Latest Updates
-
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா?
தான் கர்ப்பமானதை அழகிய முறையில் வெளிப்படுத்தி கணவனை கண்கலங்க வைத்த மனைவி!
ஒளியின் விளையாட்டில், நினைவுகளின் உயிரோட்டம், புகைப்படம் என்று கூறலாம். நாம் புகைப்படம் எடுத்த தருணத்தில் உணரும் மகிழ்ச்சியை விட பலமடங்கு மகிழ்ச்சியை அதை சில காலம் கழித்து மீண்டும் எடுத்து பார்க்கும் போது நாம் உணர்கிறோம்.
இன்று மொபைலில் ஆயிரக்கணக்கில் நாம் புகைப்படங்கள் எடுத்து வைத்தாலும் கூட, அந்த பழைய ஃபிலிம் புகைப்பட ஆல்பங்களை எடுத்துப் பார்க்கும் போது கிடைக்கும் ஆர்வமும், மகிழ்ச்சியும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
கணவன் மனைவி எனும் உறவில் இருந்து அப்பா, அம்மா எனும் ஸ்தானத்தை அடையும் அந்த தருணம் ஒவ்வொரு தம்பதி வாழ்விலும் இன்றியமையாத இன்ப ஊற்று பொங்கி எழும் நிகழ்வு. இந்த நிகழ்வை யாராலும் மறக்க முடியாது.
கருத்தரித்த அந்த அற்புத நிகழ்வை ப்ரி எனும் ஒரு பெண் தன் கணவனிடம் அழகிய முறையில் வெளிப்படுத்தி கண்கலங்க வைத்துள்ளார், சமந்தா பூஸ் எனும் பெண் புகைப்பட கலைஞரின் உதவியுடன்....

காட்சி: 1
புகைப்பட கலைஞர் சமந்தா பூஸ் மற்றும் கர்ப்பமான ப்ரி இருவரும் முன்கூட்டியே, தங்கள் துணையை பற்றி தாங்கள் நினைக்கும் மூன்று விஷயங்களை மூன்று வார்த்தைகளாக ஸ்லேட்டில் எழுதும்படி கூறி புகைப்படம் எடுக்க துவங்கினர்.

காட்சி: 2
கணவர் பிராண்டன்-க்கு தெரியாமல், தனது ஸ்லேட்டில் ப்ரி முன்கூட்டியே "நீங்கள் அப்பாவாக போகிறீர்கள்.." என எழுதி வைத்துவிட்டார்.

காட்சி: 3
பிராண்டன் தனது ஸ்லேட்டில் தனது மனைவி ப்ரி பற்றி லவ், கியூட், ஸ்வீட் :) என ஸ்மைலியுடன் எழுதி வைத்திருந்தார்.

காட்சி: 4
பிறகு, இருவரும் தாங்கள் எழுதியதை ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ள திரும்பிய போது ப்ரி எழுதி வைத்திருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தார் பிராண்டன்.

காட்சி: 5
தான் தந்தை ஆகப்போவதை உணர்ந்த அந்த நொடியில் இன்ப அதிர்ச்சியில் கண்கலங்கினார் பிராண்டன்.

காட்சி: 6
இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடி இருவரும் ஆனந்தத்தில் முத்தமிட்டுக் கொண்டனர்.



Click it and Unblock the Notifications
