Latest Updates
-
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
குழந்தைகள் கருவறையில் அழுக காரணம் என்ன? இப்படி அழுவது நல்லதா?
குழந்தை உருவாக்கம் என்பது ஒரு அதிசயம் போன்றது; குழந்தைகள் கருவறையில் அழுக காரணம் என்ன, இப்படி அழுவது நல்லதா என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.
குழந்தை உருவாக்கம் என்பது ஒரு அதிசயம் போன்றது; குழந்தையின் உருவாக்கமே அதிசயம் என்றால், அந்த உருவாக்கத்தில் நடைபெறும் பல வித மாற்றங்கள் அதிசயத்தின் உச்ச கட்டம் என்று தான் கூற வேண்டும். குழந்தைகள் அன்னையின் வயிற்றில் வளரும் பொழுது அவர்கள் உறங்கி கொண்டு மட்டும் தான் இருக்கிறார்கள் என்று நினைத்தால் நம்மை விட முட்டாள் யாரும் இல்லை.

குழந்தைகள் பிறந்த பின் செய்யும், ஒரு மனித பிறப்புக்கான அத்தனை செயல்பாடுகளையும் தாயின் கருவறையிலேயே செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பதிப்பில் குழந்தைங்கள் தாயின் வயிற்றில் வளருகையில் அழுவது ஏன்? என்ன காரணம் என்று படித்து அறியலாம்.

உண்மையில் அழுவார்களா?
குழந்தைகள் அன்னையின் கர்ப்பத்தில் வளரும் பொழுது உண்மையிலேயே அழுவதாகவும், அழுகையை போன்ற மற்ற பிற உணர்வுகளான சிரிப்பு, கோபம், கொட்டாவி என அத்தனை உணர்வுகளையும் அவர்கள் வெளிப்படுத்துவதாகவும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகள் உண்மையிலேயே அழுகிறார்கள் என்பதை ஸ்கேன் போன்ற பரிசோதனையிலேயே கூட கண்ணார கண்டு அறிய முடியுமாம்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்!
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளும் பொழுது, குழந்தைகள் கருவறையினுள் அந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். ஸ்கேன் பரிசோதனைகளை மாத வாரியாக தொடர்ந்து எடுத்து அறிவது குழந்தையின் வளர்ச்சியை பற்றி அறிய உதவும்.

எப்படி அறிவது?
குழந்தைகளின் மூச்சு விடும் வீதம் மாறுபாடு அடைவது, அவர்கள் வாயை திறந்து நாக்கை வெளியே நீட்டுவது, சிறிது காலத்திற்கு மூச்சை பிடித்து நிறுத்தி, பின் மூச்சு உள்ளிழுப்பது, வெளி இடுவது போன்ற செயல்பாடுகளை செய்வது, குழந்தைகள் கருவறையில் அழுது கொண்டு இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்.

எப்பொழுது அழுவார்கள்?
குழந்தைகள் கர்ப்பத்தில் உருவான பின் 16 ஆம் வாரத்தில் தான் அவர்களின் உள்ளுறுப்புகள் வளர்ச்சி அடைய தொடங்கும்; இந்த கால கட்டத்தில் செவி, நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் வளர்ச்சி பெறும்; மேலும் 20வது வார கால வளர்ச்சியை எட்டும் பொழுது குழந்தைகளின் வாய், தாடை, நாக்கு போன்ற உறுப்புகள் வளர்ச்சி அடையும். இந்த அனைத்து உறுப்புகளும் வளர்ச்சி பெற்ற பின்னர், 24வது வாரத்தில் குழந்தைகளின் அழுகை ஏற்படும்.

எதனால் அழுவார்கள்?
கருவில் வளரும் குழந்தைகள் அழுக அவர்கள் தங்களுக்கு விரும்பத்தகாத மாற்றங்களை சந்திப்பதனால் ஏற்படும்; கருவின் விரும்பத்தகாத மாற்றங்கள் என்றால், தாயின் வயிற்றில் அழுத்தத்தை கொடுப்பது - இது முதல் குழந்தை அல்லது கணவர் போன்ற உறவுகள் செய்யும் சேஷ்டைகளால் நேரும் தொல்லை, ஒளி, சத்தம் மற்றும் தாயின் வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான தொந்தரவு போன்றவை தான் குழந்தையின் அழுகைக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

தாய் - தந்தை!
தாய் மனம் உடைந்து அழுதால், அதை குழந்தையால் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்; அது குழந்தைக்கு அழுகையை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. மேலும் தாயும் தந்தையும் உடலால் இணைந்தால் அதனால் தாயின் வயிற்றில் கொடுக்கப்படும் அழுத்தம், தாய் அடையும் பலவீனம், தாயின் உடலில் ஏற்படும் அலுப்பு மற்றும் வலி குழந்தையின் மன நிலையை மற்றும் வளர்ச்சியை பாதிக்க காரணங்கள் ஆகின்றன.

சத்தமாக அழுவார்களா?
குழந்தைகள் தாயின் வயிற்றில் வளரும் பொழுது, தாய் பேசும் மொழிக்கு மறுமொழியாக அல்லது தனது பசி, கோபம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த அவர்கள் அடிக்கடி தாயின் வயிற்றை உதைப்பது உண்டு; அது போல் தான் அழுகையும். குழந்தையின் அழுகை அமைதியான முறையில் சத்தமின்றி மட்டுமே கருவறையில் ஏற்படும். இதை ஸ்கேன் செய்யும் பொழுது மட்டுமே பார்த்து அறிய முடியும்.

அழுவது நல்லதா?
குழந்தைகள் அழுவது அவர்களின் சரியான வளர்ச்சியை சுட்டி காட்டுகிறது. குழந்தைகள் அழுவதால் அவர்களின் உணரும் திறன், கவனிக்கும் மற்றும் கேட்கும் திறன் மேம்படுவதை அறியலாம். மேலும் அழுகும் பொழுது முலையின் உத்தரவு, நரம்புகளின் செயல்பாடுகள், முக பாவனைகள் போன்றவை மிகவும் அவசியம்.
இவை அத்தனையும் சரியான முறையில் வளர்ச்சி பெற்று இருப்பதை உணர்த்துவது தான் கருவறையில் ஏற்படும் குழந்தையின் அழுகை! குழந்தையின் அழுகையால் அதன் வளர்ச்சி அறியப்படுவதால், குழந்தையின் கருவறை அழுகை நல்லதே!



Click it and Unblock the Notifications