Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
கர்ப்பமா இருக்கும் போது எடையை கொஞ்சம் கவனிங்க!!!

இதற்கு ஒரே பதில் என்னவென்று கேட்டால், கர்ப்பமாக இருக்கும் போது, அடிக்கடி உடல் எடையை பார்க்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் குண்டாவதைத் தடுக்கலாம். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது கண்டதை சாப்பிட்டு, ஒரு கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறோம். இப்போது கர்ப்பமாக இருக்கும் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை மருத்துவர்கள் கூறுவதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, நிறைய பசி எடுப்பது போல் தோன்றும். கண்ணில் பார்ப்பதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் தோன்றும். அதிலும் சில நல்ல உணவுகளான சாக்லேட், வறுத்த மற்றும் காரமான உணவுகள். ஆனால் இவை அனைத்தும் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் இவை ஆரோக்கியம் தான், சாப்பிட வேண்டும் என்று தான் தோன்றும். ஏனெனில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள். ஆகவே அவற்றை சாப்பிட்டு மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவற்றை சற்று குறைவாக வைத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது.
கர்ப்பமாகும் அனைவருக்கும், கர்ப்பத்தின் போது எவ்வளவு எடையுடன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி சிறிது தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் நிறைய பேருக்கு எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்பதை தெரியாமல், நன்கு சாப்பிட்டால் தான் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்று நன்கு சாப்பிட்டு, பிரசவத்திற்குப் பின்னர் வருத்தப்படுகின்றனர். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது, சாதாரண எடையை விட 12-14 கிலோ அதிகமாக இருக்கும்.
சிலசமயங்களில் 12 கிலோ கூட எடை இல்லாமல் இருக்கும். ஏனெனில் அது குழந்தையின் வளர்ச்சியைப் பொறுத்தது. குழந்தை வளர வளர தான் எடை அதிகரிக்கும். அதிலும் முதல் மூன்று மாதங்களில் 3 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். அதன் பிறகு வாரத்திற்கு 1/2 கிலோ முதல் 1 கிலோ வரை அதிகரிக்கும். ஆனால் இது சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஆனால் இது மாதிரி எடை கூடினால் நல்லது. ஆகவே அதற்கு ஏற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும்.
கர்ப்பம் தரித்தால், அனைத்து வீட்டு வேலைகளுக்கும் விடுமுறை போல் தான் என்று நினைத்து, எந்த வேலையையும் செய்யாமல் இருக்கின்றனர். இதுவே அவர்களின் எடை கூடுதலுக்கு பெரும் காரணமாக அமைகின்றன. கர்ப்பமாவது வீட்டு வேலையை நிறுத்துவதற்காக அல்ல. அவ்வாறு நிறுத்தினால் பின்னர் அது சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையை ஏற்படுத்திவிடும். இல்லையென்றால் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ண வழி செய்துவிடும். ஆகவே எப்போதும் ஆரோக்கியமாக இருக்க, கர்ப்பத்தின் போது சற்று உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், எப்போதுமே ஒரு நல்ல தோற்றத்தில் இருக்க முடியும். மேலும் எந்த காரணத்தைக் கொண்டும், வீட்டு வேலையை செய்வதை நிறுத்திவிட வேண்டாம். அதற்காக மிகவும் கடுமையான வேலையையும் செய்ய கூடாது.
இவ்வாறெல்லாம் இருந்தால், உடல் ஆரோக்கியமாக, நன்கு பிட்டாக இருப்பதோடு, கருவில் இருக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும்.



Click it and Unblock the Notifications
