For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணி பெண்கள் தூக்கமின்றி அவதிப்படுவதற்கான காரணங்கள் என்ன?

|

உங்கள் மனைவி, அல்லது சகோதரி பிரசவக்காலத்தில் தூக்கமின்றி அவதிப்படுவதை நீங்கள் கண்கூட கண்டிருக்கலாம். இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. அதிலும் நிறைமாத கர்பிணிப் பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் அவதிப்படுவார்கள்.

குழந்தையில்லா தம்பதிகளுக்கான... கருவுறாமையை சமாளிக்க புதிய விந்து பகுப்பாய்வு சோதனை!

இவர்கள் கஷ்டப்படுவதை கண்டால் உடன் இருப்பவர்களுக்கு கூட உறக்கம் வராது. குழந்தை பிறக்கும் வரைக்கும் தூக்கமின்றி அவதிப்படும் தாய்மார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதிலும் முதல் பிரசவம் என்றால் அவர்களுக்கு பயமும் தொற்றியிருக்கும். இதன் காரணமாக, கொஞ்சம் திரும்பினால் கூட குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று தூக்கத்தை தொலைத்துவிடுவார்கள் இளம் தாய்மார்கள்.

கர்ப்பிணி பெண்களுக்கு குங்குமப்பூ அளிக்கும் 6 முக்கிய நன்மைகள்!!!

இனி, கர்ப்பிணி பெண்கள் தூக்கமின்றி அவதிப்படுவதன் காரணங்கள் குறித்து பார்க்கலாம்....

கருவறையில் இருக்கும் குழந்தையின் வியப்பூட்டும் செயல்பாடுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீர் பிரச்சனை

சிறுநீர் பிரச்சனை

கர்பமாக இருக்கும் பெண்களுக்கு குடல் இயக்க பிரச்சனை ஏற்படுவது இயல்பு என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மற்றும் உடல் எடை , அழுத்தம் போன்ற காரணத்தினால் அவ்வப்போது சிறுநீர் வந்துக் கொண்டே இருக்கும். இதனால் கூட அவர்களது தூக்கம் பாதிக்கிறது.

தூங்கும் நேரத்தில் பிரச்சனை

தூங்கும் நேரத்தில் பிரச்சனை

பெரும்பாலும் கர்பமாக இருக்கும் பெண்கள் மதியம் மற்றும் மாலை வெளிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் தூங்குவது இயல்பு. இதன் காரணாமாக அவர்களது இரவு நேர தூக்கம் பாதிக்கப்படுகிறது.

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை

பெண்களுக்கு கர்ப்பம் தரித்த முதன்மை காலத்தில் குமட்டல் ஏற்படும் போதே, குடல் இயக்க திறனில் இயல்பாக சிறிய குறைபாடு ஏற்படும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் நெஞ்செரிச்சல், வாயு போன்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படலாம். இதை தவிர்க்க சரியான காய்கறி, பழங்கள் மற்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அசௌகரியம்

அசௌகரியம்

மாதாமாதம் குழந்தையின் வளர்ச்சியால் வயிறு பெரிதாக ஆரம்பிக்கும். வயிறு பெரிதாக இருப்பதால் அவர்களால் சௌகரியமாக படுத்து உறங்க முடியாது. மற்றும் திரும்பி படுக்கும் போது கருவில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற அவர்களது அச்சமும் கூட தூக்கம் களைவதற்கு ஓர் காரணமாக இருக்கிறது.

குறட்டை

குறட்டை

திடீரென உடல் எடை அதிகரிப்பதால் குறட்டை பிரச்சனை ஏற்படும். இது இயல்பு. கர்பிணி பெண்கள் தூக்கமின்றி தவிப்பதற்கு இதுவும் கூட ஓர் காரணமாக இருக்கிறது.

சிசுவின் திருவிளையாடல்

சிசுவின் திருவிளையாடல்

தாய் அசையாமல் இருக்கும் போது, கருப்பையில் வளரும் கரு அசைந்து ஆட ஆசைப்படுமாம். அதிலும் தூங்கும் வேளைகளில் தான் கால்பந்து ஆடுவது, நடனமாடுவது போன்ற திருவிளையாடல்களில் ஈடுபடுகிறார்கள். இதுவும் கூட ஓர் காரணமாக கூறப்படுகிறது.

தாய்மார்களின் பயம்

தாய்மார்களின் பயம்

இதற்கெல்லாம் மேல், முதன்மை காரணமாக கருதப்படுவது பிரசவம் குறித்த தாய்மார்களின் பயம் என்று கூறுகிறார்கள். இதற்கு கருவில் வளரும் சிசுவின் மேல் தாய் வைத்திருக்கும் அன்பும் கூட ஓர் காரணம். தன்னால் சிசுவிற்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற தாயின் அக்கறை தான் மாதங்கள் கூட தூக்கத்தை தொலைக்க அவளை தூண்டுகிறது.

குழந்தைகள் கருத்தில்கொள்ள வேண்டியது

குழந்தைகள் கருத்தில்கொள்ள வேண்டியது

பிறக்கும் முன்னரே தனது குழந்தைக்காக இவ்வளவு தியாகம் செய்யும் தாயை, முதுமை காலத்தில் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பிள்ளைகள், இதை கருத்தில் கொண்டு, அவர்களை அரவணைப்போடு வைத்துக்கொள்ள முயல வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Reasons You Can’t Sleep When Pregnant

Do you know about the seven you can't sleep when pregnant? read here.
Desktop Bottom Promotion