ஆரோக்கியமான முறையில் குழந்தையை பெற்றெடுப்பதற்கான டிப்ஸ்...

By Super

பல தம்பதியினர் கருவுறாமை மற்றும் கருச்சிதைவு போன்ற பிரச்சனைகளாலும், இன்னும் சில தம்பதியினர் குழந்தை பெறுவதற்கு தகுதியில்லை என்ற நிலைமையிலும் இருந்து வருகின்றனர். இத்தகைய கர்ப்பம் மற்றும் கருச்சிதைவு போன்ற சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பதை மற்றவர்களின் அனுபவத்தை அறிந்து கொள்வதின் மூலம் நம்பிக்கையானது நிச்சயம் புதுப்பிக்கப்படும். ஆகவே கருத்தரிப்பதில் ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சில தாய்மார்கள் சில ஆண்டுகளுக்கு முன்கூட்டியே கருத்தரிப்பதை திட்டமிடுவர். அத்தகையவர்களுக்காக, மகப்பேறு மருத்துவர் அல்லது குடும்ப திட்டமிடல் நிபுணர்கள், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தையின் சுகாதாரத்தை மேம்படுத்த பயனுள்ள வாழ்வாதார மாற்றங்களை திட்டமிட்டால், நிச்சயம் நல்ல ஆரோக்கியமான மற்றும் அழகான குழந்தையை பெற்றெடுக்கலாம் என்று கூறுகின்றனர்.

இப்போது ஆரோக்கியமான நிலையில் கர்ப்பம் தரிப்பதற்கும் மற்றும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கவும் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகயை குறிப்புக்கள் மனதில் கொண்டு, அவற்றிற்கு ஏற்றவாறு நடந்தால், ஆரோக்கியமான முறையில் குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரியான எடையைப் பின்பற்றுதல்

சரியான எடையைப் பின்பற்றுதல்

அதிக எடையுடன் இருந்தால், கர்ப்பம் தரிப்பது மட்டும் கடினமானதாக இருக்காமல், கர்ப்ப காலத்தையும் மிகவும் கடினமானதாக மாற்றிவிடும். அதிக எடை மற்றும் உடல் பருமன் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு, சாதாரண எடை உள்ள பெண்களை விட சிக்கல்கள் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருக்கிறது. எனவே கர்ப்பத்திற்கு முன் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, தினமும் போதிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவது நல்லது.

கர்ப்பத்திற்கு பிறகும் உடற்பயிற்சியை தொடர்தல்

கர்ப்பத்திற்கு பிறகும் உடற்பயிற்சியை தொடர்தல்

யோகா செய்வதில் ஆர்வம் உள்ளவரா? அப்படியெனில் கர்ப்பமான பின்பும், மருத்துவரின் ஆலோசனையின் படி ஒருசில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதனால் தாய் மற்றும் சேயின் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

கலோரிகள் உள்ள ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும்

கலோரிகள் உள்ள ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும்

கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு கூடுதலாக 300 கலோரிகள் சாப்பிட வேண்டுமென்பதால், அந்த உணவு முழுவதும் கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்து இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அதிகப்படியான கலோரிகள் கொண்ட உணவில், புரதச்சத்தும் நிறைந்ததாக இருத்தல் வேண்டும்.

உணவு சுகாதாரத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும்

உணவு சுகாதாரத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும்

கர்ப்ப காலத்தில் சாப்பிடக் கூடாத உணவு பொருட்கள் சில உள்ளன. இது பற்றி கவனமாக இருத்தல் நல்லது. ஏனென்றால் அது வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். லிஸ்டீரியோசிஸ் சுழல் நோயானது, லிஸ்டீரியா பாக்டீரியா மூலம் ஏற்படும் ஒரு தொற்று நோய் ஆகும். இது கர்ப்பம் அல்லது பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்பட வழி வகுக்கலாம். சில நேரங்களில் லிஸ்டீரியோசிஸ் நோய் காரணமாக கருச்சிதைவு கூட ஏற்படலாம்.

பால் அதிகமாக குடிக்கவும்

பால் அதிகமாக குடிக்கவும்

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தையின் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வைட்டமின் டி சத்தானது மிகவும் இன்றியமையாதது. அதிலும் தினமும் கர்ப்பிணிகளுக்கு 1000 மி.கி. சரியான கால்சியம் வேண்டும். இதற்கு பால் தவிர, வைட்டமின் டி ஆதாரங்களான தயிர் மற்றும் சீஸ், சூரிய ஒளி, கொழுப்பு மீன் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றிலும் அடங்கியுள்ளது. வைட்டமின் டி உணவுகளில் மீனை சாப்பிட நினைத்தால், குறைந்த பாதரச அளவு உள்ள மீனை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.

ஃபோலிக் அமிலம் உட்கொள்வதை உறுதி செய்யவும்

ஃபோலிக் அமிலம் உட்கொள்வதை உறுதி செய்யவும்

ஃபோலிக் அமிலம், குழந்தையின் முதுகு உருவாவதற்கும், அதன் நரம்பு குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், போனஸாக கர்ப்பிணிகளின் முடி இன்னும் நன்றாக வளரும். பொதுவாக இத்தகைய ஃபோலிக் அமிலம் கீரை, முட்டை, பருப்பு வகைகள் மற்றும் ஈரல் போன்ற உணவுகளில் காணப்படுகிறது.

மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கவும்

மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கவும்

புகைப்பிடிக்கும் மக்களை சுற்றி வேலை பார்ப்பது, இரசாயனங்கள் மற்றும் காற்று மாசுபாடு போன்றவை, தாய் மற்றும் சேய்க்கு தீங்கு விளைவிக்கும். கூடுதலாக, கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் அதிகரிக்கும் ஆபத்தும் ஏற்படலாம்.

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களை நிறுத்த வேண்டும். ஏனெனில் கர்ப்பத்திற்கு முன்போ அல்லது கர்ப்ப காலத்திலோ அல்லது பிரசவத்திற்கு பின்போ புகைப்பிடித்தால், புற்றுநோய் வரும். எனவே பிரசவத்திற்கு எதிர்ப்பார்த்து இருக்கும் பெண்கள், வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக புகைப்பிடித்தலை அறவே நிறுத்த வேண்டும். மேலும் புகையோடு கூடுதலாக, மது அருந்துதலையும் தவிர்க்க வேண்டும்.

காஃப்பைன்களை குறைக்கவும்

காஃப்பைன்களை குறைக்கவும்

காபி, டீ, கோலா போன்ற பானங்கள் கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. அதிலும் அதிகப்படியான காஃப்பைன் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டால், கருச்சிதைவு அதிகரிக்கக்கூடும். சில நேரங்களில் அதிகப்படியான காஃப்பைன், குறைந்த எடை கொண்ட குழந்தை பிறப்பதற்கான ஆபத்தையும் அதிகரிக்கும். எனவே இத்தகையவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.

அதிகமான தண்ணீர் குடிக்கவும்

அதிகமான தண்ணீர் குடிக்கவும்

புரோஜெஸ்ட்டிரோன் என்னும் ஹார்மோன் கர்ப்ப காலத்தில் வீக்கம் மற்றும் நீர் தேக்கம் ஏற்பட காரணமாகிறது. இயல்பாகவே இந்த வீக்கத்தை எதிர்க்கும் பொருட்டு, கருத்தரிக்கும் தாய்மார்கள் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். மேலும் தண்ணீரானது, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

நன்றாக தூங்க வேண்டும்

நன்றாக தூங்க வேண்டும்

தாய்மார்களின் உடலானது குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்காக அதிகப்படியான வேலையை செய்கிறது. எனவே கர்ப்பிணிகளுக்கு தூக்கமானது மிகவும் அவசியம். அதிலும் ஒவ்வொரு நாளும் இரவில் 6 மற்றும் 8 மணிநேரம் நன்கு தூங்க வேண்டும். அதுமட்டுமின்றி, இடையிடையே குட்டி தூக்கம் போடுவது கூட சோர்வை விடுவிக்க உதவும்.

மருத்துவ ஆலோசனைகளை சரியாக தொடரவும்

மருத்துவ ஆலோசனைகளை சரியாக தொடரவும்

அடிக்கடி மருத்துவ ஆலோசனைகளை கேட்பது நேரத்தை வீணடிப்பது போல தோன்றலாம். ஆனால் அந்த சிறிய சிறுநீர் பரிசோதனை மற்றும் இதய துடிப்பு பரிசோதனை, குழந்தை மற்றும் தாயின் சுகாதாரத்தை பேணிக் காப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. எப்படியெனில் ஹார்மோனில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட, தாய் மற்றும் சேய்க்கு ஆபத்தை விளைவிக்கும். அத்தகைய சிறு மாற்றத்தை இத்தகைய பரிசோதனைகளின் மூலம் முன்பே தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் செயல்பட உதவியாக இருக்கும்.

வருமுன் காப்பதை தொடர்தல்

வருமுன் காப்பதை தொடர்தல்

பல் மருத்துவ ஆலோசனை மற்றும் கண் மருத்துவ ஆலோசனை முதலியவற்றை நோய்த்தடுப்பு பராமரிப்பிற்காக கர்ப்ப காலம் முடியும் வரை கவனித்து வர வேண்டும். பெண்களுக்கு கர்ப்ப காலம் 10 மாதங்கள் தான். இந்த காலம் முழுவதும், தாயின் பராமரிப்பு குழந்தையின் பொருட்டு, எந்த காரணம் கொண்டும் நிறுத்தப்படக்கூடாது.

ஒவ்வொரு நாளும் ஊட்டச்சத்துக்களை எடுத்து கொள்ளவும்

ஒவ்வொரு நாளும் ஊட்டச்சத்துக்களை எடுத்து கொள்ளவும்

ஒவ்வொரு நாளும் உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவற்றை சரியாக எடுத்து வர வேண்டும். இதனால் அந்த சத்துக்கள் அனைத்தும் தாய்க்கு மட்டுமின்றி, குழந்தையின் சரியான வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். இத்தகைய ஊட்டச்சத்துக்கள் மாத்திரைகளாகவோ அல்லது உணவுப் பொருட்களாகவோ இருக்கலாம். ஆனால் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நேர்மறை எண்ணங்களுடன் இருக்கவும்

நேர்மறை எண்ணங்களுடன் இருக்கவும்

கர்ப்பிணிகள் எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் இருந்தால், கருவில் உள்ள குழந்தை பிறந்த பின்னர் அதன் எண்ணமும் எப்போதும் நேர்மறையாக இருக்கும். மேலும் இந்த காலத்தில் நேர்மறையான எண்ணங்களை ஊக்குவிக்கும் வகையில் பல புத்தகங்களை படிப்பது மிகவும் நல்லது.

ஓய்வெடுக்கவும்

ஓய்வெடுக்கவும்

முதல் சில மாதங்களில் உடலில் உள்ள கர்ப்ப ஹார்மோன்கள் அதிக அளவில் இருப்பதால், உடலில் சோர்வு ஏற்படும். இதனால் சிலரால் இரவில் சரியாக தூங்க முடியாது. அவ்வாறு இரவில் சரியாக தூங்க முடியவில்லையெனில், பகலுக்கு மத்தியில் ஒரு விரைவான தூக்கத்தை எடுக்க முயற்சி செய்யலாம். சில நேரங்களில் முதுகு வலி தூக்கத்தை தொந்தரவு செய்வதாக இருந்தால், முழங்காலை வளைத்து இடதுபக்கம் திரும்பி தூங்குவதற்கு முயற்சி செய்யவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion