For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க கர்ப்பிணியா? கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?

கோடி கோடியாய் பணம் கொட்டிக்கிடந்தாலும் நம் வீட்டில் ஒரு மழலைச் செல்வம் இருந்தால் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. கரு உருவானதில் இருந்து குழந்தையாக பிறக்கும் வரை பல சோதனைகளை அந்த பெண் சந்திக்க வேண்டும்.

|

தாய்மை எனப்படும் பெண்களுக்கு கடவுள் கொடுக்கும் வரம். அந்த வரம் தவமாய் தவமிருந்தாலும் எளிதில் கிடைத்து விடாது. கோடி கோடியாய் பணம் கொட்டிக்கிடந்தாலும் நம் வீட்டில் ஒரு மழலைச் செல்வம் இருந்தால் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. கரு உருவானதில் இருந்து குழந்தையாக பிறக்கும் வரை பல சோதனைகளை அந்த பெண் சந்திக்க வேண்டும். எனவே எந்த கிரகத்தை எந்த மாதத்தில் வணங்குவது எந்த மாதிரியான ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது என பார்க்கலாம்.

What To Know About Coronavirus If Youre Pregnant

குழந்தை செல்வம் கிடைப்பதற்கும் கொடுப்பினை வேண்டும். இன்றைய உணவுப்பழக்கம் பலரையும் பிள்ளைக்காக ஏங்க வைத்து விடுகிறது. திருமணமான பெண்கள் கருவுற்ற நாளில் இருந்தே பிள்ளையை நினைத்து கனவு காண ஆரம்பித்து விடுவார்கள். அந்த குழந்தை வயிற்றில் உருவான நாள் தொடங்கி பூமியில் பிறக்கும் நாள் வரைக்கும் பல சோதனைகளை கடக்க வேண்டியிருக்கும். கர்ப்ப காலத்தில் பல நோய்கள் ஏற்படும் அதை எல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும்.

MOST READ: கொரோனா வைரஸ் - கர்ப்பிணிகள், குழந்தைகள் கவனமாக இருங்க...

பெண்ணின் வயிற்றில் கரு உருவானதிலிருந்து குழந்தை பிறப்பு வரையிலும் 10 மாதங்களுக்கு அதன் வளர்ச்சியில் நவ கிரகங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அதனால், கர்ப்பம் தரித்தது முதல் ஒவ்வொரு மாதமும் அந்தக் கருவை ஆளுமை செய்யும் கிரகத்துக்குரிய தெய்வத்தை வணங்குவது சிறப்பு. இதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோய்கள் பாதிப்பு

நோய்கள் பாதிப்பு

கர்ப்ப காலத்தில் கருவும், கர்ப்பிணி தாய்மார்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். குமட்டல் வாந்தி, முதுகுவலி, ரத்தப்போக்கு, தசை பிடிப்பு, தூக்கமின்மை, தோல் பிரச்சினை, மன அழுத்தம், மலச்சிக்கல், வயிற்று வலி ஆகிய பிரச்சினைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும். ஹார்மோன் ஏற்ற தாழ்வுகள் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு மெட்டாபாலிச அளவு அதிகமாக இருக்கும். இதனால் கருவை சுமக்கும் தாய் வழக்கத்தை விட அதிகமாகவே தங்கள் உடலில் வெப்பத்தை உணர்வார்கள்.

ஹார்மோன்கள் மாற்றம்

ஹார்மோன்கள் மாற்றம்

புரொஜெஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் அளவு அதிகரிப்பதனால் கர்ப்பிணி பெண்களுக்கு மார்பகம் மென்மையாகி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக மார்பகத்தின் அளவு பெரிதாகும். கருப்பை அளவு பெரிதாவதால் இரைப்பையின் வடிவம் மாறி நெஞ்சு எரிச்சல், அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.

தாம்பத்ய உறவு

தாம்பத்ய உறவு

ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு தாம்பத்ய உறவில் ஈடுபடக்கூடாது. நான்காவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை உறவில் ஈடுபடலாம். கர்ப்ப காலத்தில் தாம்பத்ய உறவில் ஈடுபடும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். சத்தான ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் எட்டிக்கூட பார்க்காது.

சுக்கிரன் செவ்வாய்

சுக்கிரன் செவ்வாய்

முதல் மாதம் கரு உருவாகும் காலம் இதற்குக் காரக கிரகம் சுக்கிரன். ஸ்ரீபுவனேஸ்வரி, ஸ்ரீலட்சுமி மற்றும் இந்திராணியை வணங்கலாம். இரண்டாவது மாதம் கரு மென்மையாக வளரும். இதற்கு அதிபதி செவ்வாய். ஸ்ரீமுருகனையும் ஷேத்ர பாலகர்களையும் வணங்கலாம்.

குரு சூரியன்

குரு சூரியன்

மூன்றாவது மாதம் குழந்தையின் கால்கள் உருவாகும். இதற்கு குரு அதிபதி. இந்திரன், பிரம்மா, மற்றும் ஸ்ரீ தட்சிணா மூர்த்தியை வணங்கலாம். நான்காவது மாதம் குழந்தையின் எலும்பு மற்றும் நரம்பு மண்டலங்கள் உருவாகும். இதற்கு அதிபதி சூரியன். கரு நன்றாக வளர்ச்சி அடைய சிவ பெருமானை வணங்கலாம்.

விநாயகர்

விநாயகர்

குழந்தையின் தோல், உடலமைப்பு உருவாகும் மாதம் 5வது மாதம். சந்திரன் இதற்கு அதிபதி. ஸ்ரீ துர்க்கை அம்மன், கௌரியை வணங்க நன்மைகள் நடைபெறும். ஆறாவது மாதம் குழந்தையின் அங்கம், ரோமம் நகம் உருவாகும். இவற்றின் அதிபதி சனி. ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ பைரவரை வணங்கலாம். ஸ்ரீ விநாயகரையும் வணங்க நன்மைகள் நடைபெறும்.

ஸ்ரீ மகா விஷ்ணு

ஸ்ரீ மகா விஷ்ணு

ஏழாவது மாதம் மூச்சு அதாவது கருவிற்கு பிராணன் உருவாகும். இதன் அதிபதி புதன். ஸ்ரீ மகாவிஷ்ணுவை வணங்க நன்மைகள் நடைபெறும். கருவின் ஆரோக்கியம் அதிகமாகும். 8வது மாதம் கருவின் உடல் வளர்ச்சி பெற ஸ்ரீ விநாயகரை வணங்க வேண்டும். 9வது மாதத்தில் கருவின் உடல் முழு வளர்ச்சி அடையும். சந்திரனே இதற்கு அதிபதி. ஸ்ரீ கௌரி, துர்க்கையை வணங்கலாம். 10வது மாதம் குழந்தை பிறந்து விடும். ஆத்ம பலம் பெருக ஆத்ம காரகன் சூரியனே அதிபதியாக இருப்பதால் சிவனை வணங்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What To Know About Coronavirus If You're Pregnant

Being pregnant can be a daily lesson in trying not to be a hypochondriac, but it’s hard when the news is currently flooded with reports about coronavirus.
Story first published: Tuesday, February 4, 2020, 14:18 [IST]
Desktop Bottom Promotion