Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
நீங்கள் கர்பிணியா? அப்போ மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்யாதீர்கள்...
கர்ப்ப காலத்தில் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் நேராமல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.அதனால் வழக்கமாக செய்யும் ஒரு சில விஷயங்களை இந்த சமயத்தில் செய்யாமல் இருப்பதுதான் நல்லது.அதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாமல், பிரசவத்தில் சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ள இயலும். அப்படி என்னென்ன விஷயங்களைச் செய்யக் கூடாது என்பது குறித்து இந்த பதிவில் விளக்கமாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்ப காலம் என்பது கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். ஏனெனில் குழந்தையின் வளர்ச்சி என்பது தாயின் உடல் நலனை பொருத்தே இருக்கிறது.

கர்ப்பமாக இருக்கும் ஒன்பது மாதங்களும் கவனமாக இருக்க வேண்டும். எனவேதான் கர்ப்ப காலத்தில் சில முக்கியமான விஷயங்களைச் செய்யக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். சில விஷயங்களை நீங்கள் தவறாக கடைபிடிக்கும் போது அது குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். மேலும் உங்கள் பிரசவ காலத்தை சிக்கலாக்கவும் வாய்ப்புள்ளது.
கருவை சுமக்கும் ஒவ்வொரு பெண்ணும் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை தவறாமல் கவனிக்க வேண்டியது அவசியம். எனவே தான், கர்ப்பமாக இருக்கும் போது உணவு, வாழ்க்கை முறை, உறக்கம், கர்ப்ப கால உடற்பயிற்சி ஆகியவற்றில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். ஏனென்றால், கர்ப்பமாக இருக்கும் பொது நாம் செய்யும் சில விஷயங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு பிடிக்காது என கூறப்படுகிறது.அந்த விஷயங்கள் என்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
1. கர்ப்பிணி பெண்கள் கேட்கும் மென்மையான இசை கூட கருவில் உள்ள குழந்தைகளின் மனதை பாதிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் கர்ப்பிணி பெண்கள், அதிக சத்தம் மற்றும் இரைச்சல் நிறைந்த பகுதியில் இருந்து விலகி இருப்பது நல்லது.
2. கர்ப்ப காலத்தில் பெண்கள் அலைச்சல் தரும் பயணத்தில் ஈடுபடுதல் கூடாது. இவ்வாறு அவ்வப்போது பயணிப்பது, கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை பாதிப்பதோடு, குழந்தையின் உடல் எடையையும் பாதிக்கும்.
3. கர்ப்ப காலத்தின் போது கர்ப்பிணி பெண்கள் உணவுகளை தவிர்ப்பது கருவில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டுக்கு வழிவகுக்கும். எனவே, கர்ப்பிணி பெண்கள், தாமதிக்காமல் சமயத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல சத்தான உணவுகளை கட்டாயம் எடுக்க வேண்டும்.
4. அதிகமான மசாலா கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள், காரமான உணவுகள் ஆகிவற்றை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது. காரணம் இந்த உணவுகள் கருவில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கும்.
5. கர்ப்பிணி பெண்கள் ஓய்வு எடுக்கும்போது, புரண்டு படுப்பது, மல்லார்ந்து படுப்பது, குப்புறப்படுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
6. தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைகளின் கண்களுக்கு வெளிச்சம் என்பது புதிதான விஷயம் ஆகும். அந்த வகையில், கர்ப்பிணி பெண்களின் வயிற்றுப்பகுதியில் அதிக வெளிச்சம் படும்போது, குழந்தைகள் அசௌகரியத்தை உணரும் வாய்ப்புகள் அதிகம்.அதனால் கர்ப்பிணி பெண்கள் எப்போது அவர்களின் வயிறு பகுதி நன்றாக மூடி இருக்கும் படி பார்த்துக் கொள்வது நல்லது.
7. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சிரித்து மகிழ்ச்சியாக இருப்பது அவசியம் தான். இருப்பினும், வயிறு குலுங்க சிரிப்பது கூடாது. இவ்வாறு வயிறு குலுங்க சிரிப்பது, வயிற்றில் தசை பிடிப்புக்கு வழிவகுப்பதோடு, குழந்தையின் அசௌகரியத்திற்கும் வழிவகுக்கும்.
8. சமைக்காத இறைச்சிகள், ஷெல் மீன்கள், பாதி சமைக்கப்பட்ட சூடான அல்லது குளிர்ந்த இறைச்சி வகைகள்,அதிகமான மீன் வகைகள், கருகிய கடல் வகை உணவுகள், பதப்படுத்தப்பட்ட பால் போன்ற உணவுகளை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்வதை தவிருங்கள்.
9. காபி, டீ அதிகமாக அருந்த வேணடாம்.ஒரு நாளைக்கு 150 முதல் 300 மி.கி அளவுக்கு அதிகமான காஃபின் உட்கொள்ள வேண்டாம்.காஃபின் தேநீர் மற்றும் காபியில் மட்டுமல்ல, சாக்லேட்டுகள், சோடாக்கள் மற்றும் சில மருந்துகளில் கூட காணப்படுகிறது.
10. கர்ப்ப காலத்தில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காருவது, நிற்பது போன்றவை சிக்கலை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமான கர்ப்பத்திற்கான சில டிப்ஸ்..
1. ஒவ்வொரு நாளும், உங்களுக்கான நேரத்தை தனியாக ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
2. எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். கர்ப்ப காலத்தில் பாதுகாப்பான நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சிகளைச் செய்வது சிறப்பு.
3. உங்களால் முடிந்த போதெல்லாம் ஓய்வெடுங்கள். முக்கியமாக இரவில் உறங்கும்போது சரியான தூக்கத்தை இலக்காகக் கொள்ளுங்கள்.
4. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் உதவி கேட்க தயங்காதீர்கள்.
5. மற்ற கர்ப்பிணிப் பெண்களைச் சந்தித்து உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
6. நன்றாகச் சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நீர்ச்சத்துடன் உடலை பராமரிக்கவும்.



Click it and Unblock the Notifications