Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வேலைக்கு போகும் கர்ப்பிணியா? அப்ப இந்த விஷயங்களை மறக்காம ஃபாலோ பண்ணுங்க...
Pregnancy Tips In Tamil: கர்ப்ப காலத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அசெளகரியம் ஏற்படுவது உண்டு . இதை இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.
அதிலும் வேலைக்கு போகும் பெண்கள் வேலையையும் அதே நேரத்தில் கர்ப்பத்தையும் இரண்டையும் ஒரு சேர கவனிக்க வேண்டியது அவசியம் ஆகிறது. கர்ப்ப காலத்தில் உங்களது வேலைக்கு நீங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதே அளவு உங்கள் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

எனவே இரண்டையும் எப்படி திறன்பட சமாளிக்கலாம், அதற்கு கர்ப்பிணி பெண்கள் எந்த மாதிரியான விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
குறுகிய கால இடைவெளியை எடுத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் கர்ப்ப காலத்தில் வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் குறுகிய கால இடைவெளியை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிது கூட ஓய்வு எடுக்காமல் ஒரு வேலையை நீங்கள் செய்ய வேண்டாம். சில நிமிடங்கள் ஓய்வு எடுப்பது நல்லது. கால்களை நீட்டி சில நிமிடங்கள் செலவிட முயற்சி செய்யுங்கள். சில நிமிட ஓய்வு உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும்.
போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்
நாள் முழுவதும் நீங்கள் தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள முடியும். உங்கள் மூட்டுகளை உயவூட்டுவதன் மூலமும், உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலமும் தொற்றுநோயை தடுப்பதன் மூலமும் உங்களை நீங்கள் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடியும். இரவில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டாம். இரவில் அதிகளவு தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்ல வேண்டியிருக்கும். இது உங்கள் தூக்கத்தை தொந்தரவு செய்ய நேரிடலாம்.
தேவையற்ற செயல்களை தள்ளி வையுங்கள்
எப்பொழுதும் வேலை வேலை என்று அதிக வேலையை இழுத்து போட்டுக் கொண்டு செய்யாதீர்கள். முன்னுரிமை படி தினசரி வேலையை நீங்கள் செய்தாலே போதும். தேவையற்ற வேலையை தவிர்க்க வேண்டும்.
உங்கள் மன அழுத்தங்களை பற்றி பேசுங்கள்
கர்ப்ப காலத்தில் சந்தோஷமாக இருப்பது மிகவும் அவசியம். உங்கள் மன அழுத்தங்களை அனுமதிக்க ஒரு போதும் விடாதீர்கள். ஏனெனில் மன அழுத்தம் உங்கள் கருவில் வளரும் குழந்தையின் செயலை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே சக ஊழியர்கள் மற்றும் உறவினர்களுடன் மனசு விட்டு பேசுங்கள். உங்களுக்கு பிடித்த இசையை கேளுங்கள். இதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.
குமட்டலை தடுக்க முயற்சி செய்யுங்கள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை குமட்டல். சில குறிப்பிட்ட உணவுகளின் வாசனை மற்றும் நாற்றங்கள் குமட்டலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கர்ப்பத்தின் 3-4 வது மாதங்களில் குமட்டல் உணர்வு அதிகமாக இருக்கும். எனவே வேலை நேரங்களில் குமட்டல் அதிகமாக இருந்தால் உணவை சரியாக தேர்ந்தெடுப்பது, அடிக்கடி சிற்றுண்டி எடுத்துக் கொள்வது, நிறைய தண்ணீர் குடிப்பது, இஞ்சியை பயன்படுத்துவது போன்ற விஷயங்களை செய்து வரலாம்.
சீக்கிரம் தூங்கச் செல்லுங்கள்
கர்ப்ப காலத்தில் தூக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் தூங்க வேண்டும். தூங்கச் செல்வதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்பு செல்போன் பயன்பாட்டை நிறுத்துங்கள். நன்றாக தூங்குவது உங்களுக்கும் உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவும்.
இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்
இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்பது மிகவும் அவசியம். ஏனெனில் இரும்புச்சத்து குறைபாடு உங்களுக்கு இரத்த சோகை அறிகுறிகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே ஒல்லியான சிவப்பு இறைச்சி, கோழி இறைச்சி, கடல் உணவுகள், பச்சை இலை காய்கறிகள் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த முழு தானியங்கள் போன்ற உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்
கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனை பேரில் உடற்பயிற்சி செய்து வரலாம். இது உங்கள் எடையை ஆரோக்கியமாக பேண உதவி செய்யும். சிறிய சிறிய உடற்பயிற்சி செய்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications