Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
தாய்ப்பால் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?
தாய்ப்பால் என்பது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்; தாய்ப்பால் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று இங்கு படிக்கலாம்.
குழந்தைகள் பிறந்தது முதல் ஓரிரு வயது வரை கொடுக்கப்படும் முக்கிய மற்றும் முதல் உணவு தாய்ப்பால் ஆகும். குழந்தைக்கு தாய்ப்பால் என்பது அதன் பசியை போக்க மட்டும் அளிக்கப்படுவதல்ல; குழந்தையின் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளை போன்ற உள்ளுறுப்புகளின் செயல்பாடு மேம்படுவதற்கு தேவையான சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் இருந்து தான் கிடைக்கின்றன.

இந்த பதிப்பில் தாய்ப்பால் வேறு என்னென்ன பயன்களை தருகிறது, தாய்ப்பாலை குழந்தைக்கு குடிப்பதற்கு தவிர வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம், அதன் வேறு மருத்துவ பயன்கள் என்று இந்த பதிப்பில் காணலாம், வாருங்கள்!

டயப்பர் புண்!
குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிக்கும் பொழுது ஏற்படும் அழுத்தத்தால் உண்டாகும் புண்கள் மற்றும் காயங்களை போக்க இந்த தாய்ப்பாலை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிக்கும் பொழுது புண்கள், சிவந்து போதல், தடுப்புகள், வீங்குதல் போன்ற பாதிப்புகள் குழந்தையின் பிறப்புறுப்பு மற்றும் தொடை பகுதிகளில் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த தாய்ப்பாலை பாதிப்பு ஏற்பட்ட இடத்தில தடவுவதன் மூலம் சரி செய்யலாம்.

முகப்பருக்கு நிவாரணம்!
குழந்தைகளுக்கு அவர்களின் முகத்தில் ஏற்படும் சிறிய சிவந்த கூட்டமாக ஏற்படக்கூடிய முகப்பருக்களை போக்க தாய்ப்பாலை அதன் மீது தடவலாம். குழந்தைகள் சிலருக்கு ஏதேனும் உணவு ஒவ்வாமை அல்லது வேறு ஏதேனும் விஷயங்கள் காரணமாக முகத்தில் சிவந்த பருக்கள் ஏற்படலாம்; அவற்றை போக்க அதன்மீது தாய்ப்பாலை லேசாக தடவினால் போதும், முகப்பருக்கள் விரைவில் குணமாகி விடும்.

பூச்சிக்கடிக்கு அருமருந்து..
குழந்தைகளுக்கு உடலில் எங்கேனும் பூச்சிக்கடி ஏற்பட்டு காயம் உண்டாகி இருந்தால், அல்லது தோல் சிவந்து போயிருந்தால் அதனை குணமாக்க உதவும் மேஜிக் மருந்தாக நாம் தாய்ப்பாலை பயன்படுத்தலாம். தாய்ப்பாலை பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் தவுவதன் மூலம் காயங்களை எளிதாக சரி செய்து விட முடியும்.

சோப்பாக பயன்படுத்தலாம்.!
தாய்ப்பாலை குழந்தையை குளிக்க வைக்கும் பொழுது பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் கலந்த சோப்புக்கு மாற்றாக கூட நாம் பயன்படுத்தலாம். தாய்ப்பால் உடலின் உள்ளிருக்கும் அழுக்குகளை, கிருமிகளை அழிப்பது போல, உடலுக்கு வெளியே ஏற்பட்டிருக்கும் கிருமிகளையும் அழித்து, குழந்தையின் உடலுக்கு நலம் பயக்க பெரிதும் உதவுகிறது.

கண்ணின் கண்ணீர் கட்டிகள்!
குழந்தைகளின் கண்ணில் கண்ணீர் அல்லது தூசுக்களால் ஏதேனும் கட்டி உருவானால், அந்த சமயத்தில் என்ன செய்வது என்று தாய்மார்கள் புலம்புவது உண்டு. இந்த பிரச்சனைக்கான தீர்வு அவர்களிடமே உள்ளது. காவது தாயின் தாய்ப்பாலை குழந்தையின் கண்ணில் கட்டி உள்ள இடத்தில் விட்டு ஓரிரு நிமிடம் கழித்து, தண்ணீர் வைத்து துடைப்பதால் கண்ணின் கட்டிகளை எளிதில் நீக்கி விடலாம்.

காது வலிக்கும் நிவரணம்!
குழந்தைகளுக்கு காது வலி ஏற்பட்டு இருந்தால், எந்த மருந்தை ஊற்றுவது, எண்ணெயை ஊற்றுவதா அல்லது கடையில் விற்கும் ஏதேனும் மருந்தை ஊற்றுவதா என்ற குழப்பம் தாய்மார்களுக்கு இருக்கலாம். குழந்தையின் காது வலியையும் எளிதில் போக்கி விடும் ஒரு நல்ல மருந்து தாய்ப்பால் மட்டுமே! தாய்ப்பாலை பயன்படுத்தி குழந்தையின் வலி மற்றும் வேதனையை நீக்கி விடலாம்.

கண்கள் பிங்க் நிறமானால்..!
குழந்தைகளின் கண்கள் அலர்ஜி அல்லது ஒவ்வாமையால் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் மிகவும் சிவந்து பிங்க் நிறமாக மாறிவிட்டால் அதனை சரிசெய்ய அந்த சமயங்களில் தாய்ப்பாலை பயன்படுத்தலாம். தாய்ப்பாலை குழந்தையின் கண்களின் சிவந்துள்ள பகுதிகளில் தடவுவதன் மூலம் குழந்தையின் பிரச்சனையை சரி செய்ய முடியும்.

தாயின் முலைக்காம்புகள்!
தாயின் முலைக்காம்புகளில் குழந்தை பால் குடிக்கும் பொழுது கடித்து விட்டதால், அல்லது வாய் வைத்து வாய் வைத்து அந்த இடமே வறண்டு வலிக்கும் நிலை ஏற்பட்டால், அந்த சமயத்தில் தாயின் முலைக்காம்பில் தாய்ப்பாலை தடவினால், தாய்க்கு முலைக்காம்புகளில் ஏற்பட்டிருக்கும் காயங்களை எளிதில் போக்கிவிடலாம். தாயின் மார்பில் சுரக்கப்படும் பாலே, மார்பில் ஏற்படும் புண்ணுக்கு மருந்தாகவும் மாறுகிறது.

பல் முளைத்தல்..!
குழந்தைகளின் பல் முளைத்தல் வளர்ச்சியை தூண்ட தாய்ப்பாலை பாயன்படுத்தலாம்; குழந்தைக்கு பற்களின் வளர்ச்சியை தூண்டி விடுவதற்காக, பற்களின் பாதுகாப்பான வளர்ச்சியை ஏற்படுத்த தாயின் தாய்ப்பாலை குழந்தையின் ஈறுகளில் தடவி பல் முளைத்தலை தூண்டிட பயன்படுத்தலாம். இது குறித்து பலர் அறிவதில்லை.

பால் பொருட்கள்!
பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர், வெண்ணெய் போன்ற பொருட்களை குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படாமல் இருக்க தாய்ப்பாலை பயன்படுத்தியும் தயாரிக்கலாம். இவ்வாறு தாய்ப்பாலை கொண்டு தயாரிக்கப்பட்ட பால் பொருட்களை குழந்தைக்கு அளிக்கும் பொழுது அதன் வளர்ச்சி நன்கு மேம்படுகிறது; எந்தவித பாதிப்புகளும் ஒவ்வாமை குறைபாடுகளும் குழந்தைக்கு ஏற்படுவது தடுக்கப்படுகிறது!



Click it and Unblock the Notifications