Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்தியாவில் குழந்தைகளுக்கு எந்த வயதில் ஸ்மார்ட்போன் கொடுப்பது நல்லது? ஆய்வு சொல்லும் உண்மை என்ன?
Parenting Tips: குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதற்கு அதிகளவு பொறுமையும், பொறுப்புணர்வும் தேவை. இன்று அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய கவலை அவர்களின் குழந்தைகளுடைய செல்போன் பயன்பாடுதான்.
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளுமே மொபைல் போனிற்கு அடிமையாகும் நிலையில், தான் உள்ளனர்.நம்மைச் சுற்றியுள்ள தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருவதால், குழந்தை வளர்ப்பில் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டைச் சுற்றி ஆரோக்கியமான எல்லைகளை அமைப்பது பெற்றோரின் முக்கிய பகுதியாக மாறிவிட்டது.

அதனால்தான் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தை ஸ்மார்ட்போன் வைத்திருக்க தயாரா இல்லையா என்பதில் மிகுந்த சந்தேகம் கொண்டுள்ளனர்.ஸ்மார்ட் போன் இல்லாத உலகை தற்போது யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது, அதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளால் இந்த பழக்கம் மிகவும் அதிகரித்துவிட்டது. குழந்தைகளின் இந்த செல்போன் பயன்பாட்டில் நன்மைகள் இருந்தாலும் அதில் பல தீமைகள் உள்ளதை மறுக்க முடியாது.
உங்கள் குழந்தைகள் எப்போதும் போனை நோண்டிக்கொண்டே இருக்கிறார்களா? நீங்களும் இந்த இக்கட்டான நிலையை எதிர்த்துப் போராடியிருந்தால், நீங்கள் தனியாக இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்த பிரச்சினையை கோடிக்கணக்கான பெற்றோர்கள் உலகம் முழுவதும் அனுபவிக்கின்றனர். உங்கள் குழந்தைக்கு டிஜிட்டல் சாதனத்தை ஒப்படைக்கும் போது, நன்மை தீமைகளை முன்கூட்டியே எடைபோடுவது முக்கியம். ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் போனை உபயோகிக்கும்படி செய்வது உங்களின் பொறுப்பு என்பதை மறந்து விடாதீர்கள்.
சமீபத்திய ஆய்வுகளின் படி, ஒரு குழந்தையின் முதல் ஸ்மார்ட்ஃபோனைப் பெறுவதற்கான சராசரி வயது தற்போது 10.3 ஆண்டுகள் ஆகும். 12 வயதிற்குள், 50 சதவீத குழந்தைகள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளை வைத்திருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது. இது மிகவும் ஆபத்தான போக்காகும்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், தனது குழந்தைகளுக்கு 14 வயது வரை மொபைல் போன்களைக் கொடுக்கவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் இரவு உணவு மேஜையில் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து, தனது குழந்தைகளுக்கான திரை நேரத்தையும் அமைத்துள்ளதாக கூறியுள்ளார். சில அத்தியாவசிய தேவைகளுக்காக அவர்கள் போனை உபயோகிக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆய்வுகளின் படி, 10 முதல் 12 வரையிலான காலகட்டம் உலகம் முழுவதும் குழந்தைகள் தொலைபேசியை பெறும் வயதாக இருக்கிறது, ஏனென்றால் குழந்தைகள் அந்த வயதில் பெற்றோருடன் மிகவும் இணைந்திருக்கிறார்கள், எனவே அவர்கள் பாதுகாப்பாக போனை உபயோகிக்க வழிநடத்தப்படுகிறார்கள்.
2022-ல் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 95% குழந்தைகள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர். இது கடந்த காலங்களை விட மிக அதிகமாகும். 13 முதல் 14 வயதுடையவர்களை விட 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் ஸ்மார்ட்போன்களை அதிகமாக உபயோகிப்பதாகவும் ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் போது 73% சதவீத குழந்தைகள் ஸ்மார்ட்போனை உபயோகித்து வந்தனர். ஆனால் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்னவெனில், உங்கள் குழந்தைக்கு தொலைபேசியைக் கொடுக்க சரியான அல்லது தவறான வயது இல்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானவர்கள் மற்றும் அவர்களின் முதிர்வு நிலையும் மாறுபடும்.
எனவே உங்கள் குழந்தை தயாராக இருப்பதாக நீங்கள் பெற்றோராக உணரும்போது சரியான வயது, அது 8 ஆம் வகுப்பு அல்லது உயர்நிலைப் பள்ளி முடிந்த பிறகுமாக கூட இருக்கலாம். ஸ்மார்ட்ஃபோன் இல்லாமல் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள் மற்றும் சமூகப் பொறுப்புகளைக் கையாளும் அளவுக்கு அவர்கள் பொறுப்பானவர்கள் என்று நீங்கள் உணர்ந்தால் அவர்களிடம் போனைக் கொடுக்கலாம்.



Click it and Unblock the Notifications

