கர்ப்பம் குறித்து பெண்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்... விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் சாந்தி...

கர்ப்பமாய் இருக்கும்போது பெண்கள் மருத்துவரிடம் கேட்கும் பொதுவான கேள்விகள் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது, என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது, உடலை எப்படி தயார்படுத்துவது, எந்தவிதமான உடற்பயிற்சிகளை செய்யவேண்டும் போன்றதுதான். சில கேள்விகளை அவர்கள் கேட்காமல் தவிர்க்கலாம். அவர்களுக்குள் இருக்கும் ஆயிரம் கேள்விகளை கேட்காமல் தவிர்ப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

இதற்கு காரணம் முட்டாள்த்தானமான ஆர்வம், அசௌகரியமாக உணர்தல் அல்லது அருவருப்பாக உணர்வதுமாகும். இந்த விஷயத்தில் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், சில கேள்விகளைக் கேட்பது அருவருப்பாக இருந்தாலும், கேட்க வேண்டியது அவசியம்தான். மகப்பேற்று மருத்துவர்களிடம் கேள்விகளை கேட்க அருவருப்போ அல்லது எல்லையை வைத்து கொள்வதோ அவசியமில்லாதது.

Pregnancy Questions Women Hesitate To Ask Gynaecologist By Doctor Shanthi

உங்கள் கர்ப்ப காலத்தில் நீங்கள் கேட்க வேண்டிய அவசியத்தை உணரலாம். ஆனால் நீங்கள் அவற்றை கேட்க அசௌகர்யமாகவோ அல்லது சங்கடமாக உணர்வதால் நீங்கள் கேட்காமல் நிறுத்தலாம். பொதுவாக பெண்கள் கர்ப்ப காலத்தில் கேட்கத் தயங்கும் கேள்விகளையும், அதற்கான பதிலையும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் மகப்பேறு மருத்துவர் சாந்தி.

குடல் இயக்கங்கள்

பெரும்பாலான கர்ப்பிணி பெண்களுக்கு கவலையாக இருப்பது, பிரசவத்தின் போது ஏற்படும் குடல் இயக்கங்களே. அது உங்களுக்கு மிகவும் சங்கடமான சூழலை ஏற்படுத்தலாம். அதற்கு நீங்கள் அதை எப்படி தவிர்ப்பது அல்லது அது எவ்வளவு பொதுவான ஒன்று என்பதை அறிய வேண்டும். இந்த கேள்விக்கு மகப்பேறு மருத்துவர்கள் சொல்லும் பதில் என்னவெனில், பிரசவத்தின் போது பிறப்புறுப்புப் பகுதியில் நிறைய அழுத்தங்கள் ஏற்படுகின்றன என்ற உண்மையை கருத்தில் கொள்ள வேண்டும்.

இதனால் உங்கள் உடல் சில கழிவுகளை வெளியேற்றலாம். எனினும், பிரசவம் எனும் செயல்முறை மிகவும் வலிநிறைந்த மற்றும் தனித்துவம் வாய்ந்த ஒன்று. இது ஒரு பொதுவான அனைவரும் சந்திக்க கூடிய நிகழ்வு. பிரசவத்தின் போது குடல் இயக்கங்கள் பற்றிய கவலையை தவிர்த்து, நல்ல முறையில் குழந்தையை பெற்றெடுப்பதில் கவனம் செலுத்து வேண்டும்.

உடலுறவு

நீங்கள் கேட்க விரும்பும் மற்றொரு முக்கிய கேள்வி, கருத்தரித்த பின் உடலுறவில் ஈடுபடலாமா? அது கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா? என்பது தான். உடலுறவில் ஈடுபட்டால், அது சிசுவை பாதிக்கும் என நீங்களும் உங்கள் துணையும் கவலையடையலாம். இதற்கான பதில் என்னவென்றால், சாதாரண சூழ்நிலைகளில், கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது முற்றிலும் பாதுகாப்பானது.

இது குழந்தைக்கு தீங்கு விளைவிக்காது. உங்களது தாம்பத்திய வாழ்க்கை பிரசவத்தின் பின் மட்டுமே பாதிக்கப்படும். பிரசவத்தின் பின் உங்கள் மென்மையான பிறப்புறுப்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் காயங்களே, உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் இடைவெளியை ஏற்படுத்தும்.

குழந்தை வெளியேறும் விதம்

குழந்தையை பிரசவத்தின் போது எப்படி சிறிய பிறப்புறுப்பு துளை வழியே வெளியேற்ற முடியும் எனும் கேள்வி உங்களுக்கு தோன்றலாம். அதற்கு சரியான பதில் உங்கள் மகப்பேற்று மருத்துவரிடம் இருந்தாலும், நீங்கள் அதை முட்டாள்த்தனமான ஒன்றாக நினைத்து கேட்க தயங்குவீர்கள். ஆனால், நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் உங்கள் சந்தேகங்கள் எதுவாயினும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற சந்தேகங்கள் ஏற்படுவது இயற்கைதான். பிரசவத்தின் போது பிறப்புறுப்பு பகுதி விரிவடையும். பிரசவத்தின் பின் மீண்டும் அது பழைய நிலைக்கு திரும்பி விடும். இது பற்றி பயப்பட தேவையில்லை.

வாயுக்கோளாறு

கர்ப்பிணி பெண்கள் சந்திக்க கூடிய மிக பெரிய மற்றும் சிரமத்திற்குரிய பிரச்சனை என்னவென்றால், அஜீரணமும், வாயுக் கோளாறும் தான். உங்கள் உடல் செயல்பாடு பற்றி, இது போன்ற கேள்விகள் குறித்து எப்போதும் உங்கள் மருத்துவரிடம் தயங்காமல் கேட்கலாம். கர்ப்ப காலத்தில் செரிமான அமைப்புகள் பாதிக்கப்படும் என்பது உண்மைதான். ஆகையால், வீக்கம், குமட்டல், ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் அஜீரணம் ஆகியவை பொதுவாகக் காணப்படுகின்றன.

கர்ப்பகாலத்தில் இவற்றை சமாளிக்க கடினமாக இருந்தால், நார்சத்து நிறைந்த பழங்கள், உணவுப் பொருள்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் அவற்றை குறைக்கலாம். மேலும், காரம் நிறைந்த உணவுகளை குறைக்க முயற்சிக்கவும். உங்கள் உணவின் அளவை குறைத்து, சிறிது சிறிதாக அடிக்கடி எடுத்து கொள்ளலாம். அதிக அளவு தண்ணீர் குடிப்பது செரிமானத்தை தூண்டும்.

பிறப்புறுப்பு வெளியேற்றங்கள்

சில நேரத்தில், உங்கள் பிறப்புறுப்பு பகுதியில் சில வெளியேற்றுங்கள் ஏற்படும். அதை நீங்கள் விசித்திரமாகவோ அல்லது அசௌகரியமாகவோ உணர்ந்தால், மகப்பேற்று மருத்துவரிடம் பரிசோதனை செய்வதை தவிர்க்காதீர்கள். ஆனால், கர்ப்பகாலத்தில் இது சாதாரண ஒன்று தான்.

கர்ப்பத்தில் அதிகரிக்கும் ஹார்மோன் மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்படும் இரத்த ஓட்டத்தால் இந்த வெளியேற்றுங்கள் சில நேரத்தில் அதிகமாக இருக்கலாம். பொதுவாக, இதில் கவலைப்பட எதுவுமில்லை. இருப்பினும், உங்கள் தோலில் எரிச்சலை ஏற்படுத்தினாலோ, துர்நாற்றத்தையோ அல்லது காயங்களை ஏற்படுத்தினாலோ, அது சில தொற்றுநோய்களின் அறிகுறியாக இருக்கக்கூடும்.

சிறுநீர்ப்பை கட்டுப்பாடு மற்றும் எடை அதிகரிப்பு

இந்த பிரச்சினை உலகம் முழுவதும் உள்ள பெண்களிடையே நிலவி வருவதாகும். பிரசவ தேதி நெருங்கும்போது உங்களின் சிறுநீரக செயல்பாடுகள் குறைய தொடங்கும். ஆனால் குழந்தை பிறந்த பிறகு தலைகீழாக அதிகமாக செயல்பட ஆரம்பிக்கும். உடல் எடை அதிகரிக்கும் பிரச்சினையை பொறுத்த வரையில், கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும் . இந்த கேள்வியை கேட்க நீங்கள் தயங்கக்கூடாது, கர்ப்பகால எடை உங்கள் குழந்தையின் மீது எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிய வேண்டியது அவசியம். எனவே, மருத்துவரை அணுகி உங்களின் எடை அதிகரிப்பு குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கிறதா என்று அறிந்து கொள்ளுங்கள்.

Story first published: Sunday, November 17, 2024, 22:14 [IST]
Desktop Bottom Promotion