கருக்கலைப்பிற்கு பிறகும் உயிருடன் இருந்த குழந்தை! - உலகை உலுக்கும் வைரல் வீடியோ!

Written By:
Subscribe to Boldsky

கருக்கலைப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு விவாதத்திற்கு உரிய விஷயமாக இருந்து வருகிறது. கருக்கலைப்பு செய்வது என்பது முற்றிலும் தவறானது என்ற ஒரு கருத்தும், கருவை கலைப்பதை தடை செய்ய வேண்டும் என்று கோரியும் பல வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன...!

கருக்கலைப்பை நாம் இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஏதேனும் மருத்துவக் காரணங்களுக்காக கருவை கலைப்பது என்பது ஒரு வகை.. மற்றொன்று இந்த கரு வேண்டாம் என்று முடிவு செய்து, தானாக முன் வந்து கருவை கலைப்பது என்பது இரண்டாம் வகையாகும்.. பொதுவாக குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடவோ, அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்துவதற்காகவோ கருக்கலைப்பு செய்யப்படுகிறது. ஒரு பெண் வல்லுறவில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் கூட கருக்கலைப்பு செய்கின்றனர்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயிருடன் இருந்தால்?

உயிருடன் இருந்தால்?

கருக்கலைப்பு செய்யப்பட்ட ஒரு குழந்தை, வெளியே எடுக்கப்பட்டதும் கூட, உயிருடன் இருந்தால், அந்த நிகழ்வு எப்படி இருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள். அது நமது நெஞ்சை பதற வைக்கும் ஒரு சம்பவமாக அல்லவா இருக்கும்?

உயிருடன் இருக்கும் சிசு

உயிருடன் இருக்கும் சிசு

இந்த வீடியோவில் உள்ள குழந்தையானது கருக்கலைப்பு செய்து, வெளியே எடுக்கப்பட்டதும் கூட, உயிருடன் இருப்பதற்காக அறிகுறிகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த வீடியோவானது முழு உலகத்தையும் உழுக்க கூடிய ஒன்றாக உள்ளது. அந்த சின்னஞ்சிறு சிசுவானது தனது வாழ்க்கைக்காக சுவாசித்துக் கொண்டும், கை, கால்களை அசைத்துக் கொண்டும் இருப்பதை காணும் போது யாருக்கு தான் கண்கள் கலங்காமல் இருக்கும்? நீங்கள் இந்த வீடியோவில் அந்த சின்னஞ்சிறு சிசு தனது கை, கால்களை அசைப்பதையும், சுவாசிப்பதையும் தெளிவாக காணலாம்.

கணக்கில் வராத சிசு கலைப்புகள்

கணக்கில் வராத சிசு கலைப்புகள்

உங்களுக்கு, வருடத்திற்கு 10 மில்லியன் இந்திய பெண்கள் தங்களது கருவை கலைக்கிறார்கள் என்று தெரியுமா? 10 மில்லியன்! இது எத்தனை அதிகம் என்று சற்று யோசித்து பாருங்கள்..! அதுமட்டுமல்ல... கணக்கில் வராமலேயே பலர் தங்களது கருவை கலைத்து விடுகின்றனர் என்றால், மொத்தம் எத்தனை சிசுக்கள் கலைக்கப்படுகின்றன என்பதை..!

காரணம் என்ன?

காரணம் என்ன?

கருவை கலைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் உண்டு..! சிலருக்கு தன் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் என்று, அதை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது குழந்தை அதற்கு தடையாக இருக்கும் என்று அதனை கலைத்து விடுகிறார்கள்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

மேலும், சிலர் குழந்தையை வளர்க்கும் அளவுக்கு பொருளாதார சூழ்நிலை இல்லாத காரணங்களினாலும், கருக்கலைப்பில் ஈடுபடுகின்றனர். காரணம் என்னவாக இருந்தாலும் சரி, அது உங்களது குழந்தை. ஒரு சிசுவின் உயிரை கொள்ள துணியும் முன்னர் நீங்கள் சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

வாழ்க்கை கொடுங்கள்

வாழ்க்கை கொடுங்கள்

உங்களால் குழந்தைகளை வளர்க்க முடியாமல் போனால், அந்த குழந்தையை தத்தாக கொடுக்கலாம். குழந்தை இல்லாமல் எத்தனையோ பேர் சிரமப்படுகின்றனர். தங்களது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இல்லாமல் எத்தனையோ பேர் வாழ்ந்து வருகின்றனர். உங்களால் வளர்க்க முடியாமல் இருக்கும், உங்களது குழந்தையை தத்துக் கொடுப்பதால் நீங்கள் ஒருவரின் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதாக இருக்கும்.

புரிய வைக்கவும்

புரிய வைக்கவும்

உங்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை இருந்தாலும், உங்களது குடும்ப உறுப்பினர்கள் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தடை விதித்தார்கள் என்றால், நீங்கள் உங்களது எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். உங்களது குடும்ப உறுப்பினர்களிடத்தில், சொல்லி புரிய வைக்க வேண்டியது அவசியமாகும்.

சமூக அமைப்புகள்

சமூக அமைப்புகள்

அதையும் மீறி அவர்கள் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு அவர்கள் தடை கூறினால், பல சமூக நல அமைப்புகள் உள்ளன அவர்களிடம் உங்களது பிரச்சனையை பற்றி பேசுங்கள். உங்களது வாழ்க்கையின் இக்காட்டான காலகட்டத்தில் யார் உங்கள் பக்கம் இருக்கிறார்கள், யார் உங்களுக்கு எதிரியாக செயல்படுகிறார்கள் என்பதை அறிந்து செயல்படுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Baby Lived Even After An Abortion

Baby Lived Even After An Abortion
Story first published: Monday, December 18, 2017, 14:30 [IST]