பிரசவம் குறித்து மருத்துவரிடம் கேட்க சங்கோஜப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும்!!!

Posted By:
Subscribe to Boldsky

என்னதான் மகப்பேறு மருத்துவர் என்றாலும் கூட கருத்தரிப்பு, பிரசவம் சார்ந்த சில கேள்விகளை நேரடியாக கேட்க பலர் தயங்குவது உண்டு. அப்படிப்பட்ட, மகப்பேறு மருத்துவரிடம் நீங்கள் கேட்க சங்கோஜமடையும் கேள்விகளுக்கான பதில்கள் இங்கு கூறப்பட்டுள்ளது....

மேலும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை...

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று தெரிந்து கொள்ள ஆசையா?

சுகப்பிரசவம் எளிமையாக நடைபெறுவதற்கான சில எளிய டிப்ஸ்...

கருத்தரிக்க விரும்பும் தம்பதியர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

தொப்புள் கொடியைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரசவத்தின் போது குடல் இயக்கம் இருக்குமா?

பிரசவத்தின் போது குடல் இயக்கம் இருக்குமா?

பலருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது, பிரசவிக்கும் போது குடல் இயக்கத்தினால் மலம் வெளிப்பட வாய்ப்பு இருக்கிறதா என்று. வாய்ப்புகள் இருக்கிறது, நீங்கள் பிரசவிக்க முயற்சித்து அழுத்தம் தரும் போது, ஒருவேளை ஏற்படலாம். பிரசவ அறையில் இருக்கும் அனைவரும் உங்கள் உதவிக்கும், துணைக்காக தான் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

பிறப்புறுப்பில் நீட்டிப்பு ஏற்படுமா?

பிறப்புறுப்பில் நீட்டிப்பு ஏற்படுமா?

குழந்தை பிறக்கும் போது, பிறப்புறுப்பு அகலமாக திறப்பதால் நிறைய பெண்கள் தங்களது பிறப்புறுப்பு வாய் நீட்டிப்பு ஏற்படுமோ என்று அச்சம் கொள்கின்றனர். ஆனால், இது தேவையில்லாதது. அவ்வாறான பிரச்சனைகள் ஏற்படாது. இயற்கையாகவே பெண்களின் பிறப்புறுப்பு எலாஸ்டிக் போன்றது, இது தானாக பிரசவத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

உடல் எடை அதிகரித்துவிடுமா?

உடல் எடை அதிகரித்துவிடுமா?

பிரசவத்தின் போது உடல் எடை சரியாக இருக்க வேண்டியது அவசியம். நிறைய பெண்கள், பிரசவத்தின் முன்பு உடல் எடை குறித்த கேள்விகள் கேட்க தயங்குகிறார்கள். உண்மையில், ஒல்லியாக, ஸ்லிம்மாக இன்றி கொஞ்சம் உடல் எடை அதிகம் இருப்பது தான் குழந்தையின் நலனுக்கு நல்லது.

சிறுநீர்ப்பை கட்டுப்பாடு இழக்கக்கூடுமா?

சிறுநீர்ப்பை கட்டுப்பாடு இழக்கக்கூடுமா?

கண்டிப்பாக பிரசவத்திற்கு பிறகு சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டில் குறைபாடு இருக்கும். இது இயல்பு தான். வலுகுறைந்து இருப்பதால் இவ்வாறு ஏற்படுகிறது. இந்நிலை தொடர்ந்து இருந்தால், மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.

பிரசவத்தின் போது உடலுறவு சரியா? தவறா? கணவரிடம் என்ன கூற வேண்டும்?

பிரசவத்தின் போது உடலுறவு சரியா? தவறா? கணவரிடம் என்ன கூற வேண்டும்?

பிரசவ காலத்தின் போது உடலுறவில் ஈடுபட்டால் குழந்தைக்கு ஏதேனும் பதிப்பு ஏற்படுமா என நிறைய பேர் அஞ்சுகிறார்கள். ஆனால், பிரசவத்தின் போது உடலுறவில் ஈடுபடுவதால் தாய்க்கும், சேய்க்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது. ஆயினும் மூன்றாவது மூன்று காலத்தின் இதை தவிர்ப்பது நல்லது. மற்றும் முன்னராக இருப்பினும் கூட, கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலையை, நலன் பொருத்து ஈடுபட வேண்டியது அவசியம்.

பிரசவத்திற்கு பிறகு உடலுறவு ஏன் மிகவும் வலியுடன் இருக்கிறது?

பிரசவத்திற்கு பிறகு உடலுறவு ஏன் மிகவும் வலியுடன் இருக்கிறது?

பிரசவத்தின் போது அவ்விடத்தில் சில அதிர்வுகள் ஏற்படும். அது ஆற வேண்டும். அதுவரை உடலுறவு கொண்டால் வலி ஏற்படும். மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும், இதுவும் கூட வலி ஏற்பட ஓர் காரணம் ஆகும். ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் இது சரியாகிவிடும்.

பிரசவத்தின் போது அதிகமான இரத்தப்போக்கு சரியானது தானா?

பிரசவத்தின் போது அதிகமான இரத்தப்போக்கு சரியானது தானா?

உங்களது இடுப்பு பகுதியில் அதிகமான இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் நீங்கள் பிரசவத்தின் போது கொடுக்கும் அழுத்தம் இவ்வாறு இரத்தப்போக்கு அதிகமாக காரணமாக இருக்கும். இது இயல்பு தான். ஆயினும், இரத்தப்போக்கின் போது வலி, எரிச்சல் போன்று ஏற்பட்டால் மருத்துவரிடம் கூறுங்கள், ஒருவேளை தொற்று ஏதாவது ஏற்பட்டிருந்தால் தான் இதுப்போன்ற வலி அல்லது எரிச்சல் ஏற்படும்.

பிரசவத்தின் போது வாயு மற்றும் செரிமானக் கோளாறு ஏற்படுவது சாதாரணம் தானா?

பிரசவத்தின் போது வாயு மற்றும் செரிமானக் கோளாறு ஏற்படுவது சாதாரணம் தானா?

பிரசவ காலத்தின் போது வாயு மண்டலத்தில் திறன்பாட்டில் குறைபாடு ஏற்படும். இது உங்களுக்கு குமட்டல் ஏற்படும் போதே ஆரம்பித்துவிடுகிறது. 85% பெண்கள் பிரசவத்தின் போது இவ்வாறு உணர்வது உண்டு. இது முற்றிலும் சாதாரணம் தான். எனவே, பயப்பட அவசியம் இல்லை.

 செரிமான பிரச்சனைக்கு தீர்வுக் காண என்ன செய்ய வேண்டும்?

செரிமான பிரச்சனைக்கு தீர்வுக் காண என்ன செய்ய வேண்டும்?

நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுகளை சரியான அளவு உட்கொள்ள வேண்டியது அவசியம். மற்றும் கட்டாயமாக நிறைய நீர் பருக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pregnancy Questions You're Uncomfortable Asking Your OB-GYN

Pregnancy Questions You're Uncomfortable Asking Your OB-GYN