Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
கர்ப்பத்தின் ஆறு மாத காலத்தில் ஏற்படும் மாற்றங்கள்!!!
கர்ப்பமாக இருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஏற்படுள்ள இந்த புதிய மாறுதல்களுக்காகவும் வீட்டிற்க்கு புதிதாக வரவிருக்கும் புதிய உறுப்பினருக்காகவும் நீங்கள் உற்சாகம் அடைந்துள்ளீர்களா? இயல்பாக ஏற்படும் மகிழ்ச்சி தான் இது. ஆனால் இதையும் தாண்டி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பல உள்ளது; ஆம், உங்கள் கர்ப்ப காலத்தை பற்றி முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? பொதுவாக இரண்டாம் மூன்று மாத காலம் என்பது மிகவும் முக்கியமான மற்றும் சுவாரசியமான காலமாகும். ஆறாம் மாதத்தில் உங்களுக்கு பல மாற்றங்களை காண்பிக்க தொடங்கும். உங்களுடன் சேர்த்து உங்கள் குழந்தைக்கும் பல மாற்றங்கள் ஏற்படும் காலம் இது.
இந்த நேரத்தில் உங்கள் குழந்தை போதிய வளர்ச்சியை அடைந்து, கிட்டதட்ட400 கிராம் அளவிலான எடையை கொண்டிருக்கும். இந்த நேரத்தில் தான் உங்கள் குழந்தையின் எடையும் அதிகரிக்கும். இதற்கு மேலாக, குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாக இருப்பதும் இந்நேரத்தில் தான். இது போக சுவையை உணர ஆரம்பிக்கும் நேரமாகவும் இது விளங்கும். ஏற்கனவே சொன்னதை போல நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஆறாம் மாதத்தில் பல மாற்றங்களை சந்திப்பீர்கள். உங்களின் கர்ப்பப்பை உங்களின் தொப்புளுக்கு மேல் ஏறி விடும். உங்களின் வயிறும் பெரிதாகி விடும். மேலும் இந்நேரத்தில் கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கான சோதனையையும் மேற்கொள்ள வேண்டும். அதனை கவணிக்காமல் விட்டு விட்டால் பிரசவம் ஏற்படும் வேளையில் அது பல சிக்கல்களை ஏற்படுத்தி விடும்.
கடைசியாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொன்றும் உள்ளது. அது தான் குறைப்பிரசவம். குறைப்பிரசவத்தை பற்றி ஆறாம் மாதத்தில் கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வெண்டும். ஆறாம் மாதத்தை பற்றியும் அக்காலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்களை பற்றியும் சற்று விரிவாக பார்க்கலாம் வாங்க!

கருவில் இருக்கும் குழந்தைக்கு என்னவாகும்?
நீங்கள் கருவுற்று ஆறு மாதம் முடிந்த வேளையில் தான் உங்கள் குழந்தையின் உடல் தசைகள் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும். இந்நேரத்தில் தான் சிசுவின் அசைவுகளும் அதிகமாக இருக்கும். குழந்தையின் எடை 400 கிராம் முதல் 1360 கிராம் வரை இருக்கும். அதன் உயரம் 11 முதல் 16 இன்ச் நீளம் வரை இருக்கும்.

உடலில் ஏற்படும் மாற்றங்கள்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து அக்கறையாக பார்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பமாக இருக்கும் போது ஆறாம் மாதத்தில் உங்களின் உடல் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். மலச்சிக்கல், வீக்கம், நெஞ்சு எரிச்சல், செரிமாமின்மை, தலைவலி, சுவாச கோளாறு போன்ற பல அறிகுறிகளை இந்நேரத்தில் உங்களுக்கு காட்டும்.

உங்கள் உடல்நலத்தையும் ஊட்டத்தையும் கவனியுங்கள்
கர்ப்ப காலத்தில் ஆறாம் மாதம் என்பது உடல் மாற்றங்களுக்கான காலம் மட்டும் கிடையாது. இந்நேரத்தில் தான் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் உங்களுக்கான ஊட்டச்சத்துக்கள் மீதும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நேரத்தில் உங்கள் உடலின் மீது முழு கவனமும் இருக்க வேண்டும். உங்கள் உடல் ஹார்மோன்கள் கண்ணமூச்சி ஆடும் நேரமாகவும் இது விளங்குவதால் உங்கள் எரிச்சல் தன்மை அதிகரிக்கும்.

உறவுகள்
கர்ப்பம் என்பது உங்கள் வாழ்வில் பல மாற்றங்களை உண்டாக்கும். உடல் ரீதியாக மட்டுமல்லாமல் உங்கள் உறவுகள் ரீதியாகவும் பல மாறுதல்கள் ஏற்படும். சில நேரம் பல பாதிப்புக்களையும் உண்டாக்கி விடும். உடல் ரீதியான மாற்றங்களை போலவே உணர்வு மற்றும் உறவுகள் ரீதியான மாற்றங்களையும் ஏற்படுத்தும்.

குறைப்பிரசவ அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்
குறைப்பிரசவம் மற்றும் அதன் அறிகுறிகளை பற்றி கருவுற்று ஆறாவது மாதத்தில் கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அறிகுறிகள் இதோ - பெண்ணுறுப்பில் இரத்தக்கசிவு, யோனிமடற்கழிவு, இடுப்பு பகுதியில் கூடுதல் அழுத்தம், முதுகு வலி மற்றும் வயிற்று வலி.

தவிர்க்க வேண்டிய உணவுகள்
அறை வேக்காடு இறைச்சிகள், பாஸ்சுரைஸ் செய்யப்படாத சீஸ் மற்றும் பச்சை உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நீங்கள் கருவுற்று ஆறு மாதங்கள் ஆன பின்பும் இவ்வகை உணவுகள் தவிர்க்க வேண்டும். இல்லையேல் அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். இவ்வகை உணவுகளில் ஆபத்தான பாக்டீரியா இருக்க வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆபத்தை விளைவிக்கலாம்.

சிறிய அறிவுரை
கர்ப்பம் என்பது உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமாகும். அதுவும் ஆறு மாதத்தை அடைந்திருந்தால் அது இன்னமும் முக்கியமான் தருணமாகும். அதனால் கூறும் அரிவுறையை கடைப்பிடியுங்கள். இந்நேரத்தில் நேராக இருக்க வேண்டும். நிற்கும் போது நேராக நிற்க வேண்டும். உங்களின் கீழ் முதுகு நேராக இருக்க வேண்டும். உட்காரும் போது பாதங்களை தரையில் ஊன்றி உட்காரவும். அனைத்து டிப்ஸ்களையும் கவனமாக பின்பற்றி உங்கள் கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியுடன் இருங்கள்.



Click it and Unblock the Notifications
