கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபடலாமா?

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்ப காலம் மிகவும் சந்தோஷமான கட்டமாகும். ஆண்களுக்கும் தான். அதிலும் புதிதாக திருமணமாகி கருத்தரித்திருக்கும் போது ஒவ்வொரு தம்பதியருக்குள்ளும் ஓர் சந்தேகம் எழும். அது தான் கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா என்பது.

உண்மையில் கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக நிபுணர்களும் கூறுகின்றனர். மேலும் கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், இக்காலத்தில் பெண்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்றும் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபடுவது தாய்க்கும், சேய்க்கும் நல்லது. சரி, இப்போது கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீவிர உச்சக்கட்ட இன்பம்

தீவிர உச்சக்கட்ட இன்பம்

கர்ப்ப காலத்தில் இருவகையான ஹார்மோன்களின் சுரப்பு அதிகம் இருக்கும். அவை ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன். எப்போது உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறதோ, அப்போது பிறப்புறுப்பு பகுதிகளில் இரத்த ஓட்டம் அதிகம் இருந்து, ஒரு பெண் தீவிர உச்சக்கட்ட இன்பத்தை அடைவாள்.

எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும்

எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும்

பிரசவத்திற்கு பின் பெண்கள் மிகவும் குண்டாவார்கள். ஆனால் கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால், உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும். ஏனெனில் உடலுறவு என்பது ஒரு வகையான உடற்பயிற்சி தானே.

இரத்த அழுத்தம் குறையும்

இரத்த அழுத்தம் குறையும்

கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, இரத்த அழுத்தம் குறையும். எனவே கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்த பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், உடலுறவில் ஈடுபடுங்கள்.

நல்ல வலி நிவாரணி

நல்ல வலி நிவாரணி

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கை, கால் மற்றும் இதர இடங்களில் வலிகள் ஏற்படும். இப்படி வலிக்கும் போது கண்ட மாத்திரைகளைப் போட்டால், கருவிற்கு தீங்கு நேரும். ஆனால் உடலுறவில் ஈடுபடுவதால், அந்த வலிகள் வருவது தடுக்கப்படும்.

நல்ல நிம்மதியான தூக்கம்

நல்ல நிம்மதியான தூக்கம்

கர்ப்பமாக இருக்கும் போது பெண்களால் சரியான தூக்கத்தைப் பெற முடியாது. ஆனால் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம், நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.

நோயெதிர்ப்பு சக்தி வலிமையடையும்

நோயெதிர்ப்பு சக்தி வலிமையடையும்

கர்ப்ப காலத்தில் பெண்களின் நோயெதிர்ப்பு சக்தி மோசமாக இருக்கும். ஆனால் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும் IgA ஆன்டிபாடிகளின் அளவு அதிகரிக்கும். இதன் மூலம் கர்ப்ப காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்கலாம்.

ஏற்ற இறக்கமான மனநிலை

ஏற்ற இறக்கமான மனநிலை

கர்ப்ப காலத்தில் ஏற்ற இறக்கமான மனநிலை இருக்கும். ஆனால் உடலுறவில் ஈடுபடும் போது உச்சக்கட்ட இன்பத்தை அடைவதால், உடலில் நல்ல மனநிலையை உணரச் செய்யும் எண்டோர்பின்கள் அதிகமாக உற்பத்தியாகும்.

கழிவறை செல்வது குறையும்

கழிவறை செல்வது குறையும்

கர்ப்பமாக இருக்கும் போது அடிக்கடி சிறுநீர் கழிக்க கழிவறை செல்ல நேரிடும். அதுவே உடலுறவில் ஈடுபட்டால், இடுப்புத் தசைகள் வலிமை அடைவதோடு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலையும் இருக்காது.

இரத்த ஓட்டம் மேம்படும்

இரத்த ஓட்டம் மேம்படும்

கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகுந்த சோர்வை உணர்வதற்கு முக்கிய காரணம் உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருப்பது தான். ஆனால் இக்காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம், உடலில் ஒருசில ஹார்மோன்கள் வெளியிடப்படுவதோடு, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

சிக்கல்கள் குறையும்

சிக்கல்கள் குறையும்

மற்றொரு முக்கியமான நன்மை, கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படுவது தடுக்கப்படும். அதாவது முன்சூல்வலிப்புகள் தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits Of Intercourse While Pregnant

Do you know the many benefits of intercourse while pregnant? Here are some of the reasons why you & your partner should simply enjoy making love.
Story first published: Wednesday, February 10, 2016, 15:47 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter