Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
கர்ப்பமா இருக்கீங்களா? வயிற்றில் வளரும் குழந்தை அறிவாளியா பிறக்கணுமா? அப்ப இத செய்யுங்க...
Pregnancy Tips In Tamil: குழந்தை வயிற்றில் வளரும் போதே தாய்மார்களுக்கு குழந்தை அறிவாளியாகவும், ஆரோக்கியமாகவும் பிறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காகவே அவர்கள் நிறைய மெனக்கெடல்களை செய்வது உண்டு. கர்ப்ப காலத்தில் நீங்கள் செய்யும் சிறிய சிறிய விஷயங்கள் கூட குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவி செய்யும்.
பிறக்கின்ற குழந்தை ஐன்ஸ்டீன் மாதிரி அறிவாளியாக செயல்படவும், கல்வியில் சிறந்து விளங்கவும் கர்ப்ப காலத்தில் உங்களுக்கும் குழந்தைக்கும் இடையேயான பிணைப்பை அதிகரிக்க வேண்டும். வயிற்றில் வளரும் குழந்தைக்கு நல்ல கதைகள் சொல்வது, இனிமையான இசையை கேட்பது போன்ற விஷயங்கள் குழந்தையை அறிவாளியாக பிறக்கச் செய்கிறது. வயிற்றில் வளரும் குழந்தை அறிவாளியாக சிறந்து விளங்க என்ன செய்யலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

வயிற்றில் வளரும் போதே குழந்தைக்கு கதை சொல்லத் தொடங்குங்கள்
பொதுவாக குழந்தைக்கு தூங்கச் செல்வதற்கு முன்பு நல்ல நீதிக்கதைகள் சொல்வது உண்டு. அதே மாதிரி குழந்தை பிறப்பதற்கு முன்பே வயிற்றில் இருக்கும் போதே நீதிக்கதைகள் சொல்வது அவர்களை அறிவாளியாக்குகிறது. இப்படி கதைகள் சொல்வது அவர்களின் மொழித்திறனை வளர்க்க உதவி செய்யும். மூன்று மாதங்களில் உங்கள் குழந்தை ஒலிகளை தெளிவாகக் கேட்பது மட்டுமல்லாமல், அவற்றை மனப்பாடம் செய்யவும் கற்றுக்கொள்கிறது. எனவே நீங்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நிறைய கதைகளை சொல்லுங்கள்.
தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்
கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனை பேரில் உடற்பயிற்சி செய்வது நல்லது. இது உங்களுக்கு சுகப்பிரசவம் பிறக்க வழி வகுக்கும். மேலும் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கர்ப்ப கால உடற்பயிற்சிகள் குழந்தையின் மூளைத் திறனை மேம்படுத்த உதவுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் மிதமான உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள்.
வெளியே காலார நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது
இயற்கையுடன் கூடிய நடைபயிற்சி எப்பொழுதுமே நம் மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சூரிய ஒளியில் செல்வது உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் டி யை பெற உதவுகிறது. இந்த வைட்டமின் டி இதயம் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே காலை அல்லது மாலை வேளைகளில் 20 நிமிடங்கள் வெளியே நடைபயிற்சி மேற்கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி குறைபாடு இருந்தால் மன இறுக்கம் போன்ற மனநல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முடிந்த வரை நடைபயிற்சியை மேற்கொண்டு வைட்டமின் டியை பெறுங்கள். இது உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் உதவுகிறது.
வயிற்றை மசாஜ் செய்யுங்கள்
கர்ப்ப காலத்தில் வயிற்றை மெதுவாக மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. சிறந்த ரிலாக்ஸ் தன்மையை தருகிறது. 20 வாரங்களுக்கு பிறகு மெதுவாக வயிற்றை மசாஜ் செய்யும் போது குழந்தை உணர ஆரம்பிக்கிறது. இது குழந்தைக்கு அமைதியான உணர்வை கொடுக்கும். நரம்பு மண்டலம் வழியாக வயிற்றில் வளரும் குழந்தைக்கு நிறைய செய்திகளை அனுப்பும். சுமார் 16 வாரங்களில் இருந்து குழந்தை உங்கள் பேச்சை கேட்க ஆரம்பிக்கும். எனவே வயிற்றில் வளரும் குழந்தையை இதமாக வருடி விடுவது நல்லது.
ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்
உங்கள் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தேவை என்பதைப் போல குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அவசியம். வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். 12 வாரங்களில் இருந்து குழந்தைக்கு சுவை மொட்டுகள் வளர ஆரம்பித்து விடுகிறது. 25 வாரங்களில் அவர்கள் உணவின் சுவையை நன்றாகவே உணர ஆரம்பிக்கின்றனர். உங்கள் குழந்தை வயிற்றில் உறிஞ்சும் அம்னோடிக் திரவம் மூலம் நீங்கள் உண்ணும் உணவுகளை ருசிக்கிறார்கள். எனவே ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இனிமையான இசையை கேளுங்கள்
நீங்கள் இனிமையான இசையை கேட்கும் போது உங்கள் குழந்தையும் இனிமையான இசையை கேட்க துவங்குகிறார்கள். இசை உங்கள் குழந்தைக்கு நல்ல ரசனை உணர்வை தருகிறது. இது உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பெரும் அளவில் உதவுகிறது. இனிமையான இசையை கேட்கும் போது மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உருவாகின்றன. இதன் மூலம் உங்கள் குழந்தைக்கு அமைதியான உணர்வை கொடுக்க முடியும். இனிமையான இசையுடன் உங்கள் குழந்தைக்கு பிடித்தமான தாலாட்டு பாடல்களையும் நீங்கள் பாடலாம். குழந்தை உங்கள் குரலை கேட்கும் போது மகிழ்ச்சி அடைகிறது. மன அமைதியை குழந்தை பெறுகிறது.



Click it and Unblock the Notifications


