Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
பெற்றோர்களே! 'இந்த' விஷயங்கள தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லானா உங்க குழந்தையோட மகிழ்ச்சியே போயிடுமாம்!
உலகில் உள்ள ஒட்டுமொத்த நாடுகளில், நெதர்லாந்து நாட்டில் உள்ள குழந்தைகள்தான் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தொடர்ந்து உலகின் மகிழ்ச்சியானவர்கள் தரவரிசையில் அவர்கள் முதலிடத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை நேர்மையானவராகளாவும், திறமையானவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் வளர்க்கதான் ஆசைப்படுகிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் பெற்றோருக்கூரிய சரியான பாணியை பின்பற்றாமல் விட்டுவிடுகிறார்கள்.

குழந்தைகளின் மகிழ்ச்சியில், அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் ஒவ்வொரு பெற்றோரும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். நெதர்லாந்து குழந்தைகளை போல மகிழ்ச்சியான குழந்தையாக உங்கள் குழந்தைகளையும் வளர்க்க சில குறிப்புகளை பின்பற்ற வேண்டும். நெதர்லாந்து பெற்றோர்கள் ஒருபோதும் செய்யாத விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்
குழந்தைகளை எப்போதும் கைப்பிடியில் வைத்திருக்க வேண்டாம்
குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நெதர்லாந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கீழே விழுந்து தங்களை காயப்படுத்துவதைப் பற்றி கவலைப்படுவதில்லை. விளையாடும் நேரத்தில், இந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தையைப் பிடிக்க அல்லது ஒவ்வொரு முறை தவறி விழும்போதும் அவர்களைப் பிடித்துக் கொண்டு ஓடுவதை செய்ய மாட்டார்கள்.
இந்த குழந்தைகள் பெற்றோர்களின் அதிக கவனிப்பு இல்லாமல் விளையாட்டு மைதானத்தில் சுதந்திரமாக விளையாடுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கமாக ஒரு பெஞ்சில் அமர்ந்து தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் விளையாடுவது, ஏறுவது, ஓடுவது மற்றும் விழுவது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள்.
வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யாதீர்கள்
குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பெற்றோர்கள் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை மதிக்கிறார்கள். 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், நெதர்லாந்தில் உள்ள தொழிலாளர்களில் பாதி பேர் பகுதி நேர வேலைகளைக் கொண்டிருந்தனர். பெரும்பாலான நாடுகளில், அப்பாக்கள் வேலையில் அதிக நேரம் செலவழித்தாலும், ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் ஒரு நாளையாவது தங்கள் குழந்தைகளுடன் செலவிடுகிறார்கள்.
குழந்தைகளுடன் இணைந்து உணவை சாப்பிட வேண்டும்
மகிழ்ச்சியான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் குறைந்தது ஒரு வேளையாவது உணவு சாப்பிடுவதை உறுதி செய்கிறார்கள். டின்னர் டைம் என்பது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி மகிழும் நேரமாகும். இந்த நேரம் சாப்பிடுவதற்கும், இணைவதற்கும் மற்றும் அவர்களின் நாளைப் பற்றி பேசுவதற்கும் ஒரு வழியாகும்.
தங்கள் பெற்றோருடன் இணைந்திருப்பதை உணர்தல் மற்றும் நல்ல ஆரோக்கியமான உரையாடல்களைக் கொண்டிருப்பது மகிழ்ச்சியான மற்றும் உணர்ச்சி ரீதியாக சமநிலையான குழந்தைகளுக்கு பங்களிக்கிறது.
கட்டமைப்பை ஒருபோதும் தூக்கி எறிய வேண்டாம்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக 'ஓய்வு, தூய்மை மற்றும் அமைப்பு" என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறீர்கள். இது உங்கள் குழந்தைகளை சரியான நடத்தையை வளர்க்கவும் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும்.
இதன் மூலம் சிறியவர்கள் ஏராளமான தூக்கத்தை பெறலாம் மற்றும் தினசரி சுகாதாரத்தை பின்பற்றலாம். ஆரோக்கியமான தினசரி அமைப்பைக் கொண்டிருப்பது குழந்தைகள் செழிக்க மற்றும் ஒழுக்க உணர்வை வளர்ப்பதற்கும், நேர்மறையான குழந்தை வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
உங்கள் கருத்தை கடைசி வார்த்தை என்று சொல்லாதீர்கள்
மகிழ்ச்சியான குழந்தையை வளர்க்கும் பெற்றோர்கள் தங்கள் முடிவுகளை தங்கள் குழந்தைகள் மீது திணிப்பதில்லை. அவர்கள் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி விவாதிப்பதை நம்புகிறார்கள். மேலும் தங்கள் குழந்தைகளின் கருத்துகளையும் யோசனைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள்.
இது குழந்தையின் நம்பிக்கையை பெரிதும் வளர்க்கிறது. பெற்றோர்கள் பாலியல், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாலினம் போன்ற சங்கடமான தலைப்புகளைப் பற்றி விவாதிப்பதற்கு கூச்சப்படுவதில்லை. உங்கள் குழந்தைகளை அவர்கள் உண்மையிலேயே யார் என்று ஏற்றுக்கொள்வதுதான் இதன் முக்கிய அம்சம்.



Click it and Unblock the Notifications
