குறைப்பிரசவம் நடக்க காரணமென்ன?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

பிரசவம் என்பது 40 வாரங்கள் அதாவது 9 மாதங்கள் நிறைவுற்ற பிறகு நடக்கும். அப்போதுதான் குழந்தைக்கு தேவையான வளர்ச்சி பெற்று கர்ப்பப்பையில் இடம் போதாமல் வெளியே வரும்.

ஆனால் சிலர் 40 வாரங்களுக்கு முன்னதாகவே 35 - 36 வாரம் முன்னதாகவே வெளியே வந்துவிடும். இதனை குறைப்பிரசவம் என்று கூறுவோம். இந்த சமயத்தில் போதிய வளர்ச்சி குழந்தை பெற்றுக்காது. முக்கியமாய் இரைப்பை வளர்ச்சி அடைந்திருக்காது.

Under weight or over Weight may cause for pre- term Birth

இதற்கான காரணங்கள் என்னவென்று கண்டறிய சின்சினாட்டி என்ற பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் பல்கலைக் கழக தலைமை ஆராய்ச்சியாளரான எமிலி டி ஃப்ரேன்கோ மற்றும் அவரின் உதவியாளர்கள் அனைவரும், மருத்துவமனைகளில் குறைப்பிரசவம் பிரசவித்த சுமார் 4,00, 000 பெண்களைப் பற்றிய முழு விபரங்களை கண்டறிந்தனர்.

Under weight or over Weight may cause for pre- term Birth

இந்த ஆய்வின் இறுதியில் குறைவான எடையுள்ள பெண்களுக்கு, மற்றும் கர்ப்ப காலத்தில் வெறும் 30 % எடை அதிகரித்தவர்களுக்கு குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.

Under weight or over Weight may cause for pre- term Birth

அதேபோல், உடல் பருமனான பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் குறைப்பிரசவம் பிறந்துள்ளது. மிகக் குறைவான இடைவெளியில் அடுத்தடுத்து குழந்தைகளை பெற்றவர்களுக்கும் குறை பிரசவம் நடந்துள்ளது.

இந்த ஆய்வின் இறுதியில், சரியான ஊட்டச்சத்து உணவில் சேர்க்காதவர்களுக்கும், மிகக் குறைவான உடல் எடை அல்லதுது மிக அதிக எடை இருப்பவர்களுக்கு குறைப்பிரசவம் நடக்க அதிக வாய்ப்புள்ளது.

Under weight or over Weight may cause for pre- term Birth

எனவே பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை தடுக்க நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அந்த சமயத்தில் கடைபிடிக்க வேண்டும் என எமிலி கூறியிருக்கிறார்.

English summary

Under weight or over Weight may cause for pre- term Birth

Under weight or over Weight may cause for pre- term Birth
Story first published: Monday, August 22, 2016, 17:35 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter