பு, சீரகம், கடுகு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பிரியாணி இலை, வரமிளகாயை சேர்த்து தாளித்து, நறுக்கிய
பரங்கிக்காயை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 4 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பிறகு அதில் கரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி,
துருவிய இஞ்சியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை சேர்த்து கிளறி,
காயை நன்கு வேக வைக்க வேண்டும்.
* காய் நன்கு வெந்ததும், கரண்டியால் காயை நன்கு மசித்து விட வேண்டும்.
அப்போது கிரேவி மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி
கலந்து, ஒரு கொதி வந்ததும், அத்துடன் மிளகுத் தூள் மற்றும்
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான பரங்கிக்காய் கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications
