Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியாக சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியாக சாப்பிடாமல் இருந்தால், முதலில் பாதிக்கப்படப் போவது வயிற்றில் வளரும் குழந்தை தான். எனவே குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டாவது கர்ப்பிணிகள் நன்கு சாப்பிட வேண்டும்.
நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? சரியாக சாப்பிடுகிறீர்களா? நீங்கள் அதிகப்படியான வேலைப்பளுவினால் எப்போதும் பிஸியாக இருக்கலாம். இருப்பினும் தாய்மை என்று வரும் போது, சரியாக சாப்பிட வேண்டியது அவசியம். இப்போது நீங்கள் சரியான சத்துக்கள் நிறைந்த உணவுகளை முறையாக சாப்பி வேண்டும்.

ஒருவேளை நீங்கள் கர்ப்ப காலத்தில் சரியாக சாப்பிடாமல் இருந்தால், முதலில் பாதிக்கப்படப் போவது வயிற்றில் வளரும் குழந்தை தான். எனவே குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டாவது கர்ப்பிணிகள் நன்கு சாப்பிட வேண்டும். குறிப்பாக கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
சரி, இப்போது கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியாக சாப்பிடாமல் இருந்தால் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து காண்போம்.

நரம்பு மண்டல கோளாறுகள்
கர்ப்பிணிகள் சரியாக சாப்பிடாமல் இருந்தால், ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைக்கு பல்வேறு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்படும். இன்னும் சில சமயங்களில், ஊட்டச்சத்து குறைபாடு குழந்தையின் மூளை மற்றும் தண்டுவட வளர்ச்சியைப் பாதிக்கும். ஆகவே கர்ப்ப காலத்தில் நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

குழந்தை இறப்பு
கர்ப்பிணிகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருந்தால், அதனால் கருவில் வளரும் சிசு இறக்கும் வாய்ப்புள்ளது. இது மிகவும் அரிது தான். இருப்பினும், இம்மாதிரியான நிலைமை ஏற்படும் வாய்ப்புள்ளதால், கர்ப்பிணிகள் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குறைவான எடையில் குழந்தை
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் போதிய ஊட்டச்சத்துக்களுடன் இல்லாவிட்டால், பிறக்கும் குழந்தை மிகவும் எடை குறைவில் பிறக்கும். குழந்தை பிறக்கும் போது சரியான உடல் எடையில் இல்லாமல், ஒரு வருடம் வரையிலும் அப்படியே இருந்தால், அக்குழந்தை விரைவில் இறக்கும் வாய்ப்புள்ளது.

பற்றாக்குறையான வளர்ச்சி
கர்ப்பிணிகளின் உடலில் வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் குறைவாக இருந்தால், அது குழந்தையின் வளர்ச்சியையும் தாமதமாக்கும். ஏனெனில் குழந்தையின் வளர்ச்சிக்கு போதிய சத்துக்கள் இல்லாவிட்டால், குழந்தை எப்படி ஆரோக்கியமாக வளர்ச்சி பெறும்?

குறைப்பிரசவம்
பெண்கள் கர்ப்ப காலத்தில் சரியாக சாப்பிடாமல் இருந்தால், போதிய சத்துக்கள் மற்றும் கலோரிகள் கிடைக்காமல், குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் 2200 கலோரிகளையும், 2 மற்றும் 3 ஆவது மூன்று மாத காலத்தில் 2300-2500 கலோரிகளையும் உட்கொள்ள வேண்டும்.

மூன்று வேளை உணவு அவசியம்
தினமும் குறைந்தது மூன்று வேளையாவது தவறாமல் சாப்பிடுங்கள். இதனால் குழந்தைக்கு சீரான அளவில் சத்துக்கள் கிடைத்து, குழந்தையின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
