கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல் மற்றும் ஈறு பிரச்சனைகளுக்கான சில இயற்கை நிவாரணிகள்!

Posted By:
Subscribe to Boldsky

கர்ப்ப காலத்தில் பெண்கள் பல் மற்றும் ஈறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு ஹார்மோன் மாற்றங்கள் ஓர் முக்கிய காரணமாகும். ஹார்மோன்களில் திடீர் மாற்றங்கள் ஏற்படும் போது, பற்கள் மிகவும் சென்சிடிவ் ஆவதோடு, நோய்த்தொற்றுக்களின் அபாயத்திற்கும் உள்ளாகும்.

இப்படி கர்ப்பிணிகளுக்கு பல் மற்றும் ஈறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு ஹார்மோன் மாற்றங்கள் மட்டுமின்றி, அதிகப்படியான புரோஜெஸ்டிரோன், சர்க்கரை உணவுகளை அதிகம் உண்பது மற்றும் கால்சியம் குறைபாடும் காரணங்களாகும்.

ஆனால் சரியான உணவுகளை உட்கொண்டு, இனிப்பு பதார்த்தங்களைக் குறைத்து, தினமும் இரண்டு வேளை பற்களை துலக்கி வந்தால், இப்பிரச்சனைகளைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி, கர்ப்பிணிகளுக்கு ஈறு அல்லது பல் பிரச்சனைகள் இருப்பின் அதற்கு ஒருசில இயற்கை வைத்தியங்களும் உள்ளன. அவற்றைப் பின்பற்றினாலும் பிரச்சனைகள் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஈறுகளில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் பற்களில் காறைகள் உருவாவதைத் தடுக்கும். மேலும் இதில் உள்ள பாலிஃபீனால்கள் பற்கள் சொத்தையாவதைக் குறைக்கும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் பல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு வழங்கும். எனவே கர்ப்பிணிகள் சமையலில் ஆலிவ் ஆயிலை சேர்த்து வந்தால், அவை பற்களின் வலிமையை அதிகரித்து, பற்களில் காறைகள் உருவாவதைத் தடுக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஈறு பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும்.

தேன்

தேன்

தேனில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள், கர்ப்ப காலத்தில் ஈறு பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும். மேலும் தேனில் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

கற்றாழை

கற்றாழை

கற்றாழையில் பூஞ்சை எதிர்ப்பு, ஆன்டி-பாக்டீரியல் போன்றவை உள்ளது. இது வாய் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். மேலும் கற்றாழை சொத்தைப் பற்கள், இரத்தக்கசிவு. ஈறுகளில் வீக்கம் போன்றவற்றைக் குறைக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா ஈறு நோய்களை உண்டாக்கும் அமிலங்களை நீர்க்க உதவும். ஆகவே கர்ப்ப காலத்தில் வாய் பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், வாரத்திற்கு ஒருமுறை இரவில் படுக்கும் முன் பேக்கிங் சோடாவை பேஸ்ட்டில் தூவி பற்களைத் துலக்குங்கள்.

கிராம்பு எண்ணெய்

கிராம்பு எண்ணெய்

கிராம்பு எண்ணெயும் பல் மற்றும் ஈறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவும். மேலும் இது ஓர் ஆன்டி-செப்டிக் பொருளாக வேலை செய்யும் மற்றும் கர்ப்ப காலத்தில் ஈறு பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Remedies For Teeth And Gum Problems In Pregnancy

In this article, we at Boldsky will be listing out some of the home remedies to prevent teeth and gum problems. Read on to know more about it.
Story first published: Thursday, April 7, 2016, 15:49 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter