Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கர்ப்பிணிகள் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, தாங்கள் உண்ணும் உணவுகளில் இருந்து, செய்யும் செயல்கள் அனைத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்ப்பிணிகள் பழங்களை அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது. குறிப்பாக ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. ஏனெனில் கர்ப்பிணிகள் ஆப்பிள் சாப்பிடும் போது, அது தாய்க்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆரோக்கியத்தை வழங்குகிறது.
மேலும் ஆய்வு ஒன்றில், கர்ப்பிணிகள் ஆப்பிள் சாப்பிட்டால், சிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஆப்பிளைத் தவிர வேறு ஒன்றும் தேவையில்லை என்று சொல்கின்றனர். அந்த அளவில் ஆப்பிள் கர்ப்பிணிகளுக்கு சிறந்ததாக உள்ளது. சரி, இப்போது கர்ப்பிணிகள் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

ஆஸ்துமாவைத் தடுக்கும்
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆப்பிள் சாப்பிட்டால், அது சிசுவிற்கு ஆஸ்துமா வருவதைத் தடுக்கும். இதற்கான சரியான காரணம் தெரியாவிட்டாலும், கர்ப்பிணிகள் இதை சாப்பிட்டால், நிச்சயம் குழந்தைக்கு ஆஸ்துமா எதிர்காலத்தில் வராமல் இருக்கும்.

இரத்த சோகையை தடுக்கும்
கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வந்தால், குறைப்பிரசவம் மற்றும் குழந்தை எடை குறைவாக பிறக்கக்கூடும். ஆப்பிளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால், குழந்தை மற்றும் தாய்க்கு வேண்டிய இரத்தணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

மூச்சுத்திணறல்
ஆஸ்துமாவின் அறிகுறிகளில் ஒன்று தான் மூச்சுத்திணறல். ஆப்பிளை கர்ப்பிணிகள் டயட்டில் சேர்த்து வந்தால், குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்பு தடுக்கப்படும்.

நச்சுக்களை வெளியேற்றும்
மெர்குரி வயிற்றில் வளரும் சிசுவிற்கு மிகவும் ஆபத்தானது. அதனால் தான் கர்ப்பிணிகளை மெர்குரி உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஆப்பிளானது உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் மெர்குரி, லெட் போன்றவற்றை வெளியேற்றிவிடும்.

செரிமானத்தை அதிகரிக்கும்
ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆகவே இது செரிமான மண்டலத்தை சீராக செயல்படுத்துவதுடன், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
கர்ப்பிணிகள் ஆப்பிளை சாப்பிட்டால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இது தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

சக்தி வாய்ந்த உணவு
ஆப்பிள் ஒரு சக்தி வாய்ந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் இருப்பதால், இது உடலின் சக்தியை உடனே அதிகரிக்கும். மேலும் இதில் கலோரிகளும் குறைவாக உள்ளதால், கர்ப்பிணிகள் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை கொள்ள வேண்டாம்.

ஆரோக்கியமான இதயம்
கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் அதிகப்படியான இரத்த அழுத்தம் மற்றும் அசிடிட்டியினால் நெஞ்செரிச்சல் ஏற்படும். ஆனால் ஆப்பிளை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அது இதயத்தின் வலிமை அதிகரிப்பதுடன், நெஞ்செரிச்சலைக் குறைக்கும்.

கால்சியம்
ஆப்பிளில் இரும்புச்சத்து மட்டுமின்றி, கால்சியமும் உள்ளது. இது குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத சத்து. எனவே பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அது குழந்தைக்கு வேண்டிய கால்சியம் சத்தைக் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications