Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
5 நிமிடத்தில் தக்காளி, வெங்காயம் சேர்க்காம சூப்பர் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
5 Minute Chutney Without Tomato: காலையில் வீட்டில் இட்லி சுடப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு வீட்டில் எப்போதும் சட்னி தான் செய்வீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் தக்காளி சட்னியைத் தான் விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் தற்போது தக்காளியின் விலை 100-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் தக்காளி சட்னி செய்வதெல்லாம் சாத்தியமில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தக்காளி சேர்க்காமல் எப்படியெல்லாம் சமைக்கலாம் என்பதை தெரிந்து, அவற்றை சமைத்து பழகிக் கொள்வதே புத்திசாலித்தனம். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இட்லிக்கு 5 நிமிடத்தில் ஒரு சட்னி செய்ய நினைத்தால், இந்த 5 நிமிட சட்னியை செய்து கொடுங்கள். இந்த சட்னிக்கு 5 பொருட்கள் இருந்தாலே போதுமானது. முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு இந்த 5 நிமிட சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே 5 நிமிட சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1 கப்
* பூண்டு - 2 பல்
* புளி - சிறிது
* வரமிளகாய் - 7
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சிறிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் 1 கப் தேங்காயை சிறு துண்டுகளாக்கி ஒரு மிக்சர் ஜாரில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் பூண்டு, புளி, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
கொடுத்துள்ள அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் பொடியாக நறுக்கிய 1 கைப்பிடி வெங்காயத்தை சேர்த்து, சிறிது
உப்பு தூவி, கண்ணாடி பதத்திற்கு வதக்கி, சட்னியுடன் சேர்த்து
கிளறினால், சுவையான சட்னி தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications