Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
நல்லெண்ணெய் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்ததா...?
கர்ப்ப காலம் மிகுந்த மகிழ்ச்சியும் நல்ல அனுபவத்தையும் தரக்கூடியதாக உள்ளது. இதுவே உங்கள் வாழ்நாட்களில் ஒரு சிறந்த நாட்களாகும். வெகுசீக்கிரம் தாயாக போகும் நீங்கள் தற்போது உங்களுக்காக மட்டுமல்லாமல் இரு உயிர்களுக்காக வாழும் காலம் இது. எதை செய்தாலும் சாப்பிட்டாலும் இருவருக்கும் பொருந்தும் உணவாக தான் சாப்பிட வேண்டும் என்பதை நாம் மறுக்க முடியாது.
எள்ளால் செய்யப்படும் எண்ணெய் மிகுந்த விவாதத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது இரும்புச்சத்து, வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள இப்பொருளில் கர்ப்பிணிகளுக்கு தேவையான நிறைய பொருட்கள் இருக்கின்றன. ஆனால் இதை உண்பதன் மூலம் கரு கலைந்து விடுதல் மற்றும் இதர பிரச்சனைகள் கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகின்றது என்ற தவல்களும் உண்டு. இதை எல்லாம் தவிர்த்து நாம் யோசிக்கும் போது எந்த வித ஒவ்வாமை இருப்பவர்களும் அல்லது குறை பிரசவத்தை அனுபவித்தவர்களும் இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
நல்லெண்ணெயின் செயல்கள் கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியத்தை சார்ந்தே வெளிப்படும். அது மட்டுமல்லாமல் கர்ப்பிணிகள் அதை உண்ணும் அளவை சார்ந்தும் அமைகின்றது. கர்ப்பிணி பெண்களுக்கு நல்லெண்ணெய் உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்ற சந்தேகத்தை தான் இந்த பகுதியில் தீர்க்க முற்படுகின்றோம்.

கரு கலைதல்
இந்தியாவின் ஒரு பகுதியில் நல்லெண்ணெயை கொஞ்சம் சர்க்கரை பாகுடன் சேர்த்துக் கொடுத்து கருவை கலைக்க முற்படுகின்றனர். இதனால் உங்களது பாட்டியிடம் இதை சாப்பிடலாமா என்று கேட்டால் அவர்கள் நிச்சயம் வேண்டாம் என்று தான் கூறுவார்கள். மிக முக்கியமாக கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு வேண்டாம் என்று தடை செய்வார்கள்.

ஒவ்வாமை
சல்ஃபர் மற்றும் பாலி-அன்-சாச்சுரேட்டட் கொழுப்பை உடைய இந்த எண்ணெய் ஒவ்வாமையை ஏற்படுத்த வல்லது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு அவர்களுது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது, அவர்கள் இதை சாப்பிடுவது நல்லது கிடையாது. ஆகையால் ஒரு வேளை உங்களுக்கு ஒவ்வாமை இருந்தாலும் இதை நிச்சயம் சாப்பிடக் கூடாது.

சூட்டை கிளப்பி விடும்
ஆயுர்வேதத்தின் படி நல்லெண்ணெய் சூட்டை விளைவிக்கும் உணவாகக் கருதப்படுகின்றது. உடம்பின் வெப்பத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் குழந்தை வளர்ச்சியையும் இது பாதிக்கிறது. ஆகையால் கர்ப்ப காலங்களில் நல்லெண்ணெயை சாப்பிடுவது சரியன்று.

சுரப்பிகளை தூண்டுதல்
நல்லெண்ணெய்க்கு சுரப்பிகளை தூண்டும் சக்தி உள்ளது. இதை சாப்பிடும் போது கருப்பையை திறக்கச் செய்து குறை பிரசவத்தை அல்லது கருச்சிதைவை ஏற்படுத்துகின்றது. ஆகையால் தான் பெண்கள் கர்ப்ப காலத்தில் இதை உண்ண மறுக்கின்றனர்.

கருப்பை வாய் திறப்பு
நல்லெண்ணெய் சாப்பிட்டு சுரப்பிகளால் தூண்டப்பட்டால் பெண்களுக்கு கருப்பை வாய் திறப்பு ஏற்படலாம். பெண்கள் ஒரு வேளை கர்ப்பமாக இருந்தால் இது தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும். ஆகையால் கர்ப்பிணிகளுக்கு இது தீங்கு விளைவிக்கக் கூடிய எண்ணைய் தான்.

தேவையான சத்துக்கள்
அதிக அளவு இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவைகளை உடைய நல்லெண்ணெயில் வைட்டமின் ஏ மற்றும் பி ஆகியவை உள்ளன. இவை கர்ப்பிணி பெண்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துப் பொருட்களாக உள்ளன.

இரத்தப்போக்கு
நல்லெண்ணெய்க்கு உடம்பில் உள்ள சுரப்பிகளை கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. ஆகையால் கர்ப்ப காலத்தில் ஒரு வேளை இரத்தப்போக்கு ஏற்பட்டால் அதை நிறுத்துவதற்கு இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். ஆகையால் சரியான அளவு இந்த எண்ணெயை பயன்படுத்துவது உடலுக்கு நன்மை விளைவிக்கும்.

மலச்சிக்கல்
பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை மலச்சிக்கல். எள் எண்ணெயில் அதிக நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் இத்தகைய பிரச்சனைகளை நீக்க முடியும். ஆகையால் நல்லெண்ணெயை எடுத்துக் கொள்வது சரியே! ஆனால் தேவையான அளவை எடுத்துக் கொள்வதில் கவனமாய் இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications