Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
ஆடி தேங்காய் பால்
ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு அல்லது ஆடி 18 மிகவும் சிறப்பான நாள். இந்நாளில் மக்கள் பல்வேறு சுவையான உணவுகளை சமைத்து அம்மனுக்கு படைப்பார்கள். அதில் ஒன்று தான் ஆடி பால் என்னும் ஆடி தேங்காய் பால்.
ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம். குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு அல்லது ஆடி 18 மிகவும் சிறப்பான நாள். இந்நாளில் மக்கள் பல்வேறு சுவையான உணவுகளை சமைத்து அம்மனுக்கு படைப்பார்கள். அதில் ஒன்று தான் ஆடி பால் என்னும் ஆடி தேங்காய் பால். நீங்கள் வரவிருக்கும் ஆடி பெருக்கு அன்று ஆடி பால் செய்ய நினைக்கிறீர்களா? ஆனால் அதை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

ஏனெனில் கீழே ஆடி தேங்காய் பால் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய தேங்காய் - 1 கப்
* வெதுவெதுப்பான நீர் - 2 கப்
* வெல்லம் - 1/2 கப்
* நெய் - 3 டீஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
* முந்திரி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காயை போட்டு, ஒரு கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை வடிகட்டி பயன்படுத்தி, தேங்காய் பாலை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு கப் கெட்டியான தேங்காய் பால் கிடைக்கும். இதை ஒன்றாம் பால் என்று கூறுவோம்.
* பின்னர் வடிகட்டியில் உள்ள அரைத்த தேங்காயை மீண்டும் மிக்சர் ஜாரில் போட்டு, அதில் மீதமுள்ள ஒரு கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதையும் வடிகட்டியில் வடிகட்டி, ஒரு கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இரண்டாம் பால் என்று கூறுவோம்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அதில் 1/4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை உருக வைக்க வேண்டும்.
* வெல்லம் நன்கு உருகியதும், அதை இறக்கி, வடிகட்டி பயன்படுத்தி வெல்லப்பாகுவை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த வடிகட்டி வெல்லப்பாகு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து, அதில் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றி 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் ஒன்றாம் தேங்காய் பாலை ஊற்றி அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கிவிட வேண்டும்.
* அடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறிது வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து அதில் ஊற்றி கிளறினால், சுவையான ஆடி பால் அல்லது ஆடி தேங்காய் பால் தயார்.
Image Courtesy: jeyashriskitchen



Click it and Unblock the Notifications