Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் சோர்வை தடுக்கும் சில வழிகள்!!!
கர்ப்பத்தின் போது பெண்களுக்கு உடலில் சோர்வானது அதிகம் இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் பெண்களின் உடலானது அதிகப்படியான சுமையை சுமப்பதால், மிகுந்த சோர்வை உணர்வார்கள். இருப்பினும் பெண்களின் வாழ்க்கையிலேயே மிகவும் அருமையான மற்றும் என்றும் மறக்க முடியாத ஒரு காலகட்டம் தான் கர்ப்ப காலம்.
இக்காலத்தில் எத்தகைய பிரச்சனைகளை பெண்கள் சந்தித்தாலும், அதிலும் ஒரு சுகம் இருக்கும். பொதுவாக பெண்கள் கர்ப்ப காலத்தில் சோர்வை சந்திப்பதற்கு சுமை மட்டுமின்றி, ஹார்மோன் மாற்றங்கள், அதிகப்படியான வீட்டு வேலை, உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பது, குமட்டல் என்று சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சோர்வை போக்கும் உணவுகள்!!!
இருப்பினும் இத்தகைய சோர்வை சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். இப்போது இந்த சோர்வை நீக்க வேண்டுமானால் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!!

ஓய்வு
கர்ப்பிணிகளுக்கு ஓய்வு மிகவும் முக்கியமானது. இதனால் உடல் மற்றும் மனம் மிகவும் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். குறிப்பாக அப்படி ஓய்வு எடுக்கும் போது, பாட்டு கேட்பது, புத்தகம் படிப்பது என்று பிடித்தது எது வேண்டுமானாலும் செய்யலாம்.

சரியான டயட்
கர்ப்பிணிகள் நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதுவும் போதிய அளவில் உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சேர்த்து கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டும். இதனால் குழந்தை பிறக்கும் போது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சோர்வும் நீங்கும்.

நீர் மிகவும் அவசியம்
எப்போதுமே தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்று. கர்ப்பிணிகள் போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டாலும், உடலில் சோர்வு ஏற்படும். எனவே தினமும் 8-10 டம்ளர் தண்ணீரை கர்ப்பிணிகள் குடிக்க வேண்டும். இதன் மூலம் நிச்சயம் சோர்வைப் போக்கலாம்.

போதிய நிம்மதியான தூக்கம்
சரியான தூக்கம் இல்லாவிட்டாலும் கர்ப்பிணிகள் சோர்வை உணர்வார்கள். அதுமட்டுமல்லாமல் ஹார்மோன்களின் மாற்றத்தினால், கர்ப்பிணிகளால் இரவில் நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள முடியாது. எனவே அத்தகையவர்கள் பகல் நேரத்தில் தூக்கத்தை மேற்கொள்ளலாம். இதனால் உடலுக்கு வேண்டிய ஓய்வு கிடைத்து, உடல் சோர்வானது நீங்கும்.

உடற்பயிற்சி
கர்ப்பிணிகள் சோர்வாக இருக்கும் போது, உடற்பயிற்சி செய்தால், இன்னும் சோர்வாகுமே என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையில் உடல் சோர்வுடன் இருக்கும் போது செய்தால், உடல் புத்துணர்ச்சி அடைந்து, உடல் சோர்வானது நீங்கும்.

மருத்துவரை சந்திக்கவும்
கர்ப்ப காலத்தில் சோர்வடைவது சாதாரணம். ஆனால் இதே சமயம், உடலில் வேறு எந்த பிரச்சனைகள் இருந்தாலும், அதற்கும் இதுவே பொதுவான அறிகுறியாக இருப்பதால், ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமான சோர்வை உணரும் போது மருத்துவரை சந்தித்து, அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வதும் நல்லது.



Click it and Unblock the Notifications