உங்கள் குழந்தை அறிவாளியா? இல்லையா? என்பதை அறிவது எப்படி?

குழந்தைகள் என்பவர்கள் கடவுள் கொடுத்த வரம்; அறிவாளி குழந்தைகள் எப்படி இருப்பார்கள், அவர்களின் குணாதிசியங்கள், அறிவாளி குழந்தையின் அறிகுறிகள் குறித்து இங்கு படிக்கலாம்.

குழந்தைகள் வயிற்றில் இருக்கும் பொழுதே ஆணா, பெண்ணா என்று முடிவு செய்வதில் தொடங்கி குழந்தை பிறந்து வளர்ந்து பின்னாளில் எப்படி ஆக வேண்டும் என்பது வரை பெற்றோர்கள் கனவு கண்டு, மனதில் கனவுக் கோட்டையை கட்டி விடுகின்றனர். ஆனால் கண்ட கனவுகளோ, நினைத்த நிகழ்வுகளோ உண்மை வாழ்வில் என்றும் நிகழாது; அப்படி நிகழ்ந்துவிட்டால் வாழ்க்கை சுவரசுயம் இல்லாமல் போய்விடும்.

signs of an intelligent baby

ஆகையால், பெற்றோர்கள் எதையும் முன்கூட்டியே முடிவு செய்யாது, நிகழ்கால வாழ்வில் நடக்கும் நிஜங்களுக்கு நினைவுகளை நகர்த்த முயல வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிகழ்காலமே நிஜம்!

நிகழ்காலமே நிஜம்!

குழந்தைகள் பிறந்த பின் என்ன குழந்தையாக இருந்தாலும், குழந்தையின் குணம் எப்படி, அதன் ஆசைகள், இஷ்டங்கள் எப்படி இருக்கின்றனர் என்று பார்த்து குழந்தையின் எதிர்காலம் இப்படி இருக்கும் என்று யூகம் செய்யலாம்; ஆனால் அது கூட மாறலாம். எனவே, குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆசைக்கும் ஏற்றவாறு அவர்களை வளர்க்க முயலுங்கள்.

இருப்பினும் இந்த பதிப்பில் குழந்தைகள் வளர்ச்சியை பெற்றோர்கள் புரிந்து கொள்ள பிறந்த குழந்தை பின்னாளில் ஒரு அறிவாளியாக வளர்வான் என்பதை எடுத்துக் காட்டும் குழந்தையின் சில அறிகுறிகள் மற்றும் குணாதிசியங்கள் குறித்து படித்து அறியலாம்.

முதல் வருடம்!

முதல் வருடம்!

குழந்தைகள் 4-5 மாதத்திற்குள்ளாகவே கூட பேச முயற்சிப்பர்; குழந்தைகள் பிறந்த பின் அவர்கள் முதல் ஒரு வருடத்திற்குள் பேச தொடங்கிவிட்டால், அவர்கள் பின்னாளில் அறிவுக்கூர்மையுடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. பிறந்த குழந்தை 14 மாதத்திற்குள் வார்த்தைகளை உச்சரிக்க தொடங்கி, 18 மாதத்திற்குள் அதிக வார்த்தைகளை கற்று கொண்டு விட்டால், கண்டிப்பாக அந்த குழந்தையின் அறிவுத்திறன் அதிகம் தான்.

குழந்தையின் எடை

குழந்தையின் எடை

குழந்தைகள் பிறக்கும் பொழுது அதிக எடை கொண்டு பிறந்தால், அவர்களின் அறிவுத்திறன் மேம்பட்டு இருக்கும் என்றும் அவர்களின் அறிவுத்திறன் மற்ற குழந்தைகளின் அறிவுத்திறனை விட அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. குழந்தைகளின் அழுகை, சிரிப்பு சத்தம் போன்றவை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தால், அவர்களின் அறிவுத்திறன் வித்தியாசமானது என்று அர்த்தம்.

குழந்தையின் வளர்ச்சி

குழந்தையின் வளர்ச்சி

குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் விரைவாக நடந்தால் குழந்தைகள் அறிவாளிகளாக இருப்பர்; குழந்தைகள் நடத்தல், தவழ்தல் என அணைத்து வளர்ச்சி மாற்றங்களும் மற்ற குழந்தைகளை விட விரைவாக நிகழும். குழந்தைகளின் உயரம் அதிகமானதாக இருந்தால், அவர்கள் அதிக மூளைக்காரர்களாக இருப்பார்கள் என்ற கருத்தும் கண்டறியப்பட்டு உள்ளது.

குழந்தைகளின் உணர்வுகள்

குழந்தைகளின் உணர்வுகள்

குழந்தைகள் அதிகமாக சந்தோசம் காட்டுபவர்களாக, அதிக சோகத்தை வெளிப்படுத்துபவர்களாக மற்றும் குழந்தைகள் சற்று பிடிவாத குணம் கொண்டவர்களாக இருந்தால், அவர்க்ளின் அறிவுத்திறன் மிகவும் அதிகம் என்று கண்டறியப்பட்டு உள்ளது. அறிவாளி குழந்தைகள் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

குழந்தையின் நடத்தை

குழந்தையின் நடத்தை

குழந்தைகள் தன்னிடம் பேசுபவர்களை கண்ணோடு கண் பார்த்து பேசுவர்; சைகை புரிவர். குழந்தைகளிடம் யார் பேசினாலும் அவர்களை பார்த்து அவர்கள் கேட்பதற்கு இணங்க மறுமொழி அளிப்பர். குழந்தைகள் தங்களது சுற்றுப்புறத்தை கூர்மையாக கவனிப்பர்; சுற்றுப்புற மனிதர்கள், பொருட்கள் என அனைத்தையும் கவனித்து கொள்வர்.

புத்தக பாசம்!

புத்தக பாசம்!

அறிவாளிக் குழந்தைகளுக்கு குழந்தை பருவத்திலேயே புத்தகங்களின் மீதான பாசம், நேசம், காதல் என எல்லாம் பிறந்துவிடும். குழந்தைகள் புத்தகங்களை வாசிக்க, படிக்க அதிகம் விரும்புவர்; மேலும் குழந்தைகளுக்கு பசில், வினாவிடை போன்ற படிப்பு தொடர்பான விளையாட்டுகள் - விஷயங்கள் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

தனிமையில் இனிமை!

தனிமையில் இனிமை!

குழந்தைகள் தனிமையை நாடி செல்லுபர்களாக இருந்தால், அவர்கள் மண்டையில் ஏதோ சரக்கு இருக்கு என்று பொருள். குழந்தைகள் எதை செய்தலும் முழுக்கவனம் மற்றும் முழு ஈடுபாட்டுடன் இருந்து செயலை செய்தால் அவர்கள் கண்டிப்பாக அறிவாளிகளாக உருவெடுப்பர் என்பதில் சந்தேகம் இல்லை. செய்யும் எல்லா செயலிலும், கேள்விப்படும் அனைத்து விஷயங்களிலும் அதிகப்படியான ஆர்வத்தை குழந்தைகள் வெளிப்படுத்துவர்.

தீர்வு இருக்கும்!

தீர்வு இருக்கும்!

எந்த பிரச்சனைகளையும் எளிதில் ஆராய்ந்து அதற்கு தீர்வு அளிக்கும் நபர்களாகவும், எந்த ஒரு உடைந்த பொருளையும் தானாக சரிசெய்துவிடும் அல்லது முன்வந்து சரி செய்ய முயலும் சமத்து பிள்ளைகளாக இருப்பர். அவர்கள் கையில் பொம்மை போன்ற எப்பொருளைக் கொடுத்தாலும் அதனை நோண்டி நொங்கெடுத்து, அதைப்பற்றி முழுதும் அறிந்து கொள்ளும் குணவான்களாக இந்த குழந்தைகள் விளங்குவர்.

உறக்கம்

உறக்கம்

அறிவாளி குழந்தைகள் குறைந்த நேரமே உறங்குவார்கள்; அவர்களின் கற்பனை வளம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாததாக, மேம்பட்டு காணப்படும். அகண்ட அறிவு, விசாலமான பார்வை, நெற்றிக்கண் போன்ற நேர்மை நெறி போன்ற குணாதிசியங்களை தங்களுள் கொண்டவர்களாக விளங்குவார்கள் அறிவாளி குழந்தைகள். அதேபோல் தனக்கான லாபம் பெறுவதிலும் சரியாக இருப்பர்.

நியாபகம்!

நியாபகம்!

நடக்கும் நிகழ்வுகளை, பார்க்கும் மனிதர்களை, பேசும் வார்த்தைகளை, மற்றவர் கூறிய மொழிகளை நன்கு நினைவில் வைத்து இருப்பர். இவர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும், தெரிந்து கொள்ளும் சகலகலா வல்லவர்களாக விளங்கி வளர்வர். இந்த குழந்தைகள் குழந்தை பருவம் முதலே அறிவாளிகளாக, திறன் கொண்டவர்களாக விளங்குவர்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, August 29, 2018, 14:50 [IST]
Desktop Bottom Promotion