Latest Updates
-
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
கர்ப்ப காலத்தில் செய்யும் மசாஜ்க்கு இவ்ளோ நன்மைகள் இருக்கா?
மசாஜ் என்பது கர்ப்பிணிப் பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் செய்யப்படும் ஒன்றாகும். இந்த மசாஜ் கர்ப்பிணிப் பெண்கள் அனுபவிக்கும் பல உடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குவதற்கு உதவியாக இருக்கும். இது இரத்த ஓட்
கர்ப்ப காலம் என்பது பெண்களுக்குக் கிடைத்த ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தனது கர்ப்ப காலம் மற்றும் மகப்பேற்றுக்குப் பின்பு தனது உடல் மற்றும் ஹார்மோன்களில் ஏராளமான மாற்றத்தை உணருகிறார்கள். எல்லா பெண்களும் வலி, உடல் எடை அதிகரிப்பு, இடுப்பு வலி, தசைப் பிடிப்புகள் போன்றவற்றைக் கடந்து வருகிறார்கள்.

இந்த வலிகளுக்குத் தீர்வளிக்க மசாஜ் செய்வது சிறந்ததாகும். பெண்களின் கர்ப்ப காலத்தின் போது அவர்களுக்கு மசாஜ் செய்வது சிறந்த நன்மையைத் தரும். மற்றும் அவர்களின் உடல் வலியிலிருந்து விடுபட்டு நிம்மதியான உறக்கத்தைத் தரும்.

மசாஜ்
மசாஜ் என்பது கர்ப்பிணிப் பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் செய்யப்படும் ஒன்றாகும். இந்த மசாஜ் கர்ப்பிணிப் பெண்கள் அனுபவிக்கும் பல உடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குவதற்கு உதவியாக இருக்கும். இது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதினால் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு வழிவகுக்கிறது.

மூட்டுவலி
கர்ப்ப காலத்தின் போது மூட்டுகளில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து நரம்புகளைத் தளர்த்துகிறது. மூட்டுகள் மற்றும் முதுகெலும்பு போன்ற உடலின் எடை தாங்கும் பகுதிகளில் ஏற்படும் அழுத்தங்களைக் குறைக்கும்.

இரத்த ஓட்டம்
மசாஜ் செய்வதினால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கப்படுகிறது. இதனால் தாய் மற்றும் குழந்தைக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் விரைவில் கிடைக்கின்றன.

பல்வேறு வலிகள்
கர்ப்பிணிப் பெண்களுக்கு முதுகுவலி, தலைவலி, மலச்சிக்கல், சோர்வு, அமில ரிஃப்ளக்ஸ், இடுப்புவலி, மூட்டு வலி, கடினமான தசைப்பிடிப்புகள், சிக்கலான நரம்புகள், கால் பிடிப்புகள், மேல் முதுகுவலி போன்ற பல்வேறு வலிகள் ஏற்படும். இந்த எல்லா வழிகளிலிருந்தும் விடுபடுவதற்குக் கர்ப்ப கால மசாஜ் உதவும்.

நல்ல தூக்கம்
கர்ப்ப காலத்தில் பெண்களுக்குச் செய்யப்படும் மசாஜினால் எண்டோர்பின்களை வெளிவருகிறது. இதனால் நரம்புகள் தளர்த்தப்பட்டு நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும். எனவே கர்ப்பிணிப் பெண்கள் நிம்மதியாக ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொள்ளுவதற்கு இந்த மசாஜ் உதவுகிறது.

ஆரோக்கியமான உடல்
கர்ப்ப கால மசாஜ் உங்கள் உடலை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைக்க உதவுகிறது. இந்த மசாஜ் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கும் எடை அதிகரிப்பிற்கு உதவும்.

ஆரோக்கியமான கர்ப்பம்
எந்தவிதமான மருந்துகள் இல்லாமல் உங்களின் உடல் வலிகளைக் குணப்படுத்தவும், மன அழுத்தத்தையும் மனச் சோர்வையும் குறைக்க உதவுகிறது. அத்துடன் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தாய் மற்றும் குழந்தைக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. இதனால் இந்த கர்ப்ப கால மசாஜ் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மற்றும் பாதுகாப்பான கர்ப்பத்திற்கும் உதவுகிறது.

விளைவுகள்
எல்லா விதமான நன்மைகளை கொண்டிருக்கும் போது அதற்குரிய பக்கவிளைவுகளையும் கொண்டு இருக்கின்றன. இந்த மசாஜை நீங்கள் கர்ப்பமாகி முதல் மூன்று மாதங்களுக்கு கண்டிப்பாக செய்யக் கூடாது. இது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும். எனவே மூன்று மாத முடிவிற்கு மேல் நீங்கள் இதைச் செய்யலாம். மசாஜ் செய்யும் போது அழுத்தம் அதிகமாக இருந்தால் மசாஜ் செய்பவரிடம் கூறுங்கள். கர்ப்ப கால மசாஜ் செய்ய உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்து ஒரு பரிந்துரைக்கப்பட்ட நல்ல மசாஜ் ஸ்பிசிலிஸ்ட்களிடம் மட்டும் செல்லுங்கள். மசாஜ் செய்த பிறகு உங்களுக்கு உடல்நிலையில் ஏதேனும் மாற்றம், லேசான தலைவலி அல்லது வேறு ஏதும் மாற்றங்களை உணர்ந்தால் இதனை நீங்கள் அடுத்த முறை முயற்சி செய்ய வேண்டாம்.

வீட்டில் மசாஜ்
உங்கள் மருத்துவரால் உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டவரிடம் சென்று மசாஜ் செய்ய முடியவில்லை என்றால் உங்கள் கணவர் அல்லது குடும்பத்தில் உள்ளவர்களிடம் உதவி கேளுங்கள். உங்கள் வீட்டில் ஒரு அமைதியான இடத்தை தேர்வு செய்து உட்கார்ந்து, கண்களை மூடிக் கொண்டு எல்லா பக்கத்திலும் உங்கள் தலையை மெதுவாகச் சுற்றுங்கள். மசாஜ் செய்வதற்குத் தேங்காய் எண்ணெய், திராட்சை விதை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற லேசான எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். பின்னர், உங்கள் தசைகளை வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யுங்கள். இந்த மசாஜ் செய்யும்போது நன்றாக மூச்சினை இழுத்து வெளியேற்றுங்கள். அடுத்து, உங்கள் முதுகு பகுதியில் மசாஜ் தொடங்குங்கள். முழுவதுமாக மசாஜ் செய்து முடித்த பிறகு நன்றாக மூச்சுப் பயிற்சி செய்துவிட்டு ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications