Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆடி முதல் ஞாயிறு இந்த பாயாசத்தை வைச்சு சாமி கும்பிடுங்க..சகல நன்மைகளும் தேடி வரும்..எப்படி செய்யணும் தெரியுமா?
Pottukadalai Payasam Recipe in Tamil: முருகனை வளர்த்த கார்த்திகை பெண்கள் பெயரால் கார்த்திகை நட்சத்திரம் அழைக்கப்படுகிறது. முருகனின் பிறந்த விசாக நட்சத்திரத்தை விட அதி சக்தி வாய்ந்தது இந்த கார்த்திகை நட்சத்திரம். ஒவ்வொரு மாதத்திலும் வரும் கார்த்திகை நட்சத்திர நாளில் தான் கிருத்திகை கொண்டப்படுகிறது. அதிலும் அம்பிகைக்கு உரிய மாதமான ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை இன்னும் சிறப்பு. அம்பிகையும் முருகனையும் ஒரு சேர வணங்கி அனைத்து நலன்களையும் பெறலாம்.
அதே போல் ஆடியில் வரும் ஞாயிற்று கிழமையும் விரதத்தை கடைபிடிக்க ஏற்ற நாளாக இருக்கும். சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாளான ஞாயிற்று கிழமையில் செய்யும் ஆடி வழிபாடு அனைத்து நன்மைகளையும் தரக் கூடியது. ஆடியின் முதல் ஞாயிற்று கிழமையும் கிருத்திகையும் சேர்த்து வருவது மற்றொரு சிறப்பு. இந்த நாளில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம். எந்த காரியத்தை செய்தாலும் முதலில் விநாயகரையும் குலதெய்வதையும் வழிபட்டு துவங்க நன்மை பயக்கும்.

முடிந்த வரை ஆடி முதல் ஞாயிற்று கிழமை குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்தோ அல்லது சாமிக்கு எப்போதும் செய்யும் படையல் வைத்தோ சாமி கும்பிடலாம். முடியாதவர்கள் வீட்டில் பொங்கல் செய்து நம் வீட்டில் குலதெய்வத்தை நினைத்து படைத்து வணக்கலாம். இல்லை என்றால் எளிமையாக பாலில் நாட்டு சர்க்கரை கலந்து சாமிக்கு நெய்வேத்தியம் செய்யலாம். முடியாதவர்கள் சிறிது அவலில் நாட்டு சர்க்கரை மற்றும் பொட்டு கடலை வைத்து வணங்கலாம்.
இந்த முதல் ஞாயிற்று கிழமை நல்ல நாளில் எழுந்து குளித்து விட்டு எளிதான பிரசாதம் செய்து வைத்து முழு முதற்கடவுள் விநாயகர், உங்கள் குலதெய்வ, அம்பிகை மற்றும் முருகனை வணங்கி அனைவரின் ஆசியையும் ஒரு சேர பெற்று நல்வாழ்வை பெறுங்கள்.
ஆடி மாச அமர்க்களமாக பல வகையான உணவுகள் பதார்த்தங்கள் செய்து வழிபடுவோம். அதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. அதனால் பிரசாதம் செய்யும் போது அவர்களுக்கு ஏற்றார் போல மாற்றி மாற்றி செய்தால் நன்றாக இருக்கும். அதே போல் செய்ய எளிதாக இருந்தால் உங்களுக்கும் எளிதாக இருக்கும். சரி வாங்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி பொட்டுக்கடலை பாயாசம் செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- பொட்டுக்கடலை - 1 கப்
- வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - 1 ½ கப் (சுவைக்கு ஏற்ப கூட்டி
குறைத்து கொள்ளவும்)
- நெய் - 2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் - 2
- தேங்காய் - 1 மூடி
- முந்திரி - 5
- திராட்சை - 8
செய்முறை:
- முதலில் பொட்டுக்கடலையை வாணலியில் சேர்த்து வாசம் வரும் வரை
வறுத்து ஆற வைத்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
- அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்து எடுத்து
வைக்கவும்.
- ஏலக்காய் மற்றும் தேங்காயை மிக்ஸியில் சேர்த்து அரைத்து பால்
எடுத்து கொள்ளவும்.
- முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்து
கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மூன்று கப் அளவிற்கு தண்ணீர்
சேர்த்து கொதிக்க விடவும்.
- பின் அரைத்து வைத்த பொட்டுக்கடலை சேர்த்து பச்சை வாசம் போகும்
வரை
கொதிக்க விடவும்.
- அதனுடன் வெல்லத்தை சேர்த்து கரையும் வரை நன்கு கிளறவும்.
- பின் அரைத்து வைத்த தேங்காய் பாலை சேர்க்கவும். தேங்காய் பால்
சேர்க்க விரும்பவில்லை என்றால் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து
கொள்ளலாம்.
- கடைசியாக நெயில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறி
இறக்கினால் பொட்டுக்கடலை பாயாசம் ரெடி!



Click it and Unblock the Notifications