Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
குழந்தை உதைப்பது பற்றி கர்ப்பிணி பெண்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்!
அனைத்து பெண் மற்றும் கணவனுக்கும் கிடைக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. கருவில் வளரும் குழந்தை முதன் முதலாக உதைப்பதை உணர்வது. எத்தனை காசு கொடுத்தாலும், இந்த தருணத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியும், இன்பமும் கிடைக்கவே கிடைக்காது என்பது தான் உண்மை.
தாம்பத்தியம் பற்றி தம்பதிகள் கேட்க தயங்கும் 4 கேள்விகளுக்கான மருத்துவரின் பதில்கள்!
ஆனால், கருவில் சிசு உதைப்பதற்கும், சிசுவின் ஆரோக்கியம், வளர்ச்சி, நகரும் தன்மைக்கும் கூட நிறைய தொடர்புகள் இருக்கின்றன. ஒருவேளை கர்ப்பிணி பெண்ணின் உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் சிசு நகர்தலில் குறைபாடுகள் இருக்கும். இதனால், சிசு உதைப்பது மிக அரிதாக ஏற்படலாம்.
சிசேரியன் செய்துள்ள பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டியவைகள்!
இனி, குழந்தை உதைப்பது பற்றி கர்ப்பிணி பெண்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம்....

முதல் உதை
குழந்தை உதைப்பது போன்ற முதல் உணர்வு 18 - 25 வது வாரத்தின் போது தான் ஏற்படும்.

இரண்டாம்
இரண்டாவது முறை கர்ப்பம் அடைந்த பெண்கள் இந்த காலக்கட்டத்திற்கு முன்பே குழந்தைகள் உதைப்பதை உணர்ந்து விடுவார்கள் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏறத்தாழ 13வது வாரத்தில் உதைக்கும் உணர்வை உணர்கின்றனர்.

கருவின் செயல்பாடு
தாயின் உடலில் சர்க்கரை அளவு குறையும் போது, சிசுவின் செயல்பாடு மற்றும் நகரும் தன்மையிலும் கூட மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. பொதுவாக இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரைக்குள் இந்த மாற்றம் ஏற்படலாம்.

இடது பக்கம்
இடது பக்கமாக படுத்து உறங்கும் போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், சிசுவிடம் சுறுசுறுப்பு அதிகமாக இருக்கும் எனவும், உதைகள் நிறையவே கிடைக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உதைகளின் எண்ணிக்கை
உங்கள் குழந்தை உதைப்பதன் எண்ணிக்கையை வைத்தே குழந்தை எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறது என அறிந்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உணவுகள்
நீங்கள் உண்ணும் உணவுக்கும், குழந்தை உதைக்கும் எண்ணிக்கைக்கும் கூட தொடர்பு இருக்கிறதாம். சில உணவுகள் கருவில் சிசுவின் நகர்வை ஊக்கப்படுதுமாம். இதனால், உதைகள் அதிகம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

உதைகள் குறையும்
36வது வாரத்தின் போது ஏறத்தாழ குழந்தை முழுவதுமாக வளர்ந்திருக்கும். இதனால், சிசுவால் உதைக்க முடியாது. உதைக்கும் எண்ணிக்கை குறையும்.



Click it and Unblock the Notifications
