Latest Updates
-
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்!
கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று பற்றிய சில தகவல்கள்!!!
பெரும்பாலான பெண்கள் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றினால் அவதிப்படுகின்றனர். ஆனால், கர்ப்பமான பெண்களில் பொதுவாக வரக்கூடிய நோய் இதுவாகும். ஒரு பெண் கர்ப்பம் அடையும் போது, அவரது உடலுக்குள் கர்ப்ப ஹார்மோன் உருவாகிறது, இது அந்த பெண்ணின் சிறுநீர் பாதையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
பெண்ணின் கருப்பை வளரும் போது, இது சிறுநீர்ப்பையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சிறுநீர்ப்பையில் இருந்து முழுமையாக சிறுநீர் வெளியேற்றுவதைத் இது தடுக்கிறது. இதனால், சிறுநீர்ப்பையில் தேங்கி நிற்கும் சிறுநீர், நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஒரு நல்ல காரணியாகும். ஆரம்பத்திலே நீங்கள் இதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால், இது சிறுநீரகத்தில் கூட நோய்த்தொற்றை ஏற்படுத்தும்.

எனவே கர்ப்ப காலத்தில் இந்நோய் பற்றி பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியமாகும். கர்ப்ப காலத்தின் போது, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்படுவற்கான காரணங்களை இங்கு பார்ப்போம்.
* மலம் கழித்தவுடன், யோனிக் குழாயினுள் மலம் கழுவப்படுதல்/துடைக்கப்படுதல்
* உடலுறவு
* கர்ப்பம் காரணமாக கருப்பை விரிவடைவதால், இது சிறுநீர்ப்பையில் பாதி அடைப்பை ஏற்படுத்துகிறது.
* கேதிட்டர்கள் பயன்படுத்துவது
இதன் சில அறிகுறிகள் பின்வருமாறு:
* சிறுநீர் கழிக்கும் போது, எரிச்சல் உணர்வு
* சிறுநீர் கழிக்கும் போது அசெளகரியம் மற்றும் கஷ்டம்
* தெளிவற்ற சிறுநீர்/மங்கலான சிறுநீர்
* துர்நாற்றத்துடன் கூடிய சிறுநீர்
* அடிக்கடி சிறுநீர் கழித்தல்
* சிறுநீர் கழிக்கும் போது அவசர உணர்வு
* கீழ் முதுகுப்பக்க அடிவயிற்றில் தசைப்பிடிப்பு
சிறுநீர்ப்பைத் நோய்தொற்றுக்கான அறிகுறிகள்:
சிறுநீர்ப்பை நோய்த்தொற்று காரணமாக, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்பட்டால், பின்வரும் அறிகுறிகள் தோன்றும்.
சிறுநீர் நிறமாற்றம்
அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்
சிறுநீர் கழிக்கும் போது வலி
துர்நாற்றம்
தேனிலவு சிறுநீர்ப்பை அழற்சி அறிகுறிகள்:
சில உடல்நிலைகள் காரணமாக, உங்கள் தேனிலவு பாதிகப்படும். செக்ஸ் செயல்பாடுகள் காரணமாக, ஒரு பெண்ணின் சிறுநீர்க் குழாயினுள் பாக்டீரியா சென்றுவிடுகிறது. இது தேனிலவு சிறுநீர்ப்பை அழற்சி (ஹனிமூன் சிஸ்டைடிஸ்) எனப்படுகிறது. சில பெண்கள் அடிக்கடி சிறுநீர்த் பாதை நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். அவர்கள் செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடும் போதெல்லாம், அவர்களுக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுவிடுகிறது. குடும்பக்கட்டுப்பாட்டு செயல்முறைகளில், டயஃபிராம் பயன்படுத்தும் பெண்களில் இது பொதுவாக ஏற்படுவதாக தெரிகிறது.
சிறுநீரக நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள்:
வாந்தி, குளிர் காய்ச்சல், கீழ்புற முதுகின் ஏதாவது ஒரு பக்கத்தில் வலி, குமட்டல் போன்றவை சிறுநீரக நோய்த்தொற்றுக்கான அறிகுறிகளாகும்.
சிறுநீர்ப்பை நோய்தொற்றுக்கான வீட்டு வைத்தியங்கள்:
ப்ளூபெர்ரி
பாக்டீரியாவைத் தடுக்கும் சிறந்ததொரு பண்பு ப்ளூபெர்ரிக்கு உண்டு. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, கர்ப்பமான பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்ப்பைத் நோய்த்தொற்றைத் தடுப்பதற்கு, ப்ளூபெர்ரி ஜூஸ் மிகவும் சிறந்தது என கூறப்பட்டுள்ளது. அதிலும் காலை உணவுடன் இந்தப் பழத்தை ஜூஸ் வடிவில் நீங்கள் குடிக்கலாம்.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தில் பாக்டீரியாவை எதிர்க்கும் சிறந்த பண்பு உள்ளதால், உண்மையில் இது சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுக்கான சிகிச்சைக்கு மிகவும் சிறந்தது. அன்னாசிப்பழத்தில் புரோமலைன் எனப்படும் ஒரு பதார்த்தம் உள்ளது, இது சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுக்கான சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளது. காலை உணவுடன் அல்லது மதிய உணவிற்குப் பின்னர் நீங்கள் அன்னாசியை பழமாகவே சாப்பிடலாம். அதேப்போல் மிக்ஸியில் அடித்து ஜூஸ் வடிவிலும் ஒரு முழு டம்ளர் குடிக்கலாம்.
வைட்டமின் சி
மீண்டும் மீண்டும், அடிக்கடி, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்படும் நோயாளி ஒருவருக்கு, டாக்டர்கள் 5000 மிகி வைட்டமின் சி சாப்பிடுமாறு பரிந்துரைப்பார்கள். சிறுநீரை அமிலப்படுத்தும் வைட்டாமின் சி-யின் பயன் காரணமாக உங்கள், சிறுநீர்ப்பை ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் சிறுநீர்ப்பையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு போதுமான அளவு வைட்டமின் சி எடுத்துக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications


