Latest Updates
-
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம்
கர்ப்ப காலத்தில் உங்கள் முகத்திற்கு எந்த மாதிரியான பேஸ்பேக் போடலாம்?
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் அளவிலும் மனதளவிலும் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு தான். கர்ப்ப காலத்தில் பெண்களின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றமே சருமத்தில் ஒரு சில பிரச்சனைகளை ஏற்படுகின்றன.
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் அளவிலும் மனதளவிலும் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு தான். கர்ப்ப காலத்தில் பெண்களின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றமே சருமத்தில் ஒரு சில பிரச்சனைகளை ஏற்படுகின்றன. அதாவது அவர்களின் முகம் சற்று வறண்டு மற்றும் வெடித்து காணப்படுதல் மற்றும் பளபளப்புத் தன்மையை இழந்து சோர்வாகக் காணப்படுதல் போன்ற பிரச்சனைகள்பெண்களுக்குச் சற்று சங்கடமாக இருக்கும்.

எனவே கர்ப்பிணிப் பெண்கள் உங்கள் முகத்தில் என்ன பேஸ் பேக் போடலாம் எந்த பேஸ்பேக் போடக் கூடாது என்ற குழப்பத்தில் இருப்பீர்கள். ஏனெனில் ஏதேனும் ஒரு பொருள் உங்கள் குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற பயத்தில் இருப்பீர்கள். எனவே உங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சில பேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை நீங்கள் எந்த பயமும் இன்றி பயன்படுத்தி உங்கள் முகத்தினை பளபளக்கச் செய்யலாம்.

நீங்கள்
நீங்கள் இதில் எந்த பேஸ்பேக் பயன்படுத்தினாலும் சரி அதனைக் கண்டிப்பாகக் குளிக்கப் போவதற்கு முன்னால் போட்டுவிட்டு அப்படியே குளிக்கச் செல்லுங்கள். இதுவே பேஸ் பேக் போடுவதற்குச் சிறந்த முறை.

ஓட்ஸ்
ஒரு தேக்கரண்டியளவு தயிர், ஒரு தேக்கரண்டியளவு ஓட்ஸ், 3 சொட்டுகள் தேன் மூன்றையும் நன்றாகக் கலந்து உங்கள் முகத்தினை சுத்தமாகக் கழுவிவிட்டு பின்னர் இந்த கலவையை அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

கற்றாழை
கற்றாழை உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும் தன்மையைப் பெற்றுள்ளதால் உங்கள் முகங்களை ஈரப்பதமாக்கிக் குளிர்விக்கும். மேலும் கற்றாழை, ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு இவை மூன்றும் அற்புதமான டி-டான் கலவையாகும். இது வறண்ட சருமம் கொண்டவர்களுக்கும் ஒரு நல்ல தீர்வாக அமையும். ஒரு தேக்கரண்டியளவு கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டியளவு ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டியளவு எலுமிச்சை சாறு மூன்றையும் நன்றாக கலந்து உங்கள் முகம், கழுத்து மற்றும் கைகளில் தேய்த்து 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். பின்னர் சுத்தமான நீரில் கழுவுங்கள்.

பாதாம் எண்ணெய்
பிசைந்த வாழைப்பழம் சிறிதளவு மற்றும் 5 சொட்டு பாதாம் எண்ணெய் இரண்டையும் கலந்து உங்கள் முகங்களைச் சுத்தமாகக் கழுவிய பின்பு கலவையை அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள்.

எண்ணெய் சருமம்- வாழைப்பழம்
ஒரு தேக்கரண்டியளவு எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டியளவு தேன், ஒரு வாழைப்பழம் அனைத்தையும் நன்றாகக் கலந்து உங்கள் முகம், கழுத்து மற்றும் கைகளில் தேயுங்கள். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு உங்கள் சருமத்தில் உள்ள நிறத்தை மீட்டுத் தரவும், எலுமிச்சை சாறு சருமத்தில் உள்ள கருமை நிறப் புள்ளிகளை நீக்கி சருமத்தை ஒளிரச் செய்யவும் உதவும். ஒரு தேக்கரண்டியளவு எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டியளவு உருளைக்கிழங்கு சாறு இரண்டையும் கலந்து முகத்தினை சுத்தமாகக் கழுவி விட்டு அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவுங்கள்.

தயிர்
ஒரு தேக்கரண்டியளவு தயிர், ஒரு தேக்கரண்டியளவு எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டியளவு கடலை மாவு அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி, அவை காய்ந்த உடன் சுத்தமான நீரில் கழுவுங்கள்.

இரவு நேரம்
உங்களுக்குப் பகல் நேரத்தில் உங்கள் சருமத்தைப் பாதுகாக்க நேரம் இல்லை அல்லது மிகுந்த நேரம் பேஸ்மாஸ்க் வைத்து இருக்க முடியாது என்றாலும் நீங்கள் இரவு நேரத்திற்கான பேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம்.

ஆயில் மசாஜ்
சிறிதளவு எள் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது உங்கள் சருமத்திற்கு எந்த எண்ணெய் பொருத்தும் என்று உங்களுக்குத் தெரியுமோ அந்த எண்ணெய் கொண்டு உங்கள் முகம், கைகள் மற்றும் பாதங்களில் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் வைத்து இருங்கள். பாதங்களில் நீங்கள் செய்யும் மசாஜ் உங்களுக்கு நல்ல தூக்கத்தைத் தருவதற்கு உதவும்.

வைட்டமின் ஈ
வைட்டமின் ஈ எண்ணெய் உங்கள் சருமத்தில் கொலாஜென்களை அதிகரித்து உங்கள் சருமத்தை இளமையாக வைக்க உதவும். எனவே சிறிதளவு வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் ஒரு தேக்கரண்டியளவு எடுத்து இரண்டையும் கலந்து சேகரித்து வைத்து தினமும் உங்கள் முகம், கழுத்து, கைகள் மற்றும் பாதங்களில் தேய்த்து அப்படியே தூங்கச் செல்லுங்கள். அடுத்தநாள் காலையில் உங்கள் சருமத்தில் நீங்களே மாற்றங்களை உணருவீர்கள்.



Click it and Unblock the Notifications