Just In
- 28 min ago
உங்களுக்கு வயசாகாம எப்பவும் இளமையா ஜொலிக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 38 min ago
ராசிப்படி கிருஷ்ணருக்கு எந்த பொருளை படைத்தால், அவரின் முழு அருள் கிடைக்கும் தெரியுமா?
- 58 min ago
உங்கள் மூட்டுகளில் இந்த பிரச்சினை இருக்கா? அப்ப உங்க இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தம்... ஜாக்கிரதை!
- 2 hrs ago
இந்த 5 ராசிக்காரங்க எந்த உறவிலும் கடைசி வர உறுதியா இருக்க மாட்டாங்களாம்... ஏன் தெரியுமா?
Don't Miss
- Finance
ஜூலை மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 13.93%..கொஞ்சம் பெட்டர் தான்!
- Technology
Moto G62 5G ரிவ்யூ- இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா?
- Movies
ரெண்டு பேரில் யார் வேண்டும்.. மகள் இனியாவிடம் சிக்கலின் முடிச்சை கொடுத்த பாக்கியா!
- News
செஸ் ஒலிம்பியாட் செலவு கணக்கை பொதுவில் வைக்கிறோம்.. அதிமுகவுக்கு அமைச்சர் மெய்யநாதன் சவால்!
- Automobiles
எந்த பிரச்சனையும் இல்லை.. நடுவானிலேயே விமானிகள் அசந்து தூங்குவார்கள்... ஆனால் ஒன்று மட்டும் முக்கியம்...
- Sports
இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை எதற்காக தடை.. பல முறை வந்த எச்சரிக்கை.. முழு விவரம் இதோ!
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
ருசியான... ஆடி கும்மாயம்
கும்மாயம் என்பது ஒரு பாரம்பரிய செட்டிநாடு இனிப்பு. இது மிகவும் ஆரோக்கியமான ஒரு ஸ்வீட். இதை பெரும்பாலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் செய்வதுண்டு. மேலும் ஆடிப் பெருக்கு அன்றும் இதை பலர் செய்வதுண்டு. அதோடு இந்த இனிப்பை பெண்கள் பருவமடையும் போதும் செய்து கொடுப்பார்கள். ஏனெனில் இதில் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
இந்த ஆண்டு ஆடிப் பெருக்கு நாளில் கும்மாயம் செய்ய விரும்புகிறீர்களா? கீழே ஆடி கும்மாயம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கும்மாயம் மாவுக்கு...
* உளுத்தம் பருப்பு - 250 கிராம் அல்லது 1 1/4 கப்
* பச்சரிசி - 25 கிராம் அல்லது 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பாசிப் பருப்பு - 25 கிராம் அல்லது 1 1/2 டேபிள் ஸ்பூன்
கும்மாயம் செய்வதற்கு...
* கும்மாயம் மாவு - 1 கப்
* வெல்லம் - 1/2 கப்
* பனை வெல்லம் - 1/2 கப்
* நெய் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் பனை வெல்லத்தை எடுத்து, அதில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை நன்கு கரைய வைத்து இறக்கி, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் பச்சரிசியை சேர்த்து நன்கு வறுத்து, அதையும் தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் பாசிப் பருப்பையும் பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களைப் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கும்மாயம் மாவு தயார்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ஒரு கப் கும்மாயம் மாவை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து தயாரித்து வைத்துள்ள வெல்லப்பாகுவில் வறுத்த மாவை சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாதவாறு நன்கு கிளற வேண்டும். ஒருவேளை கலவை மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீர் சேர்த்து கிளற வேண்டும்.
* பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில், இந்த மாவை ஊற்றி குறைவான தீயில் வைத்து கட்டிகள் சேராதவாறு நன்கு கிளற வேண்டும். அப்படி கிளறும் போது சிறிது நெய்யை அவ்வப்போது ஊற்றி கிளற வேண்டும். முழு நெய்யையும் ஊற்றிவிட வேண்டாம். ஏனெனில் இது அனைத்து நெய்யையும் உறிஞ்சும் திறன் கொண்டது.
* மாவானது நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளற வேண்டும். கும்மாயம் தயார் என்றால் மாவானது கையில் ஒட்டாமல் இருக்கும். ஒருவேளை பிசுபிசுவென்று ஒட்டினால், இன்னும் கிளறி வேக வைக்க வேண்டும் என்று அர்த்தம்.
* கும்மாயம் தயாராகிவிட்டால், அதை இறக்கி நெய் ஊற்றி பரிமாற வேண்டும்.
Image Courtesy: sharmispassions