Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பிரசவக் காலத்தில் ஏற்படும் ஏழு தர்மசங்கடமான விஷயங்கள்!!!
பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் அடுத்த பிறவி என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். வலி மிகுந்த இந்த பிரசவக் காலத்தில் தனது அன்பிற்குரிய குழந்தையோடு வலியும் சேர்த்து சுமக்கிறாள் ஓர் பெண். இது போதாதென்று, பெண்களுக்கு பிரசவக் காலத்தில் சில தர்மசங்கடமான விஷயங்கள் நடக்கும்.
ஹார்மோன் செயல்பாடுகள் பிரசவக் காலத்தின் போது அதிமாக, வேகமாக இருக்கும். இதனால், உடலில் சில செயல்பாடுகள் வேகமாகவும், சில செயல்பாடுகள் திறன் குறைவாகவும் நடக்கின்றன. இவற்றால் தான் கர்ப்பிணி பெண் பிரசவக் காலத்தில் சில தர்மசங்கடமான விஷயங்களை எதிர்கொள்ள நேரிடுகிறாள்...

சிறுநீர் கசிவு
பெரும்பாலான பெண்கள் சிறுநீர் கசிவது போல உணர்வது உண்டு. ஓர் பெண் கருத்தரிக்கும் போது, அவரது இடுப்பு பகுதி தசைகள் வலுவிழக்கிறது, இதன் காரணத்தினால் சிறுநீர் கசிவு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. தும்மல், இருமல் ஏற்படும் போது கூட சிறுநீர் கசிவு ஏற்படலாம். இது பிரசவிக்கும் வரை இருக்கும்.

முகப்பரு
பிரசவக் காலத்தில் ஹார்மோன்கள் வேகமாக வேலை செய்யுமாம். இதனால் முகப்பருக்கள் வர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. பிரசவித்த பிறகு இது தானாக சரியாகிவிடும், எனவே, இதற்கென தனியாக மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

மலம் கழித்தல்
80% கர்ப்பிணி பெண்களுக்கு மலம் கழித்தலில் பிரச்சனை ஏற்படுகிறது. இரண்டாவது, மற்றும் மூன்றாவது மூன்று மாத சுழற்சியில் குடல் இயக்கம் கொஞ்சம் திறன் குறைவாக நடக்கும். இதனால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

புணர்புழை வெளியேற்றம்
மிகவும் தர்மசங்கடமான விஷயங்களில் இதுவும் ஒன்று. மூன்றாவது மூன்று மாத சுழற்சியில் புணர்புழை வெளியேற்றம் (Vaginal Discharge) ஏற்படும். மிகவும் முடியாமல் கருதுவோர் மருத்துவரிடம் பரிசோதித்து அதற்கேற்ப நடந்துக் கொள்வது சரியானது.

வாயுத்தொல்லை
குடல் இயக்கத்தின் திறன் குறைபாடினால், வாயுத்தொல்லை ஏற்படும். செரிமானம் சரியாக நடக்காமல் இருப்பது தான் இதற்கான காரணம் ஆகும். எனவே, இந்த நேரத்தில் வாயு அதிகமான உணவுகளை சாப்பிட வேண்டாம்.

முடி வளர்ச்சி
பிரசவக் காலத்தில் ஹார்மோன் வேகமாக செயல்படுவதால், முடியின் வளர்ச்சியும் வேகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

உடல் எடை அதிகரிப்பு
குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக உடல் எடை அம்மாக்களுக்கு அதிகரிக்கும். இது இயற்கையான ஒன்று. இதன் பிறகு நீங்கள் சரியான டயட்டில் இருந்தால், சில மாதங்களில் மீண்டும் நீங்கள் பழைய நிலைக்கு வந்துவிடலாம்.



Click it and Unblock the Notifications
