Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
கர்ப்பமாக இருக்கும் போது வைட்டமின் ஏ உணவை ஏன் அதிகம் சாப்பிடக்கூடாது?
வைட்டமின் "ஏ" ஒரு குழந்தையின் சிறுநீரகம், கண்கள், இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம் மற்றும் உடலின் உட்புற சுற்றுப்பாதை உள்ளிட்ட பல்வேறு உடற்கூறுகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாத கொழுப்பில் கரையக் கூடிய ஊட்டச்சத்தாகும். இந்த வைட்டமின் கர்ப்பிணிப் பெண்களின் பிள்ளைப் பேற்றிற்குப் பிறகு திசுக் குறைப்பாடுகளை சரிசெய்யவும் உதவுகிறது. மேலும் இது உடம்பில் பல்வேறு கிருமித்தொற்றுக்களுக்கு எதிராகப் போராடவும் நல்ல கண் பார்வையைப் பராமரிக்கவும் உதவுகிறது.
ஆனால் கர்ப்பத்தின் போது வைட்டமின் ஏ பற்றிய பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை குறித்த பல்வேறு விவரங்களை நீங்கள் கேட்டிருக்கலாம். கர்ப்பிணிகள் தாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய வைட்டமின்கள் மற்றும் உணவுகளைக் குறித்து நன்கு அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பாதுகாப்பான உணவுகள் மற்றும் வைட்டமின்கள் கூட கர்ப்பத்தின் போது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதாதவும், கருக்கலைப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் கூட இருக்கும் என்பதால் கவனம் தேவை.
ஆகவே வைட்டமின்கள் அல்லது வைட்டமின்கள் செறிந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளும் முன் அவற்றைப் பற்றி அறிந்து கொண்டிருப்பதோ அல்லது ஒரு மருத்துவரிடம் அதுப் பற்றி ஆலோசனைப் பெறுவதோ மிகவும் அவசியம்.
வைட்டமின் ஏ அல்லது இந்தச் சத்தை கொண்டுள்ள உணவுகள் கர்ப்பத்தின் போது பாதுகாப்பானதா என்பதைப் பற்றி உங்களுக்கு விளக்கமளிக்கிறோம். அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கர்ப்ப காலத்தின் போது வைட்டமின் ஏ ஆபத்தானதா?
கர்ப்பத்தின் முதல் சில மாதங்களின் போது அதிக அளவில் வைட்டமின் ஏ எடுத்துக் கொள்வதால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு மூளை, இதயம், தலை மற்றும் முதுகெலும்பு ஆகியவற்றின் வளர்ச்சியில் குறைபாடுகளை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

எவ்வளவு எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது?
ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் அளவாக 8,000 IU என்ற அளவு பரிந்துரைக்கப்படுகிறது. இதுவே 10,000 IU-விற்கும் அதிகமானால் பிறக்கும் குழந்தைக்கு அது ஆபத்தாக முடியலாம்.

வைட்டமின் ஏ வகைகள் மற்றும் அவற்றில் எது தீங்கு விளைவிக்கும் ?
வைட்டமின் ஏ-வில் இருவகை உண்டு. ஒன்று பீட்டா-கரோட்டின், மற்றொன்று ரெட்டினாய்டு. பீட்டா கரோட்டின் என்பது நீரில் கரையக்கூடிய செயலற்ற வைட்டமின் ஏ வகை. இவை தாவரங்களில் இருந்து பெறப்படும். இது கர்ப்ப காலத்தின் போது எவ்வித தீங்கையும் விளைவிக்காது.

இன்னொரு வகை தீங்கானதா?
முன்பே கூறியது போல இரண்டாவதான ரெட்டினாய்டு வகை வைட்டமின் ஏ, விலங்குகளிலிருந்து அதாவது அவற்றின் ஈரல், முட்டைக் கரு மற்றும் பால் பொருட்களிலிருந்து கிடைக்கிறது. இவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது வயிற்றிலுள்ள குழந்தைக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். மாத்திரை, காப்ஸ்யூல்கள் அல்லது மருந்து வடிவில் கிடைக்கும் வைட்டமின் ஊட்டச்சத்துக்களும் கர்ப்பத்தின் போது தீங்கை விளைவிக்கலாம்.

கர்ப்பத்தின் போது எந்த வகை வைட்டமின் ஏ பாதுகாப்பானது?
FDA எனப்படும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கர்ப்பிணிகளுக்கு தாவரங்களிலிருந்து பெறப்படும் பீட்டா கரோட்டின் வகை வைட்டமின் ஏ உகந்தது என பரிந்துரைக்கிறது. அதாவது, தாவர வைட்டமின் ஏ, கர்ப்பத்தின் போது தீங்கற்ற ஒன்று. பீட்டா கரோட்டின் உடலில் வைட்டமின் ஏ-வாக மாற்றப்படுகிறது. நீங்கள் கர்ப்பமுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது ஏற்கனவே கர்ப்பமடைந்திருந்தாலோ தாவரத்தின் மூலம் (காய்கறி மற்றும் பழங்கள்) கிடைக்கும் வைட்டமின் ஏ தீங்கற்றது.

மிகவும் குறைந்த அளவில் வைட்டமின் எடுத்துக் கொள்வது உதவுமா?
அதிகம் வைட்டமின் ஏ சாப்பிடுவது தீங்கானது என்பதை இப்போது தெரிந்து கொண்டுவிட்டோம் அல்லவா? அதனால் அதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும் என்று முடிவுகட்டிவிடாதீர்கள். வைட்டமின் ஏ குறைபாடு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு அதிக வைட்டமினால் ஏற்படும் அதே விளைவுகளுக்கு வழிவகுக்கும். எனவே சரியான அளவுகள் அவசியம்.

விலங்குகளின் ஈரல் மற்றும் பிற விலங்குகளிடமிருந்து பெறப்படும் வைட்டமின் ஏ-வை ஒதுக்கிவிடலாமா?
ஈரல், முட்டை கரு மற்றும் பால் பொருட்கள் ரெட்டினாய்டு எனப்படும் ஆயத்தமான வைட்டமின் ஏ-வைக் கொண்டுள்ளதால் இவற்றின் மூலம் கிடைக்கும் வைட்டமின் ஏ சத்தை குறைந்த அளவுகளில் எடுத்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications