Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க
கருத்தடை மாத்திரைகள் கருவை பாதிக்குமா?
கருத்தடை மற்றும் கருவுறுதல் குறித்த பல்வேறு சந்தேகங்களும், அவற்றிற்கான விளக்கங்களும் எழுந்து கொண்டே தான் இருந்கின்றன. கருவுறுதலுக்கு முன் எடுத்துக் கொள்ளப்படும் கருத்தடை மருந்துகளுக்கும், பிறப்புக் குறைபாடுகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என அண்மையில் வெளிவந்த ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.
இன்று பல பெண்கள் கருத்தடை மருந்துகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். அவை பெரும்பாலும் சரியாக வேலை செய்யும் என்றாலும் பல்வேறுபட்ட காரணங்களால் பெண்கள் கருவுற்றுவிடுகின்றனர்.
இதுப்போன்ற ஒரு சூழ்நிலையில், பெண்களுக்கு தங்கள் கருவிலுள்ள குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருக்குமா என்ற அச்சம் ஏற்படுவதுண்டு. ஆனால் இந்த ஆய்வு இந்த ஐயத்திற்கான விடையைத் தந்து பிறப்புக் குறைபாடுகளுக்கும் கருத்தடை மருந்துகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என விளக்குகிறது.

செயலிழக்க காரணம்
உண்மையில் கருத்தடை மாத்திரைகள் செயலிழப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. சில நேரங்களில் மருந்து உட்கொள்வது விட்டுப் போயிருக்கலாம் அல்லது எடுத்து க்கொள்ளப்படும் மற்றொரு மருந்துடன் கலந்து செயலிழந்து இருக்கலாம். மேலும் பல்வேறு உடல் நிலை காரணிகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். இதுப்போன்ற நேரங்களில் தான் கருத்தரிப்பு நிகழ்ந்துவிடுவதுண்டு.

குறைபாடில்லா குழந்தைகள்
இந்த ஆய்வு கருத்தடை மருந்துகள் உட்கொண்டு, பின் குழந்தை வேண்டி கருத்தரிக்கும் போது பிறக்கும் குழந்தைகள் எந்த விதக் குறைபாடுமின்றி சாதாரணமாகவே பிறக்கும் எனக் கருதுகிறது.

ஆய்வு
அதற்காக ஆய்வாளர்கள் குழந்தையின் பிறப்புக் குறைபாட்டிற்கும், கருத்தடை மருந்துகளுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதை அறிய ஆய்வினை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக பிறப்புக் குறைபாடு உள்ள மற்றும் இல்லாத குழந்தைகளின் பிறப்பிற்கு முன்னும் பின்னும் தாயின் நிலைகள் கூர்ந்து ஆராயப்பட்டது.

எட்டு லட்ச குழந்தைகள்
எட்டு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளைப் பற்றிய இந்த ஆய்வில் சுமார் இரண்டு சதவீதக் குழந்தைகள் பிறப்புக் குறைபாட்டுடன் இருந்தன. மேலும் பெரிய குறைபாடுகளையுடைய குழந்தைகளைப் பற்றி ஆய்வாளர்கள் ஆராய்ந்ததில் இவற்றின் தாய்மார்களில் கருத்தடை மருத்துகள் எடுத்துக் கொண்டவர்கள் மற்றும் எடுத்துக் கொள்ளாதவர்கள் சரிபாதியாக இருந்தனர். அதாவது இரு சாராரும் குறைபாடில்லாக் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். இவற்றிலிருந்து ஆய்வாளர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.

ஆய்வு முடிவு
இந்த ஆய்வு கருத்தடை மருந்துகள் உட்கொள்வதற்கும் பெரும் பிறப்புக் குறைபாடுகளுக்கும் தொடர்பில்லை என்ற முடிவினை வெளியிட்டது.



Click it and Unblock the Notifications
