Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கருவறையிலிருந்தே குழந்தைகளுக்கு ஞாபக சக்தி இருக்கிறதாம்! - ஆய்வில் தகவல்
கர்ப்பிணிப் பெண்களை அதிகம் அதிர வைக்கக் கூடாது, அவர்கள் முன்னிலையில் யாரும் சத்தம் போடக் கூடாது, வன்முறையில் ஈடுபடக் கூடாது ஆகியவை பொதுவாகவே நம் இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிப் போன விஷயம். கருவில் உள்ள குழந்தையை இதுபோன்ற சம்பவங்கள் கடுமையாகப் பாதிக்கும் என்பதே இதற்குக் காரணம்.
இன்னும் சொல்லப் போனால், சில சமூகங்களில் கருவில் உள்ள குழந்தைக்கு மந்திரம் கூட ஓதப்படுகிறது. இந்த மந்திரங்களை அந்தக் குழந்தை நன்றாகக் கிரகித்துக் கொள்ளும் என்று அந்த சமூகத்தினர் நம்புகின்றனர்.
அப்படியானால், கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஞாபக சக்தியும் இருக்குமா? கருவின் உள்ளே இருக்கும் போதே அவர்களுக்கு ஞாபக சக்தி கிடைத்து விடுகிறதா? ஆம் என்று தான் சில ஆய்வுகள் கூறுகின்றன. கருவில் உள்ள குழந்தைக்கு ஞாபக சக்தி உண்டு என்றால் ஆச்சரியம் தான்! இது முழுமையாக நிரூபிக்கப்படும் வரை ஆய்வுகள் தொடரும்.

'டாடாடா' ஆய்வு
இதற்காக ஃபின்லாந்து நாட்டில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. சில கர்ப்பிணிப் பெண்களுக்கு 'டாடாடா' என்ற ஒரு புரியப்படாத வார்த்தை தினந்தோறும் 25,000 முறை கூறப்பட்டது. கரு வளர்ச்சியின் ஒரு பகுதியான மூளை வளரத் தொடங்கும் 29வது வாரத்திலிருந்து குழந்தை பிறக்கும் வரை இவ்வாறு கூறப்பட்டது.
பின்னர் அந்தக் கர்ப்பிணிகளுக்குப் பிறந்த குழந்தைகளைப் பரிசோதித்தனர். அந்த 'டாடாடா' வார்த்தையைக் கூறிய போது, அந்தக் குழந்தைகள் அருமையாக ரெஸ்பான்ஸ் கொடுத்ததாக அவற்றின் மூளைப் பதிவுகள் தெரிவித்தன.

என் தாய்
ஞாபக சக்தி இருப்பதால் தான், பிறந்த பிறகும் கூட தம் தாயைக் குழந்தைகள் எளிதில் அடையாளம் கண்டு கொள்கின்றன, தாயின் குரலையும் அக்குழந்தைகளால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.

தாய்-சேய் உறவு
கருவில் உள்ள குழந்தைகளால் தங்கள் தாயின் குரலையும் நன்றாகக் கேட்க முடியும் என்பதால் தான் நம்மூரில் கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் உள்ள தங்கள் குழந்தைகளுடன் ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் உற்சாகப்படுத்துவார்கள். அப்போது தான் அந்தத் தாய்க்கும், சேய்க்கும் உள்ள உறவு கருவிலிருந்தே நீடிக்கும்.

தந்தை-குழந்தை பிணைப்பு
முடிந்தால், அந்தக் குழந்தையின் தந்தையும் அதனுடன் பேசினால், பிறந்த பிறகு அவர்களுக்கிடையிலான பிணைப்பும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

குழந்தையும்... இசையும்...
இவ்வளவு ஏன், தாய் ஒரு நல்ல இசையை கர்ப்ப காலத்தில் கேட்டகால் கூட, அந்த இசையை கருவில் உள்ள குழந்தையால் ரசிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications