கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கான சில கை வைத்தியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது என்பது சாதாரணம் தான். மலச்சிக்கலுக்கு எத்தனையோ கை வைத்தியங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தையும் கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள முடியாது. கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி, வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. இவற்றை சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்குவதுடன், வயிற்றில் வளரும் சிசுவிற்கும் ஆபத்து ஏற்படும்.

Tried And Tested Natural Remedies For Constipation During Pregnancy

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலைப் போக்க உதவும் சில சக்தி வாய்ந்த கை வைத்தியங்களைக் கொடுத்துள்ளது. அவற்றை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி பழங்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை விரைவில் போக்கும். அதற்கு தினமும் 200 கிராம் ப்ளூபெர்ரிப் பழங்களை வாங்கி சாப்பிட வேண்டும். ப்ளூபெர்ரி மலச்சிக்கலைப் போக்குவதோடு, அதில் வைட்டமின் சி சத்தும் உள்ளது. இது பலகவீனமான நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

ஆளி விதை

ஆளி விதை

ஆளி விதையும் மலச்சிக்கலைத் தடுக்கும். அதற்கு ஆளி விதையை வறுத்து பொடி செய்து, அன்றாட உணவின் மீது சிறிது தூவி சாப்பிட வேண்டும். மேலும் ஆளிவிதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கர்ப்பிணிகள் இதை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்

வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்

சிலருக்கு வெதுவெதுப்பான நீர் நாள்பட்ட மலச்சிக்கலைத் தடுக்காமல் இருக்கலாம். ஆனால் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பருகினால், உடனடியாக கர்ப்ப கால மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

முந்திரிப் பழம்

முந்திரிப் பழம்

உலர்ந்த முந்திரிப் பழமும் மலச்சிக்கலுக்கு பரிந்துரைக்கப்படும் ஒரு பாதுகாப்பான உணவுப் பொருள். குறிப்பாக கர்ப்பிணிகள் இதை சாப்பிட்டால், தீவிர மலச்சிக்கல் உடனடியாக விலகும்.

தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணியின் விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை தினமும் குடித்து வர, மலச்சில்லல் உடனே நீங்கும். மேலும் தர்பூசணி பழத்திலும் நீர்ச்சத்து உள்ளதால், கர்ப்பிணிகள் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tried And Tested Natural Remedies For Constipation During Pregnancy

Here are some tried and tested natural remedies for constipation during pregnancy. Read on to know more...
Story first published: Tuesday, November 22, 2016, 15:14 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter